பவுலின் தலை, சிங்கத்தின் வாய்க்குள் ஏற்கனவே பாதிசென்றாயிற்று. ஆனாலுமென்ன? அகிரிப்பாவின் முன்பு இத்துணிச்சல் நிறைந்த சீடனாகிய பவுல் சற்றும் நடுங்கவில்லை; எதையும் சொல்லாமல் விட்டுவைக்கவுமில்லை! அவன் எங்கும் எப்பொழுதும் கோழைத்தன பிரசங்கியாக இருந்ததேயில்லை. துணிச்சல் ஒரு மனிதனை ஒரு வகையில் தைரியமாக இருக்கச்செய்யும்; யாராயிருந்தாலும் அவர்களுடைய கருத்துக்களைத் துச்சமாக எண்ணும் மனத்துணிச்சல் மனிதனை இன்னொரு வகையில் தைரியமாயிருக்கச் செய்யும். இவ்விருவகைத் துணிச்சல்களும் சேர்ந்து பவுலை ரோமானியச் “சிங்கக் கெபியில் ஒரு 'கிறிஸ்தவத் தானியேலாக” மாற்றி விட்டன. மனிதர் தீர்க்கதரிசியின் உடலை அழிக்க முயலலாம்; ஆனால் அவர்கள் ஒரு போதும் தீர்க்கதரிசியை அழிக்கமுடியாது.
இப்போது எத்தனை பிரசங்கிகள் பெரிய அளவில் சுவிசேஷப் பணியைச் செய்கிறார்கள் என்று சொல்லுங்கள். சென்ற ஆண்டு சுவிசேஷப் பணியின் மூலமாய் இரட்சிக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுங்கள். இத்தனை புள்ளி விவரங்களையும் நீங்கள் என்னிடம் சொன்ன பின்பு, “நரகத்தை நோக்கி விரைகின்ற, கிறிஸ்துவைப் புறக்கணிக்கின்ற, நியாயத்தீர்ப்பை நோக்கி வேகமாய்ச் செல்லுகின்ற இத்தலைமுறையின்மீது இன்னும் எழுப்புதலின் சந்திரன் உதயமாகவில்லை” என்று நான் புயல் காற்றைப்போல உரக்கக் கூறுவேன். சீயோனில் நிர்விசாரமாய் “இருக்கிறவர்கள்” என்ற நிலையையும் கடந்து நாம் அங்கு ''தூங்கிவிட்டோம்'', ஆலயத் தூண்கள் தலையணைகளாக மாறிவிட்டன. நான் துவக்கத்தில் சொன்னதைப்போல், அகரிப்பா முன்பாகப் பவுல் நின்றபோது, அவனுடைய தலையில் பாதி சிங்கத்தின் வாய்க்குள் இருந்தது. தனக்கு மரணம் மிக அருகிலேயே உள்ளது என்பதை நன்குணர்ந்தவனாக, நடத்தை கெட்ட அந்த அகிரிப்பாவின் மீது 'அனல் காற்றைத் திருப்பிவிட்டு, ''நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங் குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய்'' என்று அகிரிப்பாவைத் தடுமாறிப் பேசச் செய்கிறான். அப்போது அங்கு வெறும் விருந்தாளியாகவே வந்திருந்த பெஸ்து, பண்பாட்டையும் மறந்தவனாய், பவுலைப் பார்த்து, ''பவுலே, நீ பிதற்றுகிறாய். அதிகக் கல்வி உனக்குப் பைத்தியமுண்டாக்குகிறது'' என்று கூறுகிறான். பவுல் உடனே, ''கனம் பொருந்திய பெஸ்துவே, நான் பைத்தியக்காரனல்ல'' எனப் பதிலளிக்கிறான். (பவுல் பேசும் தோரணையைப் பார்த்தால் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பாவிகளே பைத்தியக்காரர்கள் என்று கூறுவது போலிருக்கிறது!).
