-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

என்னத்தை பெற்றுக் கொண்டாலும் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளுங்கள்

 


இன்றைய சபையில் அலட்சியம் பண்ணப்பட்ட வேலைக்காரி போன்றது ஜெபக்கூட்டமே. அறிவாற்றல் என்னும் முத்துக்களினால் அலங்கரிக்கப்படாததும், தத்துவம் என்னும் பட்டாடையினால் தரிக்கப்படாததும், மனோதத்துவம் என்னும் மகுடத்தினால் முடிச்சூட்டப்படாததுமே அதற்கு காரணம் அவள் விரும்பப்படுவதும் நேசிக்கப்படுவதும் இல்லை, நேர்மை, தாழ்மை என்னும் எளிய ஆடையை அணிந்திருக்கும் முழங்காலிடத் தயங்குவதில்லை. ஜெபத்திற்கு மனத்திறன் அத்தியாவசியமில்லை. இப்படிக் கூறுவதால் ஜெயம் மனச்சோம்பலின் நண்பன் என்று பொருளல்ல. ஜெபத்திற்கு மெருகேற்றுவது ஆவிக்குரிய தன்மையே.

இக்காலத்தில் பிரசங்கிக்க ஆவிக்குரிய தன்மை அவ்வளவு தேவையில்லை. அதாவது வெறும் வேத அறிவுப் பிரசங்கம் செய்ய ஆவிக்குரிய தன்மை அவ்வளவு தேவையில்லை. நினைவாற்றல், ஆர்வம், தோற்றப் பொலிவு, புத்தக அறிவு, தன்னம்பிக்கை, அடைந்தாயிற்று என்னும் உணர்வு ஆகிய இவை இருந்தாலே போதும், இன்று எங்கும் பிரசங்க பீடம் கிடைத்துவிடும். இவ்விதப் பிரசங்கம் ஒருவேளை மனிதரை மட்டும் அசைக்கும்; ஜெபமோ தேவனை அசைக்கிறது. பிரசங்கம் நேரத்தை மட்டும் கடத்துகிறது. ஜெபமோ நித்தியத்தைப் பாதிக்கிறது. பிரசங்க பீடத்தில் நமது தாலந்துகளை வெளிக்காட்டலாம். ஜெப அறையிலோ அதற்கு இடமேயில்லை.

செத்த சபையினர், செத்த பிரசங்கங்கள், செத்த ஊழியர் இதுவே இன்றைய சோகக்கதை. ஐயோ, எத்தனை பயங்கரம்! -சூரியனுக்கு கீழே நான் கண்ட வினோதமான காரியம் என்னவென்றால், ஆவிக்குரிய வட்டாரங்களிலும் காணப்படும் அனலற்ற பிரசங்கங்களே அனல் என்றால் என்ன என்று எனக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் எது அனலல்ல என்று எனக்கு தெரியும். குறைந்தபட்சம், என் சொந்த ஆத்துமாவில் அனல் இல்லாத வேளையை நான் நன்கறிவேன், அனலின்றி பிரசங்கிப்பது ஜீவனை அழிக்கிறது. அனலற்ற பிரசங்கி மீது மரண வாசனை வீசுகிறது. அபிஷேக அனல் இல்லையானால் வெளிவருவது வறட்டுப் பிரசங்கமே. பிரசங்கிக்கும் நண்பா, என்னத்தைப் பெற்றுக்கொண்டாலும் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்:

பிரசிங்கிப்பது ஓர் ஆவிக்குரிய தொழில், தேவனுக்கும் அடுத்ததான ஆவிக்குரிய பிரசங்கி ஆவிக்குரிய மக்களை உருவாக்குவான். அக்கினி என்பது ஆத்துமக்கதவில் வந்து முட்டிக்கொண்டிருக்கும் புறாவல்ல; அது தேடி பெறவேண்டிய ஒன்று. புத்தக அறிவினாலல்ல, புலம்பல் அனுபவத்தினாலேயே அக்கினியைப் பெற முடியும், ஜெபப் போராட்டத்தில் தேவன் தரும் ஜெயப் பட்டயமே அக்கினி, வெற்றி கிட்டுவது முதலாவது அறையில்தானேயொழிய அம்பலத்திலல்ல. பிரசங்க பீடத்தில் அறிவுக் குண்டுகளை அள்ளி வீசுவதாலோ, நகைச்சுவையை நயம்படப் பரிமாறுவதினாலோ வெற்றி கிட்டாது. பிரசங்கியின் பாதங்கள் பிரசங்க பீடத்தில் ஏறு முன்பே வெற்றி காண வேண்டும். இல்லையேல் அது தோல்வியே. வெடிமருந்து போன்றது அபிஷேகம் பேராயரின் கரங்கள் வைக்கப்படுவதினாலோ, ஏதோ ஒரு சமயம் சிறையில் தள்ளப்படுவதினாலோ அக்கினி தலையில் வந்து அமர்ந்து விடாது. அக்கினி உலுக்கும், உட்செல்லும், உருவாக்கும். அதற்கு இனிமையையும் மென்மையுமாக்கும் தன்மையுமுண்டு. சுத்தியால் அடிப்பது போன்று அழுத்தி வார்த்தைகளாலும் அசைக்க முடியாத இருதயங்களை அக்கினி அபிஷேகம் சுக்குநூறாக நொறுக்கிவிடும்

