-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எலியாக்கள் எங்கே?


எலியாவின் தேவன் எங்கே? என்ற கேள்விக்கு, அவர் எப்போதும் இருக்கும் சிம்மாசனத்தில்தான் இருக்கிறார் என்று நாம் பதிலளித்துஆனால் தேவனுடைய எலியாக்கள் எங்கே? என்று திருப்பிக் கேட்கிறோம் .

எலியா நம்மைப் போல் பாடு்ள்ள மனுஷனாயிருந்தான் '‘ என்று நாமறிவோம். ஆனால் , அந்தோ !நாம் அவனைப்போல் ஜெபிக்கவில்லைஜெபிக்கும் ஒரு மனிதன் தேவனுக்குப் போதும். இன்று தேவன் மனிதரைக் கடந்து செல்கிறார். காரணம் அவர்கள் அறியாமலிருக்கிறதினாலல்ல, அதிகம் அறிந்திதிருக்கிறதினாலேயே! சகோதரரே, நமது தாலந்துகளே நமக்கு இடையூறுகளாகவும், நமது தாலந்துகளே நமக்கு தடைகளாயுமிருக்கின்றன.

எலியா ஒளிப்பிடத்திலிருந்து பழைய ஏற்பாட்டு மேடைக்கு முழு வளர்ச்சியடைந்த மனிதனாக வந்தான். பாதாளத்தின் மகளான யேசபேல் தேவனுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றொழித்து, அவர்களுக்குப் பதிலாக பொய்த் தேவர்களுக்குத் தோப்புகளை வைத்தாள். இருள் அந்த நாட்டையும், காரிருள் அந்த மக்களையும் சூழ்ந்தது. அவர்கள் அநீதியைத் தண்ணீரைப்போல் பருகினார்கள் .அந்நாடு அஞ்ஞானிகளின் ஆலயங்களாலும், விக்கிரங்களுக்குரிய சடங்குகளாலும் துர்நாற்றமெடுத்தது, கொடுமையான ஆயிரக்கணக்கான பலிபீடங்களிலிருந்து புகை மேற்கிளம்புவதை அந்நாடு பார்த்து நின்றது. இவை யாவும் ஆபிரகாம் எங்கள் தகப்பனென்று சொல்லிக்கொண்ட மக்களிடையே நடைபெற்றன.அவர்களுடைய முற்பிதாக்கள் துன்ப காலத்தில் கர்த்தரை நோக்கி முறையிட்டு தங்களுடைய எல்லா இடுக்கண்களிலிருந்தும் தேவனால் விடுவிக்கப்பட்டவர்கள். இப்போதோ மகிமையின் தேவனை விட்டு அவர்கள் எவ்வளவாய் அகன்று விட்டனர்! பொன் மங்கிப் போயிற்றே!  அளவுக்கு மீறிய இந்த பின்மாற்ற சூழ்நிலையில் தேவன் ஒரு மனிதனை, ஒரு குழுவையல்ல, ஒரு கூட்டத்தையல்ல, ஒரு தூதனையல்ல -ஆனால் ஒரு மனிதனை -நம்மைப்போல் பாடுள்ள ஒரு மனிதனை, எழுப்பினார். தேவன் ஒரு மனிதனைத் தேடியது பிரசங்கிக்க அல்ல, பிளப்பிலே நிற்க! ஆபிரகாமைப்போல இப்போது எலியா தேவனுக்கு முன்பாக நின்றான். எனவே பரிசுத்த ஆவியானவர் எலியாவின் வாழ்க்கையை  'அவன் ஜெபித்தான்' என்று இரண்டே வார்த்தைகளில் எழுத முடிந்தது. தேவனுக்கோ, மனிதருக்கோ இதைவிடக் அதிகமாக எந்த மனிதனும் செய்ய முடியாது. இன்று சபையில் ஆலோசனை கூறுவோரின் எண்ணிக்கை அளவுக்கு, அழுது புலம்புவோர் இருந்தால் ஓராண்டிற்குள் எழுப்புதல் வந்து விடும் .

