-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எழுப்புதல் தாமதிக்கிறது… ஏனெனில்?

Gideon conquerd the medianides

எழுப்புதல் தாமதிக்கிறது… ஏனெனில்

கிறிஸ்தவம் மிக எளியது – ஆனால் மிகப் புனிதமானது. தேவனுடைய பார்வையில் அவருடைய உதவியினால் நித்திய நோக்கோடு வாழப்படுவதே அது. நித்தியத்தைக் குறித்த சிந்தையுள்ளவர்களாய் விசுவாசிகள் வாழ்ந்தால் எவ்வளவு நலமாயிருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் நாம் தேவனுடைய பார்வையில் வாழக்கூடுமானால், நியாயாசனத்தை நினைவிற் கொண்டவர்களாய் ஒவ்வொரு காரியத்தையும் நாம் செய்தோமானால், நியாயாசனத்தை நினைவிற் கொண்டு ஒவ்வொரு ஜெபத்தையும் செய்தோமானால், நியாயாசனத்தை நினைவிற் கொண்டு நமது உடமைகளெல்லாவற்றிலும் நாம் தசமபாகம் செலுத்துவோமானால், பிரசங்கிகளாகிய நாம் நமது  கண்களில் ஒன்றை அழியும் மாந்தரின் மீதும் மற்றொன்றை நியாயாசனத்தின் மீதும் வைத்தவர்களாய் நம்முடைய ஒவ்வொரு பிரசங்கத்தையும்  ஆயத்தம் செய்தோமானால், அப்போது இவ்வுலகை உலுக்கும் பரிசுத்த ஆவியானவரின் எழுப்புதலையும், கோடிக்கணக்கான விலைமதியாத ஆத்துமாக்களின் விடுதலையையும் நாம் சீக்கிரம் காணலாம். 

தலைக்கனமும், தானெனும் மேட்டிமை எண்ணமும் கொண்ட இணங்காத, இச்சையடக்கமில்லாதவர்கள், ஆட்டம் காணும் சிம்மாசனங்கள், ஆகியவை நம்மை அதிரச்செய்ய வேண்டும். உலகத்தில் மூன்றே வகையான மக்கள் உள்ளனர் என்று சொல்லப்படுவது சரியே. அஞ்சுவோர், அஞ்ச அறியாதோர், வேதத்தை அறிந்தோர் ஆகியோரே அம்மூவகையினர். வேத புத்தகம், ஊழியர், கைப்பிரதிகள், ஜெபக்கூட்டங்கள், ஆலயங்கள் இவையெதுவுமில்லாத சோதோம் நகர் அழிந்தது. அப்படியிருக்க, அமெரிக்காவும், இங்கிலாந்தும், இந்தியாவும் எப்படி தப்ப முடியும் ? வேதாகமங்களும், ஆலயங்களும், பிரசங்கிகளும் நிறைய நமக்குண்டே! நமது பாவம் எவ்வளவு பெரிது!ஆலயங்களைக் கட்டுகிறார்கள்; ஆனால் ஆலயங்களுக்குள் செல்வதில்லை. வேதாகமங்களை அச்சிடுகிறார்கள்; ஆனால் அவற்றை வாசிப்பதில்லை. தேவனைப்பற்றி பேசுகிறார்கள்; ஆனால் அவரை விசுவாசிப்பதில்லை. கிறிஸ்துவைக்குறித்துப் பேசுகிறார்கள்; ஆனால் இரட்சிக்கப்பட அவரை விசுவாசிப்பதில்லை. பாமாலைகளைப் பாடுகிறார்கள்; ஆனால் பாடிய சத்தியங்களை பறக்க விட்டுவிடுகிறார்கள். இந்நிலையிலிருந்து வெளிவருவது எப்போது ?ஏறத்தாழ ஒவ்வொரு கன்வென்ஷனும் இன்றைய சபை எபேசு சபையைப் போன்ற அனுபவம் கொண்டது என்று கூறிவிடுகிறது. பாவத்திலும். இச்சையிலும் எவ்வளவு உழன்று கொண்டிருந்தாலும் நாம் அவரோடு உட்கார்ந்திருக்கிறோம் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. அந்தோ எத்தனைப் பெரிய பொய்! நாம் எபேசியர்தான், ஆனால் வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள எபேசு சபையைப் போல் நாம் நமது ஆதி அன்பை விட்டுவிட்டோம். நாம் பாவத்தை தட்டிக்கொடுக்கிறோமேயொழிய அதைத் தகர்த்தெறிவதில்லை. இப்படிப்பட்ட குளிர்ந்த. குலைந்த, தொலைந்த, பயந்த சபைக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடற்ற காமவிகாரங்கொண்ட இச்சந்ததி ஒருபோதும் அடிபணியாது. நொண்டிச்சாக்குகளை காரணங்களாக நாம் காட்ட வேண்டாம். ஒழுக்கக் கேட்டுக்கு சினிமாவோ இன்டர்நெட்டோ காரணமல்ல. அகில உலக உருக்குலைவுக்கும், ஊழலுக்கும் காரணம் சபையின் வாசற்படியில்தான் இருக்கிறது. என்றாலும் உண்மையான சபை துன்ப காலத்தில் (அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் அல்ல) ஜெயங்கொண்டது. இப்படிப்பட்ட தரங்குறைந்த கிறிஸ்தவ வாழ்க்கையே இயேசுவின் புதிய ஏற்பாட்டுத்தரம் என்று சபை உலகிற்கு அறிவிப்பதை நம்பக்கூடிய அளவிற்கு நாம் அறிவற்றவர்களாயிருப்பது விநோதமானதே.

