"ஜெபவீரர்கள்
இரும்பு மனிதராய் இருக்க வேண்டும், ஏனென்றால்
அவர்கள் சாத்தானின் ராஜ்யத்தைத்
தாக்க முயற்சிக்குமுன்
தாங்களே அவனால் தாக்கப்படுவர்."
அண்டசராசரத்தை ஆளுகிற தேவனிடம் சமர்ப்பிக்கப்படும் வெறும் விண்ணப்பப் பட்டியலாக மட்டும் ஜெபம் இருக்குமானால் அது ஜெபத்தைப் பற்றிய பரந்த சத்தியத்தின் ஒரு சிறு பகுதியே. கிறிஸ்தவ வாழ்க்கையின் மற்ற காரியங்களைப் போலவே ஜெபமும் வேத நியதியை மீறக்கூடும். உழைப்புக்குப் பதிலானது ஜெபம் அல்ல. அப்படியே ஜெபத்திற்குப் பதிலானதும் உழைப்பு அல்ல. E M.பவுண்ட்ஸ் என்ற பக்தன் தனது அதிகம் அறியப்படாத, ஆனால் அதிக அருமையான, ஜெபமெனும் ஆயுதம்' என்ற நூலில்''
"தவறு செய்வதினால்
பணியைக்கூட தவறவிடலாம்; ஆனால்
அசட்டையினால்
ஜெபத்தைத் தவறவிடவே கூடாது''
என்று கூறியுள்ளார். ''தேவனைப் பற்றிய அறிவைப் பரப்புவதிலும், அவருடைய பணியைப் பூமியில் செய்வதிலும், தீய அலைகளிலிருந்து காப்பாற்றும் முட்டுச் சுவராக நிற்பதிலும் மிகவும் திறமையான பிரதிநிகளாக இருப்பவர்கள் ஜெபிக்கும் சபைத் தலைவர்களேயாவர். தேவன் அவர்களைச் சார்ந்திருக்கிறார், அவர்களைப் பயன்படுத்துகிறார், அவர்களை ஆசீர்வதிக்கிறார்,'' என்றும் பவுண்ட்ஸ் கூறியுள்ளார்.
நிச்சயமாக “ஜெபம் தளர்வதினாலேயே எழுப்புதல் தாமதிக்கிறது”. ஜெபிக்கும் மனிதருக்கேயன்றி வேறெதற்கும் சாத்தானோ, நரகமோ பயப்படுவதில்லை. ஆனால், நன்றாக வாழ நீடித்து வாழ வேண்டிய அவசியமில்லை. இருபத்தெட்டு வயதே நிரம்பிய ஒருவன் நூறு வயது ஞானத்தோடு மரிக்கமுடியும். தும்பியானது தனது மேல் தோலை நீக்கி விட்டு நீலக்கல் தகட்டைக் கவசமாக அணிந்து கொண்டு பனிபடர்ந்த வயல்களுக்குப் புனித பயணத்தை தொடர்கிறது. இது சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். என்றாலும், அதனுடைய மார்புக் கவசத்தைப்போல அழகிய நீலநிறம் பூமியில் வேறு எந்த மலருக்குமில்லை. அந்தப்படியே, ஆவிக்குரிய உலகிலும் ஆத்துமாவின் விலையுயர்ந்த ஆடைகள் ஜெபமாகிய தறியில் நெய்யப்பட்டு கிறிஸ்துவின் பாடுகளாகிய வேதனையில் சாயம் ஏற்றப்படுகின்றன.
