-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

விழித்துக் கொள்ளாதது ஏன்? - எழுப்புதல் தாமதிப்பது ஏன்? - லியோனார்டு ரேவன்ஹில்

 

"கட்டளையை  மீறப்பண்ணி,

கர்த்தரை   மறுக்கச்செய்து,

ஆத்துமாவை    அழித்திடும்

அக்கிரம    வெள்ளம்

இதுவரை  இயலாவண்ணம்

இன்று  மனுக்குலத்தை

அடித்துச்   செல்கிறது."


"இன்று   போல்   என்றுமே   மனிதர்    பிசாசுக்கு   இவ்வவு   மலிவாகத்   தங்களை விலை பேசியதில்லை'‘ உம்மைப்   பற்றிக்   கொள்ளும்படிக்கு   விழித்துக்  கொள்ளுகிறவன் இல்லை. (ஏசாயா 64:7) இவர்களை  ஆட்டிப்படைக்கும்    வசியம்   எது?   இவர்கள்  அந்த   வசியத்திற்கு  ஆளாகியது   எப்படி?   இவர்களுடைய  மூளையைச்    சலவை   செய்தது   யார்?    இவர்கள்   விழித்துக்  கொள்ளாதது   ஏன்?

                பிசாசின்   நடத்துதலால்   உலகம்  மனிதனுக்கு   ஒரு  நவீன   ஊசிபோட்டுள்ளது  கடைசி  நாட்களின்   அடையாளங்களில்   ஒன்று  மனிதர்கள்  சுகபோகப்  பிரியராயிருப்பார்கள்" என்பதாகும் (இவைகள்   பன்மையிலிருப்பதைக்   கவனியுங்கள்).

            இச்சையின்   சிற்றின்பத்திற்காக    வெறிபிடித்து   அலையும்  வெறியர்   கூட்டத்தால்  வழிந்து   கிடக்கிறது  சாலைகளெல்லாம். தீமை     அத்தனை  தித்திப்பாயிருக்கையில்    பாவத்தில்  ஊறி, காமத்தில்   கலந்துவிட்ட  வாலிபர்  நல்லதைக்    குறித்து   நினைக்கவும்   நேரமேது?

தங்கள்  'இன்பஉலகில் தாங்கள்   செலவிடும்   ஒரு  மணி  நேரம்,    வேத   சாஸ்த்திரிகளின்  கற்பனை  உலகாகிய  நித்தியத்திற்கு ஈடு  கொடுக்கும்   என்பது    அவர்கள்   வாதம்.  

துன்மார்க்கத்தில்    புதைந்துசூதாட்டத்தில்   சீர்கெட்டு,   மதுவெறியில்  மாண்டிடும்  மனிதரை   வயது    வந்தவர்களென்றாலும்,   புத்தி வளராதவர்கள்   என்றுதான்  சொல்லவேண்டும்உயிரோட்டமுள்ளவெற்றிகரமான   எதையாவது   இன்றைய  சபை  தருமானால், பகலைப்    பந்தாட்டத்திலும்இரவை   இழிவுச்   செயலிலும்  கழிக்கும்   இவர்களை   இச்சைக்        கூடங்களிலிருந்து   இழுத்துக்  கொள்ளலாமே!

சுதந்திர    சூழலில்   தேவனுக்குச்    செவிக்கொடுக்க  மறுத்தால்தமது  நாளையும்   தமது  வழியையும்  தமது   குமாரனையும்  நினைக்கும்படி  கம்யூனிச   அடிமைத்தனத்துக்குள்   நம்மை   னுப்பிவைக்க   அவசியப்படுமோசரீரத்தில்  விலங்கு,   ஆவியிலோ  விடுதலைஆத்துமாவில்  கட்டு  ரீரத்திலோ  கட்டவிழ்ப்புஇவ்விரண்டிலும்    முதல்   வகையில்  மரிப்பதே   மேல்.

அறிவியலில்   மயங்கிடும்   அறிஞர்    பலர்   கிறிஸ்தவத்தில்   மருளுவது  வியப்பிற்குரியது. விசுவாசத்தைவிட்ட   இவர்களுக்குப்   படக்காட்சியும்   பந்தாட்டமும்தான்   பொழுதுபோக்கு. ''ஆயிரம் ஆண்டு  ஒரு  நாளைப்போல் ''என்ற   பின்னணியில்   பார்க்குங்கால்   மாட்டு   வண்டியிலிருந்து   மோட்டார்   வண்டிக்கு, விமானத்திலிருந்து   விண்வெளிக்   கப்பலுக்கும்  நம்மைக்  கொண்டுச்  செல்ல  அறிவியலுக்குச்   சில   வினாடிகளே   ஆகியிருக்கிறது .

