-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வியாதி ஏன் வருகிறது?

 

ஒரு மனிதன் வியாதிப்பட்டால் மருத்துவரிடம் போகிறான்.  மருத்துவர் அவனுக்கு உடனே ஊசி போட்டு அனுப்பவில்லை. அதற்கு மாறாக ஏன் இந்த வியாதி வந்தது எனக் கண்டுபிடித்து, அதற்கு ஏற்றார் போல் மருந்து கொடுத்து இதைச்சாப்பிடாடதே, இதைச் சாப்பிடு எனக் கூறுகிறார். அப்படியே ஒரு விசுவாசி வியாதிப்பட்டால் உடனே மருத்துவரிடம் போகாமல் தேவனிடம் வர வேண்டும்.

“மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். (ரோமர் 8:5)” என்ற வசனத்தின்படி ஆவிக்குரியதைச் சிந்திக்க வேண்டும். முகாந்திரமில்லாமல் தேவன் ஒரு காரியத்தையும் செய்வதில்லை.(எசே 14:23) ஆகவே வியாதியுள்ள விசுவாசி  தேவன் ஏன் எனக்கு அனுமதித்தார் என  ஆவிக்குரியவைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதற்கு மாறாக உடனே மருத்துவரிடம் சென்று  வியாதியை சுகமாக்க விரும்பக்கூடாது  என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன், அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித்தப்பினாலும், வேறே அக்கினி அவர்களைப் பட்சிக்கும்(எசே 15:7) என்றார்.

ஒரு விசுவாசி மருத்துவரிடம் போவது தவறு என்று கூறவில்லை, ஏனென்றால் அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவு எனக் கூறப்பட்டுள்ளது, ஆகவே ஒரு விசுவாசி மருத்துவரிடம் போவதில்லை என்கிறார், ஒரு விசுவாசி மருத்துவரிடம் போகிறார்,அது அவரவர் விசுவாசம் . ஆனால் விசுவாசி வியாதிப்பட்டதும் உடனே தேவனிடம் வந்து தன்னை ஆராந்து பார்க்க வேண்டும், ஏன் எனக்கு இதை அனுமதித்தார் என்று.

1. பாவத்தினால்

மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம் வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்! (1 பேதுரு 4:2) ஒருவேளை பாவத்தினிமித்தம் சரீரத்தில் வியாதி அனுமதிக்கப்படுகையில் தன்னை ஆராய்ந்துப் பார்த்து தனது பாவங்களை அறிக்கையிட்டு அர்ப்பணித்தால் சுகம் பெறலாம்.

2. கீழ்ப்படியாமையினால்

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறேன்” (சங் 119:71). தேவன் வசனங்களைக் கூறியும், அவைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் வியாதிகள் அனுமதிக்கப்படலாம். ஆனால் வியாதி வேளையில் தன்னை ஆராய்ந்துப் பார்த்து கீழ்ப்படியாத வசனங்களுக்குத் தன்னை அர்ப்பணிக்கையில் வியாதியிலிருந்து விடுதலை அடையலாம்.

3. உத்தம குணம் சோதிக்கப்பட

என் தாசனாகிய யோபு, உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை’ (யோபு 1:8) என்று தேவன் யோபுவைக்குறித்து சாட்சிக் கொடுத்தார். ஆனால் அவன் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்டான். தேவனே சாட்சி கொடுத்த யோபுவின் உத்தமகுணம் சோதிக்கப்பட்டது. கடைசி மட்டும் தேவனை முறுமுறுக்கவில்லை. ‘கர்த்தர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன் என்று தன் பொறுமையால் உத்தம குணத்தைக் காத்துக்கொண்டான். யோபு நல்ல ஆரோக்கியம் அடைந்து இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் பெற்றான்.

சில விசுவாசிகள் வியாதி வேளையில் தன்னை ஆராய்ந்துப் பார்த்தேன். வசனங்களுக்குக் கீழ்ப்படிந்துள்ளேன்; தேவனிடம் உத்தமனாயிருந்தும் என் சரீரத்தில் வியாதி இருக்கிறதே நான் என்ன செய்வது என்று அங்கலாய்ப்பது உண்டு. இப்பொழுது நாம் செய்வது என்ன? “தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல் நீதியின் படி தீர்ப்புச் செய்யுங்கள்” என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

அப்படியானால் வியாதியுள்ளதாய்

தோற்றம் உள்ளது. ஆனால்

அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்

என்று நீதி கூறுகிறது.

இப்பொழுது விசுவாசி செய்யவேண்டியது என்ன? “பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக. (யோவே 3:10)” என்ற வசனப்படி சரீரத்தின் வியாதியைப்பாராமல்நான் அவருடைய தழும்புகளால் குணமானேன்என வாயினால் நீதியை அறிக்கையிட வேண்டும்.