இப்படிப்பட்ட ஜெபிக்கும் மனிதர்களே எப்போதும் நாட்டுக்கு நன்மை செய்பவர்கள். எலியாவும் அப்படியே. அவன் கேட்டது பரலோகக் குரல்; கண்டது பரம தரிசனம்; ருசித்தது வல்லமை; எடை போட்டது எதிரியை; துணைகொண்டது தேவனை; பெற்றது அமோக வெற்றி; அவன் சிந்திய கண்ணீர், சகித்த ஆத்தும வேதனை, விட்ட பெருமூச்சுகள்,  இவையெல்லாம் தேவனுடைய தொகுப்புப் புத்தகத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. முடிவில் தவறாத தீர்க்கதரிசனம் உரைக்க வெளி வந்தான். தேவனுடைய இருதயம் அவனுக்குத் தெரியும். எனவே அவன் -ஒரு தனி மனிதனாக -ஒரு நாட்டை அடக்கி இருந்த நிலவரத்தையே மாற்றிவிட்டான். ''செங்குத்துப் பாறை '' போன்ற அவன் கீலேயாத்தின் மலைகளைப் போன்று கெம்பீரமாகவும் அசையாமலும் நின்று ஒரு வார்த்தையினால் வானத்தை அடைத்தான். எல்லாப் பூட்டுக்கும் பொருந்தும் விசுவாசமென்னும் சாவியினால் எலியா வானத்தைப் பூட்டி, சாவியைப் பையில் போட்டுக் கொண்டு, ஆகாபை நடுங்கச் செய்து விட்டான். தேவன் ஒரு மனிதனைப் பிடித்து கொள்ளுவது அருமையானது; ஆனால் மனிதன் தேவனைப் பற்றிப் பிடித்துக் கொள்வது அதிலும் அருமையானது. ஒரு தேவமனிதன் ''ஆவிக்குள் '' பெருமூச்சு விடட்டும்; அப்பொழுது தேவன் ''என்னை விட்டுவிடு'' என்று கதறுவார், எலியாவைப் போல் நாமும் சாதிக்க விரும்புகிறோம். ஆனால் அவனைப் போல் துன்பங்களைச் சகிக்கவோ விரும்புவதில்லை!

சகோதரரே, நாம் தேவனுடைய ஊழியத்தை, தேவனுடைய முறையில், தேவனுடைய வேளையில், தேவனுடைய வல்லமையோடு செய்வோமானால் நமக்குக்கிடைப்பது தேவனுடைய ஆசீர்வாதமும், பிசாசின் சாபங்களும்! நம்மை ஆசீர்வதிக்க தேவன் பரலோகத்தின் பலகணிகளைத் திறக்கும்போது, நம்மை அழிக்க பிசாசு பாதாளத்தின் வாசலைத் திறப்பான். தேவன் புன்னகை செய்வாரானால் பிசாசு முகம் சுழிப்பான். சாதாரண பிரசங்கிகள் எவருக்கும் உதவிசெய்யலாம், ஆனால் எவரையும் புண்படுத்தமாட்டார்கள்; தீர்க்கதரிசிகளோ யாவரையும் கலக்கி அதிரச் செய்துவிடுவார்கள். பிரசங்கி கும்பலோடு செல்லலாம்; தீர்க்கதரிசியோ அதற்கு எதிர்த்துச் செல்லுவான். தேவனால் அவிழ்க்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, அனுப்பப்பட்டவன் நாட்டின் பாவங்களைக் கண்டித்துப் பேசுவதால் தேசத் துரோகியென்றும், அவனுடைய நாவு இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போலிருப்பதால் கருணையற்றவனென்றும், அவனுடைய பிரசங்கத்தை மெச்சுவோர் அதிகமில்லையாதலால் சமநிலையற்றவனென்றும் பட்டம் வாங்குவான். பிரசங்கியின் வருகை முன்னறிவிக்கப்படும். தீர்க்கதரிசியின் வருகையோ முன்னெதிர்க்கப்படும்.