எண்ணெய்    எடுப்பதற்குத்   தரையிலிருந்து    இரண்டு    மைல்   ஆழம்   தோண்டியபின்  அங்கு    ஒன்றையும்   காணாவிடில்    கடலுக்குள்ளும்   அவ்விதம்    தோண்டுவதற்குச்   சாதனங்களைக்     கண்டு   பிடித்துள்ள  விஞ்ஞானத்தின்   விந்தையை  வியந்து   கொண்டாலும்  அதே  அறிவியல்  நச்சுத்தன்மையுடன்   நாசவேலைகளையும்   செய்துள்ளதென்பதை   மறுப்பதற்கில்லை-ஏன்?   மூளையைக்   கெடுக்கும்   முறைகளையும்கூட    அது    கண்டுபிடித்துள்ளது .

“மூளைக்கெடுப்பு" என்பது  மனிதாபிமானமற்ற,   பிசாசினால்  உண்டான,   ஆனால் அறிவியல் கண்டறிந்த   ஒர்     அறுவைச்    சிகிச்சையாகும் .இக்கோண்த்தில்   அறிவியலைக்     கண்ணோக்குகையில்    நிதானத்துடன்    சற்று  கற்பனை    செய்து   பாருங்கள்!       பல்லாண்டுகளாக    இந்த  மூளைக்கெடுப்பு     அறுவை    சிகிச்சை    சர்வாதிகாரிகளின்  சங்காராயுதமாக   இருந்து   வந்துள்ளதுதன்    சொந்த  மக்களில்    பல்லாயிரமானோர் மேல்    ஹிட்லர்   இதைப்   பயன்படுத்தினான்.   ஐந்து    நிமிடமே    பிடிக்கும்   இந்த     அறுவை   சிகிச்சையின்    மூலம்  தன்   அடிமைகளில்   ஒரு   கோடிக்கும்  அதிகமானோரை  நடைப்பிணங்களாக்கிவிட்டான்   என்று   ஸ்டாலினைக்    குறித்துச்    சொல்லப்படுகிறதுஇதற்குப்   பலியானவர்  மூண்டும்     குணமாகாத    பைத்தியங்களாகி    விடுகின்றனர்.

அறுவை   சிகிச்சை    மேசையின்மீது   அவன்   கிடத்தப்பட்டு   இறுகக்கட்டப்படுகிறான்அவனது  நெற்றிப்   பொட்டுகளின்  மீது மின்  கம்பிகள்    பொருத்தப்பட்டுமூளையினுள்    மின்   அலைகள்   செலுத்தப்படுகின்றனஅது    மூளையைப்   பலமாய்த்தாக்கி    அதிர்ச்சியுடன்   அவனை    மயக்கமடையச்   செய்கிறதுபின்பு   வைத்தியர்  தனது  கூரிய   ஆயுதத்தை    அந்த   மனிதனுடைய    கண்ணிமைகளுக்குக்   கீழே  வைத்துஅதைக்   கண்   வழியாக  அடித்து  முளையின்  முன்  பகுதியை   மற்றப்  பகுதியினின்று   துண்டித்து  விடுகிறார் விளைவு?-- உணர்சியற்ற  நடைப்பிணம்! (இதை   விட சரியான   வார்த்தை   கிடைக்கவில்லை) இவ்விதம்   90   நிமிடங்களில் 15  நடைப்பிணங்களை   விஞ்ஞானம்   உண்டாக்க   முடியும்.   இதிலும்   அதிர்ச்சியூட்டும்   செய்தியை   ஜார்ஜ் , கோனிட்ஸ்   என்பவர்  தனது  'லிபர்ட்டி  லீக்  நியூஸ்' என்ற  பத்திரிக்கையில்,   அமெரிக்காவில்  ஏறத்தாழ   இலட்சம்  நடைப்பிணங்கள்   உள்ளனர்    என்று   கூறி  நமது   உள்ளத்தை   உலுக்குகிறார்.