ஒரு வேளை வியாதியுள்ள விசுவாசி, என் வியாதி எனக்குத் தெரிகிறது; நான் அவரது தழும்புகளால் குணமாயிருக்கிறேன் என்றால் பொய் சொன்னது போல் தெரிகிறதே என எண்ணக்கூடும். யவீரு மகள் மரித்துப் போனாள். எல்லாரும் அவளைக்குறித்துத் துக்கங் கொண்டாடுகிறதை இயேசு கண்டு: “அழாதேயுங்கள்; அவள் மரித்துப்போகவில்லை நித்திரையாயிருக்கிறாள்என்றார் (லூக் 8:52).

மற்றோர் பார்வைக்கு மரித்தது உண்மைதான்; ஆனால் இயேசுவின் பார்வைக்கு நித்திரையாகத் தெரிகிறது. ஆகவேநித்திரையாய் இருக்கிறாள்என இயேசு அறிக்கையிடுகிறார். லாசரு மரித்துப்போனான். ஆனால் இயேசு, அவன் நித்திரையடைந்துள்ளான்என்று கூறுகிறார்.

அப்படியானால் யவீரு மகள் மரணத்திலும் லாசருவின் மரணத்திலும் இயேசு பொய் சொல்லுகிறாரா? இல்லை. அவர் தன் விசுவாசத்தைக் கூறுகிறார்.

தன் விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

அப்படியானால் மருத்துவரின் பார்வைக்கும் மற்றோரின் பார்வைக்கும் வியாதியுள்ள விசுவாசியின் பார்வைக்கும் வியாதி உள்ளதுபோலவே தோன்றுகிறது. ஆனால் வேத வசனப்படி அவரது தழும்புகளால் குணமாயிருக்கிறோம் இதுவே சத்தியம்.

அப்படியானால் இருக்கும் வியாதியை நம்பப்போகிறோமா? அல்லது இயேசுவின் தழும்புகளால் சுகமானோம் என்னும் வசனத்தை நம்பப்போகிறோமா? இருக்கிற வியாதியைத் தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல் நீதியின்படி (அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்) தீர்ப்புச்செய்வோம்.

“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். (நீதி 18:21) நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப் பண்ணப்படும் (ரோம 10:10)” என்று வேதம் கூறுகிறது. இருதயத்தில் சுகமானேன் என எண்ணி வாயினால் அறிக்கை செய்கையில் இரட்சிப்பு {விடுதலை} உண்டாகும்.

“அவன் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான்’(நீதி 23:7)” நினைவே சரீரத்தின் அவயவங்களைச் செயல்படவைக்கும். உதாரணமாக ஒருவருக்கு ஊறுகாய் பிடிக்கும் என வைத்துக்கொள்வோம். அவர் ஊறுகாயை நினைக்கையிலேயே சரீர அவயவம் செயல்பட்டு நாவில் உமிழ்நீர் சுரக்குகிறது. நமக்கு நெருங்கிய இனத்தான் ஒருவன் விபத்தில் அடிப்பட்டான் என செய்தி கிடைத்ததும் அந்த நினைவு வந்த மாத்திரத்திலேயே சரீர அவயவம் செயல்பட ஆரம்பிக்கிறது, கண்ணீர் தானாகவே வந்துவிடுகிறது. இருதய நோய் உள்ளோருக்கு அதிர்ச்சி தரும் காரியம் கேள்விப்பட்டமாத்திரத்திலேயே சரீர அவயவத்தில் மாற்றம் ஏற்பட்டு இருதயம் சிலருக்குச் செயல்படாது நின்றுவிடுகிறது.

சர்க்கரை வியாதி உள்ளோர் மனதிலே கவலைக்கொள்ள, அவயவத்தில் மாற்றம் ஏற்பட்டு சர்க்கரை சரீரத்தில் கூடுகிறது. சரீரத்தின் அவயங்களின் பல பகுதி பாதிக்கவும் படுகின்றன. ஆகவே வியாதியை எண்ணி எண்ணி வியாதியைப் பெருகச் செய்யாமல் எனக்கு வியாதி இல்லை, நான் இயேசுவின் தழும்புகளால் சுகமாய் இருக்கிறேன் என அறிக்கையிடுங்கள். நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார் இயேசு கிறிஸ்து ஆபிரகாம் தன் மகனை பலியிடப்போகையில் கட்டை, கத்தி, நெருப்பு எல்லாம் இருந்தது. ஆனால் தன் வேலைக்காரரை நோக்கி நானும் பிள்ளையாண்டானும் அவ்விடம் மட்டும்போய், தொழுதுகொண்டு திரும்பி வருவோம் என்றான் (ஆதி 22:5)

