-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எழுப்புதல் தாமதிப்பது ஏன்? - லியோனார்டு ரேவன்ஹில்

செத்த சபையினர், செத்த பிரசங்கங்கள், செத்த ஊழியர் இதுவே இன்றைய சோகக்கதை. ஐயோ, எத்தனை பயங்கரம்! -சூரியனுக்கு கீழே நான் கண்ட வினோதமான காரியம் என்னவென்றால், ஆவிக்குரிய வட்டாரங்களிலும் காணப்படும் அனலற்ற பிரசங்கங்களே அனல் என்றால் என்ன என்று எனக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் எது அனலல்ல என்று எனக்கு தெரியும். குறைந்தபட்சம், என் சொந்த ஆத்துமாவில் அனல் இல்லாத வேளையை நான் நன்கறிவேன், அனலின்றி பிரசங்கிப்பது ஜீவனை அழிக்கிறது. அனலற்ற பிரசங்கி மீது மரண வாசனை வீசுகிறது. அபிஷேக அனல் இல்லையானால் வெளிவருவது வறட்டுப் பிரசங்கமே. பிரசங்கிக்கும் நண்பா, என்னத்தைப் பெற்றுக்கொண்டாலும் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்:மேலும் படிக்க

தனது ஜெப வாழ்க்கையைவிடப் பெரியவன் எவனுமல்லை. விண்ணப்பம் செய்யாத போதகர் விளையாடுகிறார்; மன்றாடாத சபை மக்கள் மடிகின்றனர். பிரசங்க தாலந்துகளைப் பெருமையாகக் காட்டலாம்;ஆனால் ஜெப அறையில் அதற்கு வழியே இல்லை. வறுமையில் வாடும் இன்றையச் சபையின் மிகப்பெரிய வறுமை ஜெபத்தில்தான். மேலும் படிக்க

கிறிஸ்தவ வெற்றி வாழ்வுக்குத் தரிசனமும் தாகமும் இன்றியமையாத இரண்டு. கொடுமை குடியிருக்கும் குடியிருப்புகளின் நடுவில் கிறிஸ்துவின் சிலுவையை நாட்டுவதற்காக மலையென உயர்ந்து கடலெனப் பரந்திருக்கும் மனித, மாம்ச விமர்சனத்தையும், நெருப்பு மலையளவான பிசாசின் எதிர்ப்பையும் எதிர்த்து தேவ மனிதர் போராடுவது ஏன்?அவர்கள் கண்ட தரிசனம்; கொண்டது தாகம்! மேலும் படிக்க

எலியாவின் தேவன் எங்கே? என்ற கேள்விக்கு, அவர் எப்போதும் இருக்கும் சிம்மாசனத்தில்தான் இருக்கிறார் என்று நாம் பதிலளித்து, ஆனால் தேவனுடைய எலியாக்கள் எங்கே? என்று திருப்பிக் கேட்கிறோம்.எலியா நம்மைப் போல் பாடு்ள்ள மனுஷனாயிருந்தான் '‘ என்று நாமறிவோம். ஆனால், அந்தோ!நாம் அவனைப்போல் ஜெபிக்கவில்லை. மேலும் படிக்க

எழுப்புதல் தாமதிக்கிறது… ஏனெனில் சுவிசேஷ ஊழியம் மிகவும் வியாபாரமாகிவிட்டது, சுவிசேஷத்தின் தரத்தைக் குறைத்து வானொலியிலும், இசை தட்டுகளிலும், ஆலயங்களிலும் நமது பாடல்கள் வெறும் ஆட்டத்திற்கு இசைவாக இசைக்கப்படுகின்றன, கவலையீனத்தினால், பயப்படுவதினால், ஜெபத்தில் நமக்கு அவசர உணர்வு இல்லை, ஏனெனில் ,தேவனுக்குரிய மகிமையை நாம் திருடிக்கொள்ளுகிறோம். மேலும் படிக்க

“ஆர்வமில்லாத வெது வெதுப்பான மனிதர் திரளாய்க்கூடி ஊழியம் செய்வதைவிட ஒரு சில அனலான மனிதர் செய்யும் ஊழியம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது.” காலம் கடந்துவிட்டதால் இக்கூற்று சாரமிழந்து விடவில்லை. 'நல்ல அனலான பிரசங்கிகள்' நமக்கு அதிகம் தேவை. "ஐயோ!" என்று ஓலமிட்ட ஏசாயா இப்படிப்பட்ட பிரசங்கியாயிருந்தான். மேலும் படிக்க

“தேவனுடைய வேதத்தை அறிவதற்கும்,வேதத்தின் தேவனை அறிவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு” என்ற உண்மை இக்காலங்களில் என் உள்ளத்தில் அடிக்கடித் தோன்றுகிறது. கன்வென்ஷன்களில் பெரும்பாலும் பழைய காரியங்களே திருப்பி திருப்பிச் சொல்லப் படுவதை நாம் கேட்கிறோம் என்பதும், விசுவாசம் சற்றேனும் அதிகரிக்காமல் தான் கூட்டத்திலிருந்து திரும்புகிறோம் என்பதும் உண்மை அல்லவா? மேலும் படிக்க

பவுலின் தலை, சிங்கத்தின் வாய்க்குள் ஏற்கனவே பாதிசென்றாயிற்று. ஆனாலுமென்ன? அகிரிப்பாவின் முன்பு இத்துணிச்சல் நிறைந்த சீடனாகிய பவுல் சற்றும் நடுங்கவில்லை; எதையும் சொல்லாமல் விட்டுவைக்கவுமில்லை! அவன் எங்கும் எப்பொழுதும் கோழைத்தன பிரசங்கியாக இருந்ததேயில்லை. இப்போது எத்தனை பிரசங்கிகள் பெரிய அளவில் சுவிசேஷப் பணியைச் செய்கிறார்கள் என்று சொல்லுங்கள். சென்ற ஆண்டு சுவிசேஷப் பணியின் மூலமாய் இரட்சிக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுங்கள். மேலும் படிக்க

ஜெபவீரர்கள் இரும்பு மனிதராய் இருக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் சாத்தானின் ராஜ்யத்தைத் தாக்க முயற்சிக்குமுன் தாங்களே அவனால் தாக்கப்படுவர். தவறு செய்வதினால் பணியைக்கூட தவறவிடலாம்; ஆனால் அசட்டையினால் ஜெபத்தைத் தவறவிடவே கூடாது. மேலும் படிக்க

இன்று போல் என்றுமே மனிதர் பிசாசுக்கு இவ்வளவு மலிவாகத் தங்களை விலை பேசியதில்லை. உம்மைப் பற்றிக் கொள்ளும்படிக்கு விழித்துக் கொள்ளுகிறவன் இல்லை. (ஏசாயா 64:7) இவர்களை ஆட்டிப்படைக்கும் வசியம் எது? இவர்கள் அந்த வசியத்திற்கு ஆளாகியது எப்படி? இவர்களுடைய மூளையைச் சலவை செய்தது யார்? இவர்கள் விழித்துக் கொள்ளாதது ஏன்? மேலும் படிக்க

தலையின்மேல் பட்டயம் ஊசலாடிக் கொண்டிருக்கையில், விசுவாசிகளாகிய நாம், பதட்டமின்றி, பாசமின்றி, ஏனோதானோவென்று, சொகுசாய், சோம்பேறிகளாய்க் காலம் கடத்தி வருகிறோமே!- இதுமுறையா? மேலும் படிக்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்