ஆனால் இன்று நாம் நித்தியமான சுவிஷேத்தைப் பிரசிங்கிக்கும்போது, யாராகிலும் நம்மைப் பைத்தியக்காரரென்று எண்ணுகிறார்களா? அதற்கு மாறாக, நாம் காணிக்கைகளிலும், புகழ்ச்சியிலும், திரள் கூட்டத்திலுல் மட்டுமே கவனம் செலுத்தி, அவைகளே போதும் என்று கருதுகிறோம் அல்லவா?
பூமியின் உயர்விடங்களை அரசாளுவோர் பலர் இரத்தவெறிபிடித்தவர்களாய் இருக்கிறார்கள். கிரீடம் அணிந்திருக்கும் தலையில் துன்பமும் தங்கியிருக்கிறது. ''தேவரீர், பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்?'' என்று, கொல்லப்பட்டவர்கள் மகா சத்தமிட்டுக் கூப்பிடுகிறார்கள். ''எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கும் காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்ய வேண்டும். தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? என்று ''ஜீவனுள்ளோர்'‘ (அதாவது கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கிறவர்கள்) எதிரொலிக்கிறார்கள். கிருபை இல்லாத, பழிவாங்குதல் இன்றியமையாத, காலம் நெருங்கிவிட்டது.
யாருக்கு அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களிடமிருந்து அதிகம் கேட்கப்படும். கோடிக்கணக்கானோர் தங்களுக்கு வெளிச்சமில்லாததால் இருளில் நடக்கிறார்கள். சோதோமையொத்த பாவத்திற்கு சோதோமை யொத்த நியாத்தீர்ப்பே பொருத்தமானது. “இதோ கர்வமும் ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்” என்று எசேக்கியேல் 16:49-ல் சொல்லப்பட்டுள்ளது. நியாயத்தீர்ப்பின் நாளுக்கு நமக்கு தீர்க்கதரிசிகள் தேவனுடைய பரிசுத்த மனிதர் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டுப் பேசுவதற்குத் தேவைப்படுகிறார்கள். பிரசங்கிகளை ஏவுவதை ஆவியானவர் நிறுத்திவிட்டாரானால், பிரசிங்கிப்பதையும் நாம் நிறுத்திவிடுவதே மேல். ஆனால், அவர் இன்னமும் ஏவிக்கொண்டுதானிருக்கிறார்.
கிதியோனோ அல்லது யாரும் தங்களுடைய தரிசனங்களால் பிரச்சனைக்கு உள்ளாவதில்லை. பாதிக்கப்பட்டோரின் எதிர்ச்செயல்களே உக்கிரத்தை தேவமனிதர் மீது கொண்டுவருகின்றன. ஒரு கிதியோன் நள்ளிரவில் நழுவிச்சென்று பாகாலின் தோப்புகளை வெட்டிச் சாய்க்கட்டும்.. அப்பொழுது நரகம் தனது கோபத்தழலைக் குமுறிக் கொட்டும். யோவான் ஸ்நானன் ஆசாரியர்களைப் பார்த்து, 'விரியன் பாம்புக்குட்டிகளே' என அழைக்கட்டும்; ஏரோதின் விபச்சாரத்தைச் சுட்டிக் காட்டட்டும்;
அவன் தனக்குத் தானே மரணக்கட்டளையைக் கையெழுத்திட்டுக்கொள்கிறான் என்பதே அதற்குப் பொருள்!