அறிஞர்கள்   இவ்விதம்  மக்களை  மாக்களாக்குவதைக்  காணும்   போது  விஞ்ஞானத்திற்கு  மனுக்குலம்   மிதமிஞ்சிய  மதிப்பளித்திட்டதோவென     வினவும்    நேரத்திற்கும்   வந்துவிட்டோம்.

இந்த     நடைப்பிணங்களை  நினைவிலிருத்தி,   புகழ் பெற்ற  பெர்ட்ரண்ட்   ரஸல்   எழுதியவற்றைச்    சிந்தியுங்கள்  (தர்க்க  சாஸ்த்திரத்தின்  தத்துவங்கள்   என்ற   அவரது    நூல்  அவரைத்     தற்கால    தத்துவ  ஞானிகளின்   முடிசூடா   மன்னனாக்கிவிட்டது). ''மனிதனின்  விமோசனத்துக்கு    வழி   ஒன்றேமகிழ்ச்சிக்குத்  தன்  மனதைத்திறந்து,    அச்சத்தை   அன்றுள்ள   அந்தகாரத்துக்குள்   தள்ளிஅறவே   மறந்து   விட   வேண்டும் .   பிறகு   தனது   கண்களை   உயர்த்திநான்   ஒரு  பரிதாபப்  பாவியேயல்ல. நீண்ட   அனுபவத்தினூடே,   கடினப்  பாதைகளைக்  கடந்து,   சுதந்திரப்   பறவையாய்   வாழ்வதெப்படி,    இன்பத்தில்  திளைப்பதெப்படிதன்  மனம்போலபிறர்போல்   வாழ்வதெப்படி   என்பதையெல்லாம்   கற்றவன்   என்று  தன்னையே   தட்டிக்  கொடுத்திட   வேண்டும் ''  ன்றும்  எழுதியுள்ளார் .

மனமாரப்   பிறரை   ஏமாற்றும்   பணிக்குத்   தன்னையே   தத்தம்   செய்துவிட்ட   இப்போலிச்  சமாதான   தீர்க்கனின்  ஏய்ப்பு   வேலை    புரியாத    புதிரா?   இதே   ரஸல்    கிறிஸ்துவின்   மானுடவதாரத்தை    விளக்கக்கூடாதவர்ஆனால்    பலியான  ஹங்கேரி    நாட்டவரின் இனத்தார்    இவருடைய    செய்தியை  நம்பிக்கையின்   நற்செய்தியாக  ஏற்றுக்கொள்வாரோ?

,   எரியும்   இருதயங்கள்,    பொரியும்   உதடுகள், சொரியும் கண்கள்-- இவைகள் எத்தனையாய்த் தேவை இன்று! நாம் நினைத்துக்  கொள்வதில்  பத்திலொரு பங்கு ஆவிக்குரியவர்களாய் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா ?    ஞாயிற்றுக்கிழமை தோறும்  நமது வீதிகளில்  விசுவாசிகள்: இரட்டுடுத்தி   தலைமேல் சாம்பலை வாரிப் போட்டுக் கொண்டு இன்றையச்    சபையின் கனியற்ற, கனிவற்ற, கனலற்ற நிலைகண்டு நடுங்கி நாணியவர்களாய்  சீயோனை நோக்கி நடைபோடுவார்கள் எருசலேமில்   ஒப்பாரிச்    சுவரண்டை  ஓலமிடும்  உண்மை   யூதரைப்  போல்,   நாமும்  ஜெப  அறையில்  கதறிக்  கண்ணீர்  விட்டிருப் போமானால்இன்று   சுத்திகரிக்கும்  சூறாவளிப்  புயலென  வீசும்   எழுப்புதலில்   திளைத்துப்போயிருப்போம் அப்போஸ்தல வழிமுறைக்குத்  திரும்பி   அப்போஸ்தல வல்லமைக்கு கர்த்தரிடம்  காத்திருப்போமானால்அப்போஸ்தலரின்      வல்ல செயல்களுக்கு வந்து விட்டிருப்போம்எல்லாரும் பரவசமாயிருக்கிறார்களா?” என்பதே.

இன்று நாம்  திரும்பத்  திரும்பக்  கேட்கும் கேள்வி. ஆனால் நம்மைக்குறித்த  தேவ நோக்கம் பரவசமல்ல, பரிசுத்தமே! பவுல் தீத்துவுக்கு  எழுதுகையில்  வயோதிபரையும்  வாலிபரையும், “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்" என்று  கூறினபோதிலும் இன்று தெளிந்த புத்தியல்ல, மெலிந்த புத்திதான் மலிந்து கிடக்கிறது.