இன்று எங்கு நோக்கிடினும் ஆலயம் கட்ட ஆர்வம் அனலான பிரசங்கிகள் இல்லையேல் அதமானேன் என்று அழுவதை பலிபீடத்தண்டை கேட்க முடியாதே. நவீன சாதனங்கள் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகள் மாதாமாதம் கடலுக்குள் சென்றும் ஒன்றும் பிடிக்காமல் வெறுமையாகத் திரும்பி வருமானால் அதற்கு நாம் என்ன சாக்குப் போக்கு சொல்லுவோம்? ஆனால் ஆயிரக்கணக்கான வாரந்தோறும், ஆண்டுதோறும் பலிபீடங்கள் வெறுமையாயிருந்தபோதிலும், "என் வசனம் வெறுமையாய் என்னிடத்தில் திரும்பி வராது" என்ற வசனத்தை மட்டும் வெறுமனே எடுத்துக் கூறிக்கொண்டே நம் மலட்டுத் தன்மையை நாம் மறைத்துக் கொள்கிறோம். ஆனால் ஆலயங்களில் பலிபீடத்து அக்கினி அணைந்துவிட்டது. அல்லது அணையப்போகிறது. மன்றாட்டுக் கூட்டம் மடிந்துவிட்டது. அல்லது மடிந்துகொண்டிருக்கிறது. ஜெபத்தில் நமது அக்கறையை கவனித்தால் அது ஆவியில் ஆரம்பித்ததை நாம் மாம்சத்தில் முடிக்க முடியும் என்று தேவனிடத்தில் சொல்லுவது போலிருக்கிறது. ஊழியத்திற்கு நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் ஜெபத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்களென்று கேட்கும் சபை எது? தினமும் குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஜெபத்தில் செலவழிக்காத போதகர்கள், பட்டம் பெற்றிருந்தாலும், பெறாதிருந்தாலும், ஒரு பைசா கூட பெறமாட்டார்கள்.

இயற்கைக்கு மேற்பட்ட அற்புத வல்லமை எங்கோ பிரசங்க பீடத்திலும் பத்திரிகையிலும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாட்டைத் தூக்க மயக்கம் விழுங்கிவிட்டது. "பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக" போராடுவது யார்? அனல் பிரசங்கிகள் எங்கே? மனிதரைத் தேடி அலைந்து பிடிக்க வேண்டிய ஊழியர்கள் இன்று மனிதரின் புகழ் தேடி அலைகிறார்கள், விதை விதைக்க வேண்டியவர்கள் அறிவெனும் முத்துக்களை வீசி வருகின்றனர். நிலத்தில் முத்துக்களை விதைத்தால் என்ன கிடைக்குமோ?

இவ்வித திடனற்ற திமிர்வாதப் பிரசங்கங்கள் வேண்டியதில்லை. இவை எவரையுமே அசைப்பதில்லை. ஏனென்றால், அவை உள்ளறையிலல்ல, கல்லறையில் பிறந்து அனலற்ற ஜெயமற்ற ஆத்துமாவில் வளர்க்கப்பட்டவை நாம் பிரசங்கித்து பின்வாங்கிப் போகலாம். ஆனால் ஜெபித்து, ஜெபித்து ஒரு நாளும் ஜெயமிழக்கமாட்டோம். அருமைச் சகோதரரே. தேவன் நம்மை ஊழியம் செய்ய அழைத்திருந்தால், கட்டாயமாக நாம் ஆவியின் அபிஷேக அனலைப் பெற்றே ஆக வேண்டும் என்று அழுத்திச் சொல்லுகிறேன், பலனற்ற பலிபீடங்களே நமது அனலற்ற அறிவாற்றலின் முத்திரைச் சின்னமாகிவிடாதபடி, நீங்கள் எதைப் பெற்றுக்கொண்டாலும் ஆவியின் அனலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 


கருத்துரையிடுக

1 கருத்துகள்

உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்