வெறும் கையாய் பிறந்தோம்
வெறும் கையோடே செல்வோம்
இது உலக மனிதனின் பேச்சு
வெறும் கையாய் பிறந்தோம்
பெரும் ஆத்துமாக்களோடு இயேசுவிடம் செல்வோம்
இது கிறிஸ்தவர்களின் உயிர்மூச்சு
துர் உபதேசங்கள் மீதுள்ள ஆர்வம் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. நியாயத்தீர்ப்பின் நாளுக்கு நிச்சயமாக நமக்குத் தீர்க்கதரிசிகள் தேவை. 1958 ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் நாள் வெளிவந்த ''News week'‘ என்ற பத்திரிக்கையில் துர் உபதேசக்காரராகிய 'வாட்ச் டவர்' நிறுவனத்தின் தலைவர் யான்க்கீ விளையாட்டு அரங்கத்தில் அவர்களுடைய சுமார் 1,50,000 சாட்சிகளை ஒரு வார மாநாட்டிற்காகக் கூட்டப் போவதாக அறிக்கைவிட்டிருந்தார். இது அவர்களின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த மாநாட்டு முடிவில் அவர்களில் சுமார் 4,600 பேர் போதகர்களாக பட்டம் கொடுக்கப்படுபவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் போதகர்களுக்குச் சம்பளம் கிடையாது இவர்கள் ஒருவனைக் கிறிஸ்துவை மறுதலிக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட, வேதத்தைப் புரட்டும், தங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிவார்கள்; அவன் தங்கள் மார்க்கத்தானான போதோ அவனைத் தங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குவார்கள்.
கிரமமான ஆனால் முடமான இன்றையக் கிறிஸ்தவம் இப்பூமிக்கு இன்னும் அதிக காலம் பாரமாய் இருக்கமுடியுமோ? நம்மைப் பாதிக்கும் பயங்கர வியாதிக்கு நாம் சரியான சிகிச்சை கண்டுபிடிக்கவில்லை என்று சாங்ஸ்டர் சொல்வது சரியோ? மனத்திரும்புதல், மறுபிறப்பு, பரிசுத்தமாகுதல் ஆகியவற்றை அறிவிப்பதில் நாம் ஆதிமுறையை அலட்சியப்படுத்திவிட்டோம் என்று சொல்வது அதிகப் பொருத்தமாக இருக்காதோ? தேவனால் பரலோகத்திலிருந்து எழுப்புதல் அனுப்பப்படும்போது அது பல்லாண்டுகளாக தேவனை நிந்திக்கும் நவீனக் கொள்கையினர் கட்டியெழுப்பியுள்ளவற்றை நொடிப்பொழுதில் அழித்துச் சுக்குநூறாக்கிவிடும். வேத சாஸ்திர நிபுணர்களெனப்படும் சிலர் வேதத்திற்கு தங்கள் மூளை அறிவின்படி வியாக்கியானம் கொடுத்துள்ளார்கள். இது மணல்மீது கட்டப்பட்ட வீட்டைப் போன்றது. பரிசுத்த ஆவியானவர் புயலைப்போல வீசும்போது இவ்வித வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு தரைமட்டமாவதை இந்த வியாக்கியானிகள் தங்கள் சொந்தக் கண்களாலேயே காணப்போகிறார்கள். மனிதனின் தலை நோய்கொண்டும், இருதயம் பலமிழந்தும் காணப்படுகிறது. மனிதன் தீட்டும் திட்டங்களின் வரிசையின் கடைக்கோடியை நாம் அடைந்துவிட்டோம். எல்லாம் அழிவுக்குக்காத்து நிற்கின்றன. நவீனக் கொள்கையினர் தாங்கள் பெரிய அறிவாளிகளெனக் கருதி இயேசுவின் இரத்தத்தை அசட்டை செய்கின்றனர். கனத்த தலையும் ஆனால் குறுகிய இதயமுங்கொண்ட அவர்கள் தங்கள் முட்டாள்தனத்தைச் சீக்கிரம் காணுவார்கள்.
கர்த்தரின் புயமே, எழுந்திரு! உன் வல்லமையைத் தரித்துக்கொள்! இதுவே எழுப்புதலுக்குக் காலம், இதுவே நியாயத்தீர்ப்பின் நேரம் . தேவனுடைய மனிதர் எங்கே? தீர்க்கதரிசிகள் ' அற்புதங்ளைச்' செய்யலாம் ; ஆனால் அவர்களிடம், அவசியம் ஒரு 'செய்தி' இருக்கவேண்டும் .