சூழ்நிலை பிள்ளையைப் பலிசெலுத்தும் சூழ்நிலை; அதற்கான சாதனங்கள் எல்லாம் தன் கண்களுக்கு முன் இருந்தாலும் திரும்பி வருவோம்என்ற விசுவாச வார்த்தைகளைக் கூறினான். அவன் சூழ்நிலையைப் பார்த்தாலும் சூழ்நிலையை அவன் எண்ணாமல் தேவன் தன்னிடம் சொன்ன வார்த்தைகளை விசுவாசித்தான். எந்த வார்த்தைகளை? தேவன் ஆபிரகாமிடம் நான் அவளை (சாராளை) ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும் அவளை ஆசீர்வதிப்பேன் என்று கூறினார்.ஆகவே சூழ்நிலை மாறாக இருந்த போதிலும், தேவன் தன்னிடம் சொல்லியிருந்த வார்த்தைகளை விசுவாசித்து அறிக்கைப் பண்ணினான். தேவன் அவனது விசுவாச அறிக்கையை கனம்பண்ணி ஆபிரகாமும் ஈசாக்குமாய் திரும்பி வரும்படிச் செய்தார். தோற்றத்தின் படி தீர்ப்பு செய்யாதிருங்கள்;நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள்.தேவன் உங்கள் விசுவாசப்படியே உங்களை ஆரோக்கியம் அடையச்செய்வார்.               

உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்:இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும் (மத்:13:12)”, வசனப்படி எனக்கு வியாதி உள்ளது என அறிக்கையிட்டால் மேலும் பெருகும். வியாதி இல்லை இல்லை என அறிக்கையிட்டால், உங்கள் விசுவாசப்படி இருக்கிற வியாதி இல்லாமல் போகும்.

எலிசா தீர்க்கதரிசி காலத்தில் ஒரு தீர்க்கதரிசி கடன்பட்டு மரித்துப்போனான்.கடன் கொடுத்தவன் அவனது இரண்டு குமாரர்களையும் அடிமையாக்க விரும்பினான் இதை அந்த தீர்க்கதரிசியின் மனைவி எலிசாவிடம் கூறியபோது,உன் வீட்டில் என்ன இருக்கிறது என அவளிடம் கேட்க அவள் ஒரு குடம் எண்ணெய் மாத்திரம் உள்ளது என்று கூறினாள். அப்பொழுது எலிசா தீர்க்கதரிசி ஆலோசனைக் கூறினார்.அந்த ஆலோசனைப்படியே மகன் இருக்கிறது இருக்கிறது எனக் கொடுக்க, குடத்தில் எண்ணெய் இருந்தது. மகன் ஒருவனிடம் இன்னுமொரு பாத்திரம் கொண்டு வா என்றபோது, பாத்திரம் இல்லை என்றான்; எண்ணெய் நின்றுபோயிற்று(2இராஜா:4;1-6). இருக்கிற வியாதியைப் பார்த்து எனக்கு வியாதி இருக்கிறது என்றால் வியாதி இருக்கும். ஆனால் அவருடைய தழும்புகளால் குணமானேன் எனக் கூறி எனக்கு வியாதி இல்லை என அறிக்கையிட்டால் உங்கள் விசுவாசப்படி வியாதி இல்லாமலே போய்விடும்.

நம் தேவனுக்கு நாம் சுகமாய் குடியிருக்க வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் இதை எப்படி நம் வாழ்வில் பெற்றுக்கொள்ள முடியும் என்றால், முதலாவதாக கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் (உபா 33:12) எனவே யார் கர்த்தருக்கு பிரியமாய் இருக்கிறார்களோ அவர்கள் அவரோடு கூட சுகமாய் தங்கியிருக்க முடியும். ஒரு மனிதன் பாவம் செய்வது ஏன் என்றால் தனக்கு அது பிரியமாய் இருப்பதினால் தான். தன் இச்சைகளை நிறைவேற்ற விரும்புவதினால் தேவனுக்கு பிரியமாய் வாழமுடியாமற்போகிறது. எனவே அவரோடு சுகமாய் தங்க வேண்டும் என்றால் கண் இச்சை மாம்ச இச்சை போன்றவைகளின்படி இஷ்டம்போல் வாழ்ந்துவிட்டு சுகமாய் இருக்க விரும்பினால் அது முடியாது. போஜன இச்சையையும் அடக்க வேண்டும்.           

இன்றைக்கு அநேகர் சுகமாய் குடியிருக்க முடியாமற்போனதன் காரணம் போஜனஇச்சையே. ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் (1 கொரி 10:31) இன்றைக்கு எத்தனை பேர் தேவ மகிமைக்காக புசிக்கிறோம். உதாரணமாக ஒரு பிளாஸ்டிக் டம்ளரில் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு தான் பொருளை அடைக்க வேண்டும். அதிக ஆசையினால் மேலும் மேலும் உள்ளே அமுக்கினால் படார் என்று வெடித்துவிடும். நான் வருத்தத்தோடு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், ஒரு கூடுகையில் அன்றைக்கு அநேகம் பேர் வரவில்லை. ஏன் என்று விசாரிக்கும்போது, நீங்கதான் சோறு போடுவோம் என்று சொல்லவில்லையே என்றார்கள்.

இஸ்ரவேல் ஜனங்களில் சிலர் அழிந்தது ஏன் என்றால் தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டார்கள். ஆண்டவர் மன்னா கொடுத்தார் ஆனால் இவர்