அற்புதச்  சிலுவையின் அதிவுன்னதத்தைக் காண  மீண்டுமொரு முறை பணிவோடும், பயத்தோடும் முழங்காலிலேயே  கல்வாரி மாமலையின்  மீது  நாம் ஏறவேண்டியது அவசியம். சபை முதலில் மனந்திரும்பவேண்டும். பின்பு உலகம் உருளும். சபை கதறினால் சங்கடமடைந்த  பாவிகள் கதறலோடு அலையலையாய் அணிவகுப்பர். சபை திரும்பினால் உலகம் திருந்தும்! சபை அழுதால், ஆலயத்துக்குள் அழுதுகொண்டு  அலையலையாய்ப்  பாவிகள் வருவர்.

ஹார்வார்டு பல்கலைக் கழக மருத்துவப் பேராசிரியரான வில்லியம்  ஜேம்ஸ் தமது  புகழேணியின்  உச்சக் கட்டத்திலிருக்கையில்  மர்ம  நோயினால்  தாக்கப்பட்டார் ---  அவரது   நரம்புகள்  நலிந்தன. தூக்கமின்மை, தளர்ச்சி ...  குணந்தரும்  சிகிச்சையொன்றுமில்லை, ஐரோப்பாவிற்கு  விரைந்தார்பெர்லின்  மாநகரில்  பயன்கிட்டுமாநம்பிக்கையில்லை. வியன்னாவுக்குச்  சென்றால் .... அதே நிலை. பாரீஸ்அங்கும்  பரிகாரமில்லை. அங்கலாய்பு அதிகரித்து  மனமுறிந்ததுலண்டன் எட்டும் தூரத்தில்தான் --- ஆனால்   கூப்பிடுதலுக்குப்  பதில்  எதிரொலிதான். ஸ்காட்லாந்தில்  இத்துறை  நிபுணர் பலர்  இருந்தனர். ஆனால் இந்தக்கீலேயாத்திலும்  பிசின் தைலம்  இல்லை. தற்கொலை எண்ணம்  சிந்தையில்  நடனமாட  அமெரிக்கா வந்து சேர்ந்தார். இறுதியில்  ஜெப  மனிதரும் , தெய்வீக  சுகத்தில் விசுவாச வீர்ருமாகிய  ஒரு தேவ  மனிதரைக்  குறித்துச்  சொல்லப்பட்டது. புகழ்பெற்ற தத்துவ ஞானியும், மனோதத்துவ அறிஞருமான வில்லியம் ஜேம்ஸுக்கு தெய்வீக சுகமென்றால் எட்டிக்காய்க் கசப்புத் தான். எடுத்தடி வைக்க எடக்குப் பண்ணிற்று அவரது மதிநுட்பமும், திடச்சிந்தையும். என்ன செய்ய? வேறுவழியில்லையா. ஜேம்ஸ் சென்றார். எழுத்தறிவற்ற அந்த ஏழை மனிதர், அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்: உள்ளதிர்வூட்டும் புத்திக்  கெட்டா ஒரு புதிய சக்தி என்னில் பாய்ந்து செல்வதைக் கண்டேன். உடல் புல்லரித்தது. உள்ளத்தில் சமாதானம் உண்டாயிற்று. நான் குணமடைந்து விட்டதை நன்றாக அறிந்து கொண்டேன்!

"இப்பைத்தியக்கார உலகின்

வியாதிகளைக் குணமாக்க

அற்புதச்  சிலுவையை விட

அறிவிலும், அரசியலும்

நமது பிடிவாத புத்திக்கும்,

திமிர்வாத  மூளைக்கும்

மிகக் கவர்ச்சிகரமாகக் காணப்படுகின்றன."

இந்த உலகம் உருப்பட ஒரே வழி, நாமும் வில்லியம் ஜேம்ஸைப் போல நம்மைத் தாழ்த்தி மீண்டும் இயேசுவின் சிலுவையண்டைக்கும், அதின் ஜீவ நதியண்டைக்கும் விரைந்து செல்வதே!       

எழுப்புதல்  தாமதிப்பது ஏன்?

                                                                                                                      லியோனார்டு ரேவன்ஹில்

கருத்துரையிடுக

0 கருத்துகள்