Gideon levels the grove of the false god

(1).எழுப்புதல் தாமதிக்கிறது… ஏனெனில் சுவிசேஷ ஊழியம் மிகவும் வியாபாரமாக்கப்டுவதால்

எழுப்புதல் தாமதிக்கிறது… ஏனெனில் சுவிசேஷ ஊழியம் மிகவும் வியாபாரமாகிவிட்டது. விதவைகள், ஏழைகள் ஆகியோரின் தசமபாகங்கள் பல சுவிசேஷகர்களால் ஆடம்பர வாழ்க்கைக்கு செலவிடப்படுகின்றன. கூட்டத்திற்கு வரும் பெருந்திரள், கூட்ட முடிவில் முன்னுக்கு வரும் திரள் கூட்டம், பெரிய மனிதர்களின் பாராட்டுக்கள் ஆகியவை வானை முட்டும் அளவு விளம்பரப்படுத்தப்படுகின்றன. காணிக்கை எவ்வளவு என்பதைத்தவிர எல்லாம் விளம்பரம் பெறுகின்றன ! தேவனுக்கு ஊழியம் செய்வதாக எண்ணி ஏமாளிகள் தங்கள் பணத்தை ஆடம்பரப் பிரிய, மதிப்புப் பெற்ற ஆனால் மதிப்பற்ற, பிரசங்கிமார் கைகளில்கொடுக்கின்றனர்.