ஹென்றி மார்ட்டின் என்ற பக்தனின் ஆவிக்குரிய தன்மை மீது சக மிஷனரிகள் பொறாமை கொண்டனர். ஒருவர் அவரைப்பற்றி இப்படிக் கூறினார்;'' ஆ! அவரது உயரிய பண்புகளை, உன்னத தேவ பக்தியை, ஊக்கத்தை, உலகிற்கும் உயர்ந்த எண்ணத்தை, ஆத்துமாக்கள் மீதுள்ள அன்பை, அவற்றை அதிகமாக்கிக் கொள்வதிலுள்ள ஆர்வத்தை, கிறிஸ்துவைப் பற்றிய ஆழ்ந்த அறிவை, பரலோகச் சிந்தையைப் பின்பற்றினால் எவ்வளவு நலமாயிருக்கும்!'' அவர் இந்தியாவில் உண்டாக்கிய நல்லெண்ணத்தின் இரகசியம் இக்கருத்துக்களே. ஞானத்தின் வழிகள் எப்போதையும்விட அதிக இனிமையாகவும், சரியானவையாகவும் தோன்றுகின்றன. உலகம் எப்போதையும்விட அதிக ருசியற்றதாகவும் வெறுப்பூட்டுவதாகவும் இருக்கிறது'' என்று மார்ட்டின் தன் அனுபவத்தைப் பற்றிக் கூறினார். அவர் மேலும் சொன்னது; இரகசிய ஜெபத்தில், குறிப்பாக அஞ்ஞானிகளுக்காக ஜெபிக்கும் போது, நான் போதுமான அளவு வல்லமையும், ஊக்கமும் அற்றவனாக இருக்கக் காண்பதே நான் அதிகமாக வருந்தும் காரியம். எனக்குக் கிடைத்திருக்கும் வெளிச்சத்தின் அளவுக்கு என்னில் அனல் இல்லையே!'' யாராவது ஹென்றி மார்ட்டின் மீது பிரெய்னார்டின் வாழ்க்கைச் சரிதையை வில்லியம் கேரி வாசித்தார். அது அந்த இளம் ஆத்தும ஆதாய வீரனின் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கி, அந்த வீரனை இந்தியாவின் கரையோரத்தில் கொண்டுவந்து நிறுத்தியது. பிரெய்னார்டின் உருகி நின்ற ஆத்துமாவினின்று எட்வர்டு பேசனின் இதய விளக்கு தேவனால் ஒளியேற்றப்பட்டது. இவ்விதம் வட அமெரிக்க இந்தியர்களின் அப்போஸ்தலனாகிய பிரெய்னார்டின் நாட்குறிப்பிலிருந்து பேசன் ஆரம்ப ஆர்வத்தைப் பெற்று தனது இருபதாவது வயதில் பிரெய்னார்டையும் தோற்கடிக்கும் வகையில் ஒரு ஜெப வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆவிக்குரிய உலகில் பிரெய்னார்டின் மற்றொருகனியாக இராபர்ட் முரே மச்செயின் என்ற பக்தனைக் கூறலாம்.. இவர் ஒரு ஜெப வீரனாக வாழ்ந்து தனது இருபத்தொன்பதாவது வயதில் '' பூரண வயதுள்ளவராய்'' மரித்தார். நமது ஆத்துமா இவ்வுலகில் வகிக்கக்கூடிய பதவிகளிலெல்லாம் உன்னதமான ஜெபவாழ்க்கைக்கு மச்செயின் கவர்ந்திழுக்கப்பட்டது பிரெய்னார்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்ததின் மூலமாகவே.
பிரெய்னார்டின் உடல் நோயினால் அரிக்கப்பட்டு அழிந்து கொண்டிருந்தபோது, மாபெரும் ஆத்தும ஆதாய வீரனான யோனத்தான் எட்வர்ட்ஸ் அதைப் பார்த்துகொண்டிருந்தார். எட்வர்ட்ஸ் பின்வருமாறு அதை எழுதினார், ''தேவனுடைய சித்தப்படி பிரெய்னார்டு என்னுடைய வீட்டில் மரித்ததற்காக நான் தேவனைத் துதிக்கின்றேன். நான் அவருடைய ஜெபங்களைக் கேட்டு,அவருடைய சமர்ப்பணத்தைக் கண்டு, அவருடைய முன்மாதிரியால் கவரப்பட முடிந்தது. ''பிரெய்னார்டு இறந்தபோது ஜான் வெஸ்லி தன் ஆவிக்குரிய வெற்றியின் துவக்க காலத்தில் இருந்தார். ஆண்டவரின் ஊழியம் மங்கிபோன இடத்தில் அதை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும்? என்று ஒருவர் கேட்டார். மூன்று நாடுகளைக் குலுக்கிய, ஒய்வின்றி உழைத்த, சுவிசேஷகனாகிய வெஸ்லி அக்கேள்விக்கு இவ்விதமாகப் பதிலளித்தார்; ''ஒவ்வொரு பிரசங்கியும்டேவிட் பிரெய்னார்டின் வாழ்க்கைச் சரிதையைப் படிக்க வேண்டும்.''
