![]() |
Judas Kiss the Jesus Christ |
"உடனே, அவன் (யூதாஸ்) இயேசுவினிடத்தில் வந்து; ரபீ, வாழ்க என்று சொல்லி அவரை முத்தஞ்செய்தான்" (மத்தேயு 26: 49)
மூன்றரை ஆண்டுகள் இயேசுவோடு இருந்தான்;
இயேசுவின் போதனைகளைக் கேட்டான்;
அவருடன் பயணஞ் செய்தான்,
அற்புதங்களனைத்தையும் நேரில் கண்டான்,
அவருடன் உண்டான், உறங்கினான்,
ஆனால், இயேசுவின் சத்துருக்களுடன் சிநேகிதம் கொண்டான்.
கிறிஸ்துவைவிட முப்பது வெள்ளிக்காசே அவனுக்கு பெரிதாயிருந்தது.
இயேசுவின் போதனைகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்று எண்ணினான்.
கிறிஸ்துவை மேசியாவாக அவன் ஏற்கவில்லை .
அவன் தன் எஜமானனைத் துறந்தது மட்டுமல்ல,
அவரை விலையும் பேசினான்.
இயேசுவைக் கொலை செய்யத் துடித்த மனிதருடன் கைக்குலுக்கினான். சதித்திட்டமும் உறுதியாயிற்று.
நெஞ்சமோ நெகிழவில்லை, எஜமானன் தன் கால்களைக் கழுவியபோதும்.
அவனது இருதயம் கருங்கல்லைப் போல் கடினமாயிருந்தது.
இயேசுவின் அடிமை ரூபமோ அவனைப் பாதிக்கவில்லை.
காட்டிக்கொடுப்பான் என்ற இயேசுவின் எச்சரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.
மகிமையின் ராஜாவை ஒரு முத்தத்தால் காட்டிக் கொடுக்கத் தீர்மானித்தான்.
சாரோனின் ரோஜாவை ஒரு முத்தத்தால் காட்டிக் கொடுத்தான்!
அன்பிற்கு பார்த்திரர் தான் நம் இரட்சகர், ஆனால் இந்த முத்தமோ ஆணிகளையும் முட்களையும்விட அதிக வேதனையானது.
ரோம போர் வீரர்களைப் போல அவன் இயேசுவை முகத்தில் அறைந்திருக்கலாம், இயேசுவின் முகத்தில் துப்பியிருக்கலாம்;
அது நலமாயிருந்திருக்கும்!
மனித குமாரனை முத்தத்தைக் கொண்டா காட்டிக் கொடுப்பது!
"கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மை நேசிக்கிறேன்" என்று பல்லாயிரம் தடவை கூறுகிறோம்;
"கர்த்தாவே நான் உம்மை சேவிக்கிறேன், நான் உம்மை சேவிக்கிறேன் "என்று மிக இனிமையாகப் பாடுகிறோம்;
ஆனால் அவரைவிட்டுத் தூரமாயுள்ளோம் ,
அவரது இதயத்தினின்று இன்னும் வெகு தொலைவில்,
கர்த்தரின் சித்தத்தைக் குறித்த உணர்வின்றி, அவரது கரத்தில் நம் வாழ்வை அர்ப்பணியாமல் யூதாஸ்காரியோத்தின் முத்தங்களால் நாமும் இயேசுவை முத்தமிடுகிறோம் என்பதையறியாமல், நமது வாழ்வு, நமது குடும்பம், நமது எதிர்காலம் என்று நம் சொந்த உலகில் நாம் மூழ்கியுள்ளோம்!
அவரது மகிமையின்மேல் பசிதாகம் எங்கே? அவரது அரசுக்கான முதன்மையிடம் எங்கே? அவரது சித்தத்துக்கு முக்கியத்துவம் எங்கே?
இயேசு அடிமையின் ரூபமெடுத்தார்,
நம் வாழ்வில் அவர் இன்னும் அடிமைதானா?
நன்றி: தேவனின் இதயக்கதறல்
2 கருத்துகள்
மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக
பதிலளிநீக்குமிகவும் அருமையாக உள்ளது கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக
பதிலளிநீக்குஉங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்