ஏரிக்கரையில் எழில்மிகு இல்லங்கள், ஏரியில் சொந்த உல்லாசப் படகு, வங்கியில் நிறையப் பணம், இவை அத்தனையும் உடையவர்களாய் இருந்தும் இன்னும் பணம், பணம் என்று பிச்சை கேட்கும் பிரசங்கிகள் பலர். இப்படிப்பட்ட வழிப்பறிக்காரர்களும், அநீதியாளர்களுமான மனிதரை நம்பி பரிசுத்த ஆவியின் எழுப்புதலை தேவன் அனுப்ப முடியுமா? இப்படிப்பட்ட ஊழியர்கள் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை உடை மாற்றிக் கொள்கிறார்கள். மாட்டு தொழுவத்திலிருந்த இயேசுவைப் பிரசங்கிக்கும் இவர்கள் மாடமாளிகைக் கட்டிடங்களிலும் ஆடம்பர விடுதிகளிலும் தங்குகிறார்கள். தன் பிரசங்கத்தை விளக்குவதற்கு ஒரு வெள்ளிக்காசை இன்னொருவரிடமிருந்து கேட்டு வாங்க வேண்டிய நிலையில் இயேசு இருந்தார். அந்த இயேசுவின் பெயரால் இந்தத் துரோகிகள் தங்கள் சொந்த இச்சைகளை நிறைவேற்ற மக்களை பணம் பிடுங்குகின்றனர். சாதாரண நாடோடி ஆடையை அணிந்திருந்த இயேசுவை அறிவிக்கும் இவர்கள் நடிகர்களைப் போல அலங்காரம் செய்கின்றனர். இயேசு மேற்கொண்டது உபவாசம்; இவர்கள் அனுபவிப்பது உல்லாசம். இன்றைய சுவிசேஷகன் தான் தன்னை கூலிக்கு மட்டுமல்ல, கூட்டு வட்டிக்குப் பாத்திரன் என்று எண்ணுகிறான். நியாத்தீர்ப்பின் காலையிலே இவைகளின் முடிவு என்னமாய் இருக்கும் !

(2)எழுப்புதல் தாமதிக்கிறது… ஏனெனில், சுவிசேஷத்தின் தரத்தைக் குறைப்பதால்

 எழுப்புதல் தாமதிக்கிறது… ஏனெனில், சுவிசேஷத்தின் தரத்தைக் குறைத்து  வானொலியிலும், இசை தட்டுகளிலும், ஆலயங்களிலும் நமது பாடல்கள் வெறும் ஆட்டத்திற்கு இசைவாக இசைக்கப்படுகின்றன. இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்திற் குரிய கண்ணியம் காணப்படுவதில்லை. பாட்டுக்கிசைவாக பரிசுத்த ஆவியானவரும் குறுக்கப்படுகிறார். நமது தாலந்துகளை வெளிக்காட்டும் காட்ச்சிக்கூடமாகஎழுப்புதல் தாமதிக்கிறது… ஏனெனில், சுவிசேஷத்தின் தரத்தைக் குறைத்து  பிரசங்கமேடைகள் ஆகிவிட்டன. வெளியூரிலிருந்து வரும் பாடகர் குழு பொம்மை அணிவகுப்பைப்போலத் தோற்றமளிக்கின்றது. இன்றையப் புத்திசாலிப் பிரசங்கிகள் சில போலி அனலோடு உள்ளங்களை அசைப்பதுபோல் பிரசிங்கிப்பதைப் பார்க்கும்போது, சீக்கிரத்தில் தவளைகள் இசைக் கருவிகளை நமது கூட்டங்களில் இனிமையாக இசைக்கும் என்று கூறினால் அதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லையென்றே தோன்றுகிறது. எப்படியாகிலும், எவரையாகிலும், எதற்காகவாகிலும் கூட்டத்தில் முன்னுக்கு வரச்செய்ய இன்றைய சுவிசேஷகர்கள் எதையும் செய்யத் தயங்கார். “உதவி வேண்டுமோ? வல்லமை வேண்டுமோ? தேவனோடு நெருங்கி வாழவேண்டுமோ?” என்றெல்லாம் பசப்பு மொழி பேசி உள்ளத்தில் உண்மையின்றி அழைப்பு விடுக்கிறார்கள். இவ்விதம் மனந்திரும்புதலில்லாத விசுவாசத்திற்கு அழைப்பது இயேசுவின் இரத்தத்தை அவமாக்கி, பலிபீடத்தைப் பாழாக்குகிறது. பலிபீடம் ஜீவபலி கொடுக்குமிடம். எனவே பலிபீடத்தைப் பழுதுப்பார்ப்போம். இந்தக் கிரையத்தைச் செலுத்தத் தயங்குகிறவன் தயவுசெய்து இவ்வூழியத்தை விட்டு விட்டு செல்வானாக !

 (3) கவலையீனத்தினால் எழுப்புதல் தாமதிக்கிறது.

 அழைப்புக்கிணங்கி நித்திய காரியமாக முன்னுக்கு வரும் ஆத்துமாக்களுடன் மிகக் கொஞ்ச நேரமே செலவழிக்கப்படுகிறது. தன் சிநேகிதர்களைக் கண்டு பேசுவதிலேயே சுவிசேஷகருக்கு ஆனந்தம். பாவிகள் பலிபீடத்தண்டை புலம்பிக்கொண்டிருக்கும்போது, அவர் மனிதரின் புகழ்ச்சியெனும் பானத்தைப் பருகிக்கொண்டு அதில் லயித்துக் கொண்டிருக்கிறார். முன்வந்த பாவிகளோ ஆவிக்குரிய அனாதைகளாக குழப்பத்துடனும், திகைப்புடனும் திரும்பிச் செல்லுகின்றனர்.

(4) பயப்படுவதினால் எழுப்புதல் தாமதிக்கிறது. 

சுவிசேஷகர்களாகிய நாம் இன்றையப் போலி மார்க்கங்களைக்குறித்து வாயை இறுகப் பூட்டிக் கொள்வதைப் பார்த்தால் மனிதர் இரட்சிக்கப்பட ஒன்றுக்கு மேற்பட்ட நாமங்கள் இருக்கின்றன் என்று கூறுவதுபோலிருக்கிறது. ஆனால் “வானத்தின் கீழெங்கும் வேறொரு நாமம் இல்லை” என்ற அப்போஸ்தலர் 4ஆம் அத்தியாசம் 12ஆம் வசனம் இன்னும் வேதத்திலிருக்கிறது. இது மதவெறிப்போல் காணப்படுகிறதோ? பாகாலின் தீர்க்கதரிசிகளை எலியா எள்ளி நகையாடி அவர்களால் கூடாமற்போனதை ஏளனம் செய்து நிந்தித்தான். தேவசித்தத்தை தைரியமாய் செய்யத் தவறுவதைவிட கிதியோனைப்போல் இருட்டிலாவது இறங்கிச்சென்று அந்நிய தேவர்களின் தோப்புகளை வெட்டித் தள்ளுவது நல்லது. இந்த நடுநிசி நேரத்தின் கிறிஸ்தற்ற கொள்கைக் கூட்டங்கள், தேவனை நிந்திக்கும் அழிவுக்குரிய மார்க்கங்கள். ஆகியவை கர்த்தராகிய தேவனைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளன. யாரும் எக்காளத்தை ஊத மாட்டார்களோ? நாம் இப்போதெல்லாம் எதிர்ப்பவர்கள் என அர்த்தங்கொள்ளும் “புராட்டஸ்ட்ன்டுகள்” அல்ல- வெறும் ‘கத்தோலிக்கரல்லாதோர்’ தான். நாம் யாரை அல்லது எதைத்தான் எதிற்கிறோம்? நாம் நினைப்பதில் பாதியளவேனும் அனலுள்ளவர்களாயிருந்தால், இன்று கிறிஸ்தவர்கள் ஜலத்திலும் அக்கினியிலும், இரத்தத்திலும் முழுகியவர்களாயிருப்பார்களே! இங்கிலாந்தின் ஆலயங்கள தனக்கெதிராக மூடப்பட்டதை வெஸ்லி கண்டார். ரோலண்டு ஹில் என்பவர் வெஸ்லியைப்பற்றி இவ்விதம் கூறினார்: “அவரும் அவருடைய பாமரக் கூட்டமும், அரைகுறையாகப் பிரசங்கிக்கும் தோட்டிப் பட்டாளமும் மனிதரின் உள்ளங்களைக் கெடுக்கச் செல்லுகின்றனர்!” எவ்வளவு இழிவான மொழியென்று பாருங்கள்! ஆனால் வெஸ்லி, மனிதருக்கோ பிசாசுகளுக்கோ அஞ்சவில்லை. இங்கிலாந்தின் மேடையில் விட்பீல்டு மட்டமான முறையில் பரிகசிக்கப்பட்டாரென்றால், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் கல்லெறியப்பட்டு ஒவ்வொரு வகையிலும் அவமானப்படுத்தப்பட்டார்களென்றால், பாவமும் பாவிகளும் மாறாதிருக்கும்போது பிரசங்கிகளாகிய நாம் நரகத்தின் கோபத்தை எழுப்பாதிருப்பதெப்படி? நாம் கிராமமாய் ஆனால் குளிர்ந்திருப்பதேன்? பிரமாதமாய் ஆனால் வெறுமையாய் இருப்பதேன்? எழுப்புதலில்லாமல் கலக்கங்கள் எழும்பலாம். ஆனால் வேதத்தையும், சபைச் சரித்திரத்தையும் பார்க்குங்கால் கலகம் எழும்பாமல் எழுப்புதல் உருவாகியதை காணமுடிவதில்லை.