யோவான் ஸ்நானன் |
“பாவம்! தடுமாற்றமடையும் மக்கள், கர்த்தரிடத்திலிருந்து எங்களுக்கு ஏதேனும் வார்த்தை உண்டா?” எனக் கேட்கின்றனர். தேவனைத் தவிர வேறு யார் அவர்களது தேவைக்கேற்ற வார்த்தைகளை அருளிச் செய்யமுடியும்? தேவன் பொய்யுரையாதவரானபடியால் யோவேல் 2-ஆம் அத்தியாயமும் மல்கியா 3-ஆம் அத்தியாயமும் நிறைவேறியே தீரும். ''நீங்கள் தேடுகிற ஆண்டவர் தம்முடைய ஆலயத்திற்குத் தீவிரமாய் (அல்லது திடீரென்று) வருவார். இப்போது வறட்சி அடுத்த வினாடியில் விடுதலை! யோவான் ஸ்நானன் வருவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்புவரை அவன் அங்கு வருவது யாருக்கும் தெரியாது. அப்போது எப்படியிருந்ததோ அப்படியே இனியுமிருக்கும் என்று நான் உறுதியாயிருக்கிறேன். தேவன் யாரோ ஒரு மனிதனைப் பற்றிப்பிடிப்பார். இப்போது ஒளிப்பிடத்தில் மறைந்திருக்கும் மனிதர் அன்று ஆவியானவரின் வல்லமையினால் மக்கள் செவிகொடுக்கும் படி, அனலான சத்தியங்களைப் பேசத் துவங்குவார்கள். அவர்களுடைய வார்த்தைகள் உருகி நிற்கும் உலோகம் போலிருக்கும். இவ்வித நாளுக்காக நீடிய பொறுமையுடன் தேவன் காத்து நிற்கிறார்.
''அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்?'' மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டில் வடங்களால் பாவத்தையும் இன்று இழுக்கும் மனிதர் ஆவியானவர் அசைவாடும் போது காற்றின் முன்பு தானியக்கதிர் வளைவது போல் வளைவர். பத்து வாதைகளினால் வாட்டப்பட்டு பார்வோன் முடிவில் பலமிழந்தான்; தீர்க்கதரிசி மோசேயின் தலைமையில் இஸ்ரவேலர் வெற்றி பெற்றனர். இன்று எகிப்துக்கு மட்டுமல்ல, உலக ழுழுவதுக்கும் தேவையாயிருப்பதால், அந்தப் பத்து வாதைகளைக் காட்டிலும் கொடூரமான புதிய பத்து வாதைகள் இன்று உள்ளன. இருப்பினும், இவ்வாதைகள் இன்றைய மனிதனின் இருதயத்தை உருக்கவில்லை; மாறாக, மேலும் கடினப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இக்காலத்திற்கேற்ற மோசே நமக்கு இல்லையோ? இத்தலைமுறை நற்பண்புகளை இழந்து, அழிந்து கொண்டிருப்பதைக் கண்டும் நாம் ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருப்போமோ? இலட்சக்கணக்கான ஆத்துமாக்களை நரகத்தின் விசாலாமான பாதையில் சத்துரு வழிநடத்திச் செல்வதைப் பார்த்துக்தொண்டு நாம் சும்மா இருப்பதா? ''அவர்கள் இராஜ்யங்களை ஜெயித்தார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள் (யாரை விழுங்கலாமென்று சுற்றித்திரியும் சிங்கம்)'' என்று வேத வசனம் பரிசுத்தவான்களைப் பற்றிச் சொல்கிறது. அவர்களுடைய இரகசியத்தை நாம் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். இப்படிப்பட்ட நியாயத்தீர்ப்பு நாளுக்காக, பரிதாப நிலையில் வெளுத்துப் போய் பலனற்றிருக்கும் புராட்டஸ்டண்ட் இயக்கத்திற்கு தேவனால் நிரப்பப்பட்டு அவரால் நடத்தப்படும் மனிதர் தேவை. தேவை தேவனுடைய தீர்க்கதரிசிகள்!
எழுப்புதல் தாமதிப்பது ஏன்?
லியோனார்டு ரேவன்ஹில்
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்