! உடன் ஊழியரே  லுத்தர், பன்யன், வெஸ்லி முதலிய   பரிசுத்தவான்களையும், சீர்திருத்தவாதிகளையும், இரத்தச் சாட்சிகளையும் நாம் நேசிக்கிறோம். நாம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை எழுதுகிறோம். அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் சமாதி வாசகத்தைச் சட்டமிடுகிறோம். அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்புகிறோம்- அவர்களைப் பின்பற்றுவதைத் தவிர மற்றெல்லாவற்றையும் செய்கிறோம்!

நாம் அவர்களின் கடைசித் துளி

இரத்தத்தைக் கண்டு களிக்கிறோம்.

நமது இரத்தத்தின் முதல் துளியையோ

கவனமாகக் காத்துக் கொள்ளுகிறோம்.

யோவான் ஸ்நானன் ஆறு மாதம் சிறைக்குத் தப்பியது பெரிய காரியம். அவனும் எலியாவும் இன்றையப் பட்டண வீதிகளில் ஆறுவாரங்கள் கூடத் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். பாவத்தைக் கண்டனம் செய்ததற்காகவும், மழுப்பாமல் பிரசங்கித்ததற்காகவும் உடனே அவர்கள் சிறைக்கோ அல்லது மனநோய் விடுதிக்கோ அனுப்பப்பட்டிருப்பார்கள்.

இன்றைய சுவிசேஷகர்கள் கம்யூனிசத்தின் பலத்தை, கண்களை அகல விரித்துக் னிக்கின்றனர். ஆனால் ரோமச் சபையின் பயங்கரத்தைக் குறித்துப்பேச வாய் திறப்பதில்லை. மனிதர்களின் ஆத்துமாக்களைக் கெடுக்கும் பாதிரிகள், விக்கிரகாராதனைக் கும்பல், கல்வாரியைக் கவனியாது மரியாளிடம் மன்றாடி, லூசிபரின் ஏமாற்றங்களிலெல்லாம் மிகப்பெரிய இந்த ஏமாற்றத்தால் வாழ்விலும் சாவிலும் ஏமாற்றப்பட்டுள்ள லட்சகணக்கானோர்! இவையெல்லாம் நமக்குக் கவலையில்லை. இதைப்போன்ற சூழ்நிலையில் இருந்த எலியா ஜெபித்ததைப் போல் கண்ணீரோடும் பக்தி வைராக்கியத்தோடும் நாம் ஜெபிப்பதில்லை. வெள்ளம்போல் சத்துரு வந்துள்ளான்; அவனுக்கு எதிராகக் கொடியேற்ற தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைக் தரித்துக் கொண்ட, ஆவியினால் நிறைந்த ஒரு மனிதன் இல்லையோ? இருதயத்தில் தாகத்தையும், கண்களில் தரிசனத்தையும் பாதுகாக்க கூடிய இடம் ஒன்றே-அதுதான் ஜெபப் பலிபீடம். எரிமலை போன்ற இருதயத்துடன், இடியோசை போன்ற குரலுடன் இந்த மனிதனாகிய எலியா தக்க சமயத்தில் தேவராஜ்ஜியத்தின் ஊழியத்திற்கு முன் வந்தான் .

உலக சுவிசேஷ ஊழியத்திற்குத் தடைகள் அநேகம் உண்டு. அசையா மனங்கொண்ட மனிதர் முன்பாக இவைகள் மறைந்து விடும்.

''கடக்கவியலா ஆறுகள் உண்டோ?

குடையவியலா மலைகள் உண்டோ?

இயலாத செயல்களையும்

இறைவன் எளிதாய்ச் செய்வார்.

எவ்வல்லமையும் செயற்கரியதைச்

செய்வார் அவரே.''

இதற்குக் கிரயம் அதிகம் . நம்மோடு பங்காளியாக இருக்க அல்ல ; நம்மைச் சொந்தமாக்கிக் கொள்ளவே தேவன் விரும்புகிறார்.

எலியா தேவனோடு சஞ்சரித்தான்.  அவன் தேவனைப் போலவே தேசத்தின் பாவத்தைப் பற்றி சிந்தித்தான். தேவனைப் போலவே பாவத்தைக் கண்டு துக்கித்தான்; தேவனைப் போலவே பாவத்திற்கு எதிராகக் குரலெழுப்பினான். அவன் ஊக்கமாய்க் கண்டித்தான். அவன் தட்டிக்கொடுத்து பிரசங்கிக்கமாட்டான். உருகி நிற்கும் உலோகம் உடலில் படுவதைப் போல் அவனுடைய வார்த்தைகள் மனிதரின் இருதயத்தில் பட்டன.

ஆனால், ''நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் றுதிப்படும் ''[சங் 37;23] .கர்த்தர் எலியாவை நோக்கி, ''ஒளித்துக் கொண்டிரு '' என்றும், பின்னர் மீண்டும், ''உன்னைக் காண்பி '' என்றும் சொன்னார்.

இராஜாக்களைக் கடிந்துகொண்டிருக்க வேண்டிய வேளைகளில் நாம் ஒளிந்துகொண்டிருப்பது தவறாகும்; அப்படியே காத்திருக்கும் படி ஆவியானவர் ஏவும்போது நாம் பிரசங்கிப்பதும் தவறாகும். ''என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு '' [சங் 62;5] என்று சொல்ல தாவீதைப் போல் நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் .

நம்மைத் தாங்குபவற்றையெல்லாம் தள்ளிப் போடும்படி தேவன் அழைக்க நம்மில் யாருக்கு தைரியமுண்டு? தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளல்ல. அவருடைய வழிகள் ''ஆராயப்படாதவைகள் ''. ஆனால், அவர் அவைகளை அவருடைய ஆவியானவர் மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார். தேவன் எலியாவை முதலாவது கேரீத்துக்கும், பின்னர் சாரிபாத்துக்கும் போகக் கட்டளையிட்டது, ஆடம்பரமான அறையில் தங்குவதற்காகவா? இல்லை! இல்லவே இல்லை! தேவனுடைய இந்த தீர்க்கதரிசி, நீதியைப் பிரசங்கிக்கும் இவன், தரித்திரமான ஒரு விதவையின் வீட்டில் தங்குமாறு கர்த்தரிடம் கட்டளை பெற்றான்.

பின்னர், கர்மேல் பர்வதத்தில் எலியா செய்த ஜெபம் சிறிய ஜெபங்களிலெல்லாம் பெரியது. ''கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் '' [1இரா 18;37] பொதுவிடங்களில் செய்யப்படும் சிறிய ஆனால் சீரிய ஜெபங்கள் மறைவிடங்களில் செய்யப்படும் நீண்ட ஜெபங்களில் பலன் என்று E.M.பவுண்ட்ஸ் என்ற பக்தன் சரியாகச் சொன்னார். எலியா ஜெபித்தது, விக்கிரகாராதனை செய்யும் பூசாரிகள் அழிக்கப்படவோ இரண்டகம் பண்ணும் இஸ்ரவேலரைப் பட்சிக்கப் பரத்திலிருந்து இடிமுழக்கங்கள் அனுப்பப்படவோ அல்ல;  ஆனால் தேவனுடைய மகிமையும், வல்லமையும் வெளிப்பட வேண்டுமென்பதே அவனது ஜெபம் .

 சில சமயங்களில், தேவனுக்கே நாம் உதவி செய்ய முயற்சிக்கிறோம். ஆபிரகாம் இப்படிச் செய்ய முயற்சித்ததின் பலன் தான் பூமி இந்நாள் வரையிலும் இஸ்மவேலின் காரியத்தினால் சபிக்கப்பட்டிருக்கிறது. இதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாறாக, எலியாவோ காரியத்தைக் கர்த்தருக்கு எவ்வளவு கடினமாக்க முடியுமோ அவ்வளவு கடினமாக்கினான். அவனுக்கு அக்கினி தேவைப்பட்டது; ஆனால் பலியைத் தண்ணீரால் நனைத்தான். நமது ஜெபங்களிலும் இவ்விதப் பரிசுத்த தைரியத்தைத் தேவன் மெச்சுகிறார். ''என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்.' '[சங் 2;8].

! உடன் ஊழியரே, நமது ஜெபத்தின் பெரும்பகுதி தேவனுக்கு ஆலோசனை சொல்லுவதாகவே இருக்கிறது. நமது ஜெபம் நமக்கோ அல்லது நமது சபையைப் பிரிவுக்கோ உரிய பேராசையினால் வண்ணமிழந்து காணப்படுகிறது . வேண்டாம் இந்த ஆசை! நமது நோக்கமெல்லாம் 'தேவன் ' என்று மட்டுமே இருக்க வேண்டும். ஏனென்றால் அவருடைய கீர்த்தியே கறைப்படுத்தப் படுகிறது; அவருடைய செல்லக் குமாரனே அசட்டை செய்யப்படுகிறார்; அவருடைய பிரமாணங்களே மீறப்படுகின்றன; அவருடைய நாமமே நிந்திக்கப்படுகிறது. அவருடைய வேதமே மறக்கப்படுகிறது; அவருடைய வீடே சமுதாயத் தொண்டுகளின் வித்தைக் கூடமாக்கப்பட்டுவிட்டது .

தமது மக்கள் ஜெபிக்கும்போதுதான் தேவனுக்கு அதிக பொறுமை தேவைப்படுகிறது. அவர் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்யவேண்டுமென்று நாம் அவருக்குச் சொல்லுகிறோம். நியாயந்தீர்த்தலும் பாராட்டுதலும் ஜெபத்தில்தான். சுருங்கக்கூறின், ஜெபிக்கிறோம் என்று சொல்லும்போது ஜெபிப்பதைத்தவிர மற்றெல்லாவற்றையும் நாம் செய்கிறோம்.

வேதாகமப் பள்ளி எதுவும் இக்கலையை நமக்குக் கற்றுத்தர இயலாது. தனது பாடப்பயிற்சித் திட்டத்தில் ஜெபத்திற்கு என்று ஒரு தனிப் பகுதி அளித்துள்ள வேதகலாசாலை எது? நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமானது வேதத்தில் ஜெபத்தைப் பற்றி எழுதப்பட்டிருப்பதே. ஆனால் இது எங்கே கற்பிக்கப்படுகிறது? கடைசிக் குட்டையும் நாம் உடைத்து விட்டு, நம்முடைய தலைவர்களிலும், ஆசிரியர்களிலும் பலர் ஜெபிப்பதில்லை, கண்ணீர் சிந்துவதில்லையென்று உரக்கக் கூறுவோம். தாங்களே அறியாததை அவர்கள் கற்பிக்க முடியுமா?

விசுவாசிகளை ஜெபிக்க வைக்கக்கூடிய மனிதனே இதுவரை உலகம் காணா மிகப்பெரிய எழுப்புதலை தேவனுடைய உதவியால் கொண்டு வருவான் . தேவனில் தவறு ஏதுமில்லை . அவரால் எல்லாம் கூடும் . ''நமக்குள் கிரியை செய்கிற வல்லைமையின்படியே '' செய்ய அவர் வல்லவர். தேவனுடைய இன்றைய கவலைக் கம்யூனிசமோ, ரோமமார்க்கமோ, மிதவாதமோ, நவீனவாதமோ அல்ல; அவரது கவலையெல்லாம் அடிப்படைச் சத்தியங்களை விசுவாசிக்கிறோம் என்று சொல்லியும் செத்த நிலையிலுள்ள மார்க்கமே.


கருத்துரையிடுக

0 கருத்துகள்