(5)எழுப்புதல் தாமதிக்கிறது…ஏனெனில், ஜெபத்தில் நமக்கு அவசர உணர்வு இல்லை.

 புகழ்பெற்ற பிரசங்கியார் ஒருவர் ஒருநாள் ஒரு மாநாட்டில் நுழைந்தபோது, “நான் என் இருதயத்தில் பெரிய ஜெப பாரத்தோடு இந்த மாநாட்டிற்கு வந்துள்ளேன். இந்த பாரத்தில் என்னோடு பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் கைகளை உயர்த்துங்கள்.நம்மில் யாரும் மாய்மாலம் பண்ண வேண்டாம் “ என்று சொன்னார். அநேகர் கையுயர்த்தினர். ஆனால் அந்த வார இறுதியில் பாதி இரவு ஜெபம் ஒழுங்கு செய்யப்பட்ட போது இந்தப் பெரிய பிரசங்கியார் தூங்கச் சென்றுவிட்டார்! இது எப்படிப்பட்ட மாய்மாலம்! நேர்மை மறைந்து  போயிற்று! எல்லாம் மேலெழுந்தவாரியாகவே உள்ளது! பரிசுத்த ஆவியின் எழுப்புதல் தாமதமாவதற்கு மிகப் பெரிய காரணம் ஆத்தும வேதனையில்லாமையே. பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக நாம் விளம்பரம் செய்கிறோம். எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்! யாக்கோபு 5:17இல் எலியாவைக் குறித்து அவன் “ஜெபம் பண்ணினான்” என்று அழகாக சொல்லப்பட்டுள்ளது! அவ்விதம் சொல்லப்பட்டிருக்காவிட்டால் இந்தப் பழைய ஏற்பாட்டுச் சரிதையைப் படித்துக் கொண்டு அங்கு ஜெபித்ததைக் குறித்து ஒன்றுமே கூறப்படவில்லையென எண்ணி ‘எலியா தீர்க்கதரிசனம் உரைத்தான்’ என்று நாம் சொல்லியிருப்போம்! நாம் இரத்தஞ்சிந்தும் அளவுக்கு இன்னும் ஜெபத்தில் போராடவில்லை. அல்லது மார்ட்டின் லூத்தர் கூறியதுபோல‘ நமது ஆத்துமாவில் வேர்வைகூட காணப்படுகிறதில்லை.’ ‘கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி’ என்ற மனப்பான்மையுடன் நாம் ஜெபிக்கிறோம். நம்மைப் பாதிக்காததை மட்டுமே நாம் கொடுக்கிறோம். அதிக ஆர்வம் கூட நமக்கில்லை. நாம் ஒழுங்கில்லாமலும், உறுதியில்லாமலும், தொடர்ச்சியில்லாமலும் ஜெபிக்கிறோம்.தேவன் ஜெபத்தின் வல்லமைக்கு மட்டுமே விட்டுக்கொடுக்கிறார். ஜெபத்தின் வல்லமையைப் பற்றி நாம் எழுதுவோம். ஆனால் ஜெபத்தில் தரித்திருந்து போராடமாட்டோம். “நாம் போராடுவதில்லை” என்பதே இன்றையச் சபைக்குப் பொருத்தமான தலைப்பாகும்.நாம் நம்முடைய இயற்கையான தாலந்துகளைத் தெரிவிப்போம்; அரசியல் சம்பந்தப்பட்டதாயினும் அல்லது ஆவிக்குரிய காரியமானாலும் நாம் நம்முடைய கருத்துகளைத் தெரிவிப்போம்; ஒரு சகோதரனை அவனுடைய உபதேசத்தில் திருத்துவதற்காக நாம் பிரசங்கிப்போம் அல்லது புத்தகம் எழுதுவோம். ஆனால் நரகத்தின் கோட்டைகளைத் தகர்ப்பது யார்? பிசாசுக்கு ‘இல்லை’ என்று சொல்வது யார்? நல்ல உணவையும், நல்ல நண்பர்களையும், நல்ல ஓய்வையும் வெறுத்து, போராடுகிறவனாகவும், பேய்களை விரட்டி, கட்டுண்டவர்களை விடுதலையாக்கி, நரகத்தின் ஜனத்தொகையைக் குறைக்கிறவனாகவும் யாரை நரகம் காணக்கூடும்? இப்படிப்பட்ட பரிசுத்த, ஆனால் வேதனை நிறைந்த போராட்டத்தின் மூலம் எண்ணற்றோர் விடுவிக்கப்பட்டு இரத்தத்தால் கழுவப்படுவோரே!

(6)முடிவாக, எழுப்புதல் தாமதிக்கிறது… ஏனெனில் ,தேவனுக்குரிய மகிமையை நாம் திருடிக்கொள்ளுகிறோம்.

எழுப்புதல் தாமதிக்கிறதுஏனெனில் ,தேவனுக்குரிய மகிமையை நாம் திருடிக்கொள்ளுகிறோம்இதோ உங்களை அதிசயிக்கச் செய்க்கூடிய சில வார்த்தைகள்: இயேசு, “ நான் மனுஷரால் வரும் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.” “தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார் ( யோ 5:41,44). உலகப் பிரகாரமான புகழ்ச்சியும், மேடைப் பாராட்டலும் ஒழியட்டும்! ‘என்னுடைய வானொலி நிகழ்ச்சி’ ‘என்னுடைய சபை’ ‘என்னுடைய புத்தகங்கள்’ என்று பெருமையடித்துக்கொள்வது ஒழியட்டும்! ‘இன்று நம் நடுவில் இவர் வந்திருப்பது நமக்குப் பெரும் பாக்கியம்’ – என்றெல்லாம் பாராட்டுவதைப் பிரசங்கிமார் அதிகம் விரும்புகிறார்கள். இவர்களில் பலர் பிரசங்கித்து முடித்த பிறகுதான் அவர்களது வண்டவாளம் தெரியும். முன்னுரை அவ்வளவு பிரமாதமாக நாம் கொடாதிருந்தால் யாரும் பொறுமையாகக் கேட்டிருக்கக்கூடமாட்டார்கள். பாவம் தேவன்! இவையெல்லாவற்றிலும் அவருக்குக் கிடைப்பது ஒன்றுமேயில்லை. அப்படியானால், தேவன் தம்முடைய வார்த்தையின்படி நம்மை வாந்திப்பண்ணிப் போடாதது ஏனோ? நாம் முற்றும் தவறிவிட்டோம். அசுத்தமாயிருக்கிறோம். ‘தேவனே எங்களை இந்த ஆபத்திலிருந்தும், ஆழத்திலிருந்தும் தூக்கியெடும். நொறுங்குதல் எனும் ஆசீர்வாதத்தைத் தாரும்! பிரசங்கிகளாகிய எங்கள் நடுவில் முதலாவது நியாயத்தீர்ப்பு துவங்கட்டும்!


கருத்துரையிடுக

0 கருத்துகள்