இப்படியாக, பேசன், மச்செயின், கேரி, எட்வர்ட்ஸ், வெஸ்லி ஆகிய புகழ்பெற்ற தேவமனிதர்கள் ஒரே சுடரினால் தூண்டப்பட்டவர்களே இவர்கள் யாவரும் வியாதிக்காரனான, ஆனால் விண்ணப்ப வீரனான பிரெய்னார்டுக்குக் கடமைப்பட்டவர்கள்.
"யுகங்களின் போராட்டம்
நம்மீது இருக்கிறது.
பரிசுத்த வேதத்திற்குப் புறம்பாக
உருமாற்றப்பட்டுள்ள சபை,
உலகத்துடன் உறவாடித்
தன் கர்த்தரை அவமதிக்கிறது
இது ஏமாற்றுதலேயன்றி வேறல்ல."
உண்மையான சபை உன்னதத்திலிருந்து பிறந்தது. அதற்கு உள்ளே பாவிகளே கிடையாது; அதற்கு வெளியே பரிசுத்தவான்களே கிடையாது. அச்சபையின் அங்கத்தினர் பட்டியலில் எந்த மனிதனும் இன்னொருவரின் பெயரைச் சேர்க்க முடியாது; அதுபோலவே யாரும் இன்னொருவரின் பெயரை அதிலிருந்து நீக்கவும் முடியாது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இச்சபை சிறியதாயிருப்பினும் இன்னும் இந்த உலகில் அது மீந்திருக்கிறது. அது உயிர்வாழ்வதும், இயங்கி வருவதும் ஜெபத்திலேயே. ஜெபமே அதின் ஒரே வாஞ்சை. முதல் கல்லை எறிய முடியுமா? மன்றாட்டு ஜெபத்தில் அனலற்று இருக்கிறோம் என்பதை நாம் எல்லாரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அருகிலிருக்குமானால் அக்கினி பரவத்தான் செய்யும்.'' பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!'' இயற்கையாகவே அக்கினி அக்கினியைப் பிறப்பிக்கிறது. அக்கினி ஒரு போதும் பனிக்கட்டியை உண்டாக்க முடியாது; பிசாசு ஒரு போதும் பரிசுத்தவான்களை உருவாக்க முடியாது; ஜெபிக்காத போதகர்களும் ஒரு போதும் மன்றாட்டு வீரர்களை எழுப்ப முடியாது. பட்டறையிலிருந்து தெறிக்கும் ஒரு சிறிய நெருப்புப் பொறி ஒரு பட்டணத்தைக் கொளுத்த முடியும்.
"முதல் அணுகுண்டு
ஹிரோஷிமா பட்டணத்தை உலுக்கியது போல்
மனிதரின் இருதயங்களை
உலுக்கும் வல்லமையை ஜெபம் மட்டுமே உருவாக்க முடியும்."
தங்களுடைய தொலைந்துபோன நிலைக்காக சபையானது தேவனால் அசைக்கப்படும் போது நம்மிடையேயுள்ள அலங்கரிக்கப்பட்ட அஞ்ஞான மார்க்கமும், விக்கிரகங்கள் நிறைந்த ஆலயங்களும், பயத்தால் பீடிக்கப்பட்டு பாவத்தால் மயக்கப்பட்டிருக்கிற இலட்சக்கணக்கான மக்களும் மனந்திரும்புதலோடு தேவனிடத்திற்கு நடத்தபட முடியும். தனக்குத் தெரிந்த தந்திர உபாயங்களையெல்லாம் கையாண்டு பிசாசு எப்படியாவது நம்மை ஜெப அறையிலிருந்து இழுத்துவிட முயலுவான்.
ஏனென்றால் ஜெபத்தில் மனிதன் தேவனோடு இணைக்கப்படுகிறான்; இவ்வித இணைப்பு சாத்தானைத் தோற்கடிக்கிறது. இதை அவன் நன்றாக அறிவான். ஆகையால் ஜெப அறைக்குள் நுழைந்து கதவை மூடியவுடன்தான், நமது உள்ளம் கவலைகளால் பீடிக்கப்பட்டு, வீண் கற்பனைகளினால் நிரம்பத் துவங்கும். இங்குதான் நாம் நமது பிரதம பாதுகாப்பான இரத்தத்திற்காகக் கெஞ்சவேண்டும். அலைபாயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி சிந்தனைச் சிதறாமல் இருக்க சத்தமாக இல்லாவிட்டலும் வாயைத் திறந்து சில வார்த்தைகளையாவது பேச வேண்டும்.
இவ்வாறாகச் சாத்தானின் மீது வெற்றி கண்ட பின்பு நமது அடுத்த வல்லமையானது தேவனுடைய ''மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களில்'' அடங்கியிருக்கிறது. இங்கு நாம் பலமான அஸ்திபாரத்தின் மீது இருக்கிறோம். தேவனுடைய வாக்குத்தத்தங்களே நாம் பரலோகத்துடன் செய்யும் வியாபாரத்திற்குப் பணநோட்டுகளாக இருக்கின்றன. நாம் தேவனைக் கனப்படுத்த அவர் விரும்புகிறார்.
இங்கு நாம் தேவனோடு அல்ல, துரைத்தனங்களுக்கு'' எதிராகப் போராட வேண்டும். ஏனெனில் நஷ்டப்படுத்துவதில் சாத்தானைவிட யாரும் நாட்டமாயிருப்பதில்லை. மனிதரின் ஆத்துமாக்களே அவன் விரும்பும் பொக்கிஷம். கெட்டுப்போன ஆத்துமாக்கள், சந்தேகப்படும் ஆத்துமாக்கள், குடித்துவெறிக்கும் ஆத்துமாக்கள், கீழ்ப்படியாத ஆத்துமாக்கள், நோயுற்ற ஆத்துமாக்கள், மத வைராக்கிய ஆத்துமாக்கள், வயோதிக ஆத்துமாக்கள், வாலிப ஆத்துமாக்கள், இன்னும் ஆவியானவரின் புதுப்பிக்கும் உண்மையான ஜெபம் நேரத்தை விழுங்கும். துவக்க நாட்களில் கடிகாரம் மெதுவாகப் போவது போல் தெரியும். ஆனால் இந்தப் புனிதப் பயிற்சிக்கு ஆத்துமா பழக்கப்பட்டப் பின்பு நாம் ஜெபிக்கும் போது நேரம் பறந்து செல்லும். ஜெபம் ஆத்துமாவை வெண்மையாக்குகிறது .
"யாரைப் புறங்கூறுகிறோமோ
அவர்களுக்காக நாம் ஜெபிப்பதில்லை .
யாருக்காக ஜெபிக்கிறோமோ
அவர்களைப் புறங்கூறுவதில்லை .
ஜெபம் ஒரு பெரிய அழுக்கு நீக்கி."
ஆத்துமாவைச் சுத்தப்படுத்தச் சாலச் சிறந்தது இரத்தமே என்பதை நானறிவேன். ஆனால் நமது வாழ்கையில் கண்டிக்கப்பட வேண்டியது ஏதேனுமிருந்தால், ஜெபிக்கும்போது இம்மானுவேலின் இரத்த நாளங்களிலிருந்து வெளிவரும் இரத்தம் ஆவியானவர் மூலம் சுத்திகரிப்புக்காய்ப் பேசும் .
வசனத்தின் மூலம் நாம் ஜெபத்தைக் குறித்துக் கற்றுக்கொண்டதை நடைமுறையில் பயிற்சிக்க சாத்தான் நம்மைப் பெரிதும் தடுப்பான். அறிவைப் பெருக்கும்படி வேதத்தைக்கூட படிக்க நம்மை விட்டுவிடுவான்.
"இதயம் ஆழமற்று இருக்கும்போது
ஆழ்ந்த அறிவினால் பயன் என்ன?
தேவ சமூகத்தில் குறைவாயிருக்கும் போது
மனிதர் முன்பாக நிறைவாய்க்
காணப்படுவதால் பயன் என்ன?
அகத்திலும் ஆத்துமாவிலும்
அழுக்கு நிறைந்திருக்கும் போது
உடலைமட்டும் சுத்தமாக வைத்துக்
கொள்வதால் பயன் என்ன?
ஆத்துமா மாம்ச சிந்தையுடனிருக்கையில்
மார்க்க பக்தியினால் பயன் என்ன?
ஆவியில் பலவீனமாயிருக்கும் போது
மாம்ச பலத்தினால் பயன் என்ன?
ஆவிக்குரிய வாழ்கையில்
வறுமை தாண்டவமாடும்போது,
உலகச் செல்வத்தினால் பயன் என்ன
நரகத்தில் ஒருவனைப் பற்றித்
தெரியாதிருக்கும்போது
சமூகச் செல்வாக்கில் அவன்
எப்படி மேன்னை பாராட்ட முடியும்?”
இக்குறைகளை எல்லாம் ஜெபம் நிறைவாக்கும். ஆவிக்குரிய உலகில் காணப்படும் போலி எண்ணங்களிலிருந்து விடுபட்டிருக்கும் ஆத்துமா தேவனோடு நெருங்கி உறவாடி, அமைதியாகப் பரத்துக்குரிய சிந்தனையுடையதாயிருக்க வேண்டும்.' ஆவிக்குரிய செல்வத்தையும், தேவனின் செவியையும்' விரும்புகிறவன் தனிமையில் அதிக நேரம் செலவழித்து ''வருத்தத்தின் அப்பத்தையும்'' புசிக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தின் எதிர்ப்பு, சமுதாயத்தின் எதிர்ப்பு முதலியவற்றை அவன் அறிந்தோ அறியாமலோ இருக்கலாம் .ஆனால் ஆத்துமப் போராட்டத்தைப் பற்றியும், நெருங்கிய நண்பர்களைக் கூட இழப்பதைப் பற்றியும் அவன் நன்கு அறிந்திருப்பான் என்பது நிச்சயம் . ஏனென்றால் காதலர்கள் தனிமையாக இருப்பதையே விரும்புவர் . ஆத்தும அனுபவத்தின் உச்ச நிலையைத் தனிமையில் மட்டுமே அடையமுடியும் .
கவிஞன் இவ்விதம் கூறுகிறான் :
''என்னைப் பின்பற்று'' என்ற குரல்கேட்டேன்; அவ்வளவுதான், இகத்தின் இன்பங்கள் மங்கின, என் ஆன்மா அவர் பின் சென்றது. நான் எழுந்து பின் சென்றேன் -- அவ்வளவுதான் நீயும் அவர் அழைப்பைக் கேட்டால் அவர் பின் செல்லமாட்டாயோ?
வல்லமைக்குப் புறம்பான எல்லா ஆத்துமாக்களும் அவனால் ஆட்கொள்ளப்படுகின்றன. அடக்கியாளப்படும் அளவு வேண்டுமானால் ஒருவேளை வேறுபடலாம். ஆவிக்குரிய தன்மையில் பல்வேறு தரங்களில் முன்னேறிக்கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் அவனது கொடிய அம்புகளின் இலக்காயிருக்கின்றன. ஆனால் '''விசுவாசமெனும் கேடகம்'' அவை யெல்லாவற்றையும் அழித்து விடும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ! அது நம்மைக் காயமின்றிகாக்கும். தற்காப்புக்கானது ஜெபமல்ல ; விசுவாசமாகிய கேடகமே அதற்குரியது. ஜெபம் நமது தாக்கும் இரகசிய ஆயுதம் . கர்த்தருடைய பிள்ளைகள் பலருக்கு இது தெரியாத இரகசியமாயிருக்கிறது .
நாம் ஜெபத்தைப் பற்றி எவ்வளளோ வாசித்திருந்தாலும் நம்மில் யார் மகிமையான இந்த ஜெப ஊழியத்தைப் பற்றிக் கற்றுத்தேர்ந்ததாகக் கூற முடியும்? நாம் சாத்தானை ஜெயிப்பது ஜெபத்தின் முலம் அல்ல, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் கிறிஸ்து தாமே அவனை ஜெயித்துவிட்டார். சாத்தான் நம்மை முட்டாள்களாக்கி முறை தவறச் செய்கிறான்; நம்மை ஏமாற்றி இடறலடையச் செய்கிறான்; நாம் அடிக்கடி அவனது மிரட்டல்களை நினைத்துக் கொண்டு ''நமக்குள்ளே மிகவும் அதிகமாய்க் கிரியை செய்கிற'' தேவனுடைய வல்லமையை மறந்து விடுகிறோம். ''சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ள உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்'' என்று நமது மாதிரி ஜெபவீரர் கிறிஸ்து சொன்னார். இதுவே வெற்றி! ஜெபத்தில் ஆத்துமா மெருகேற்றப்படுகிறது .
எழுப்புதல் தாமதிப்பது ஏன்?
லியோனார்டு ரேவன்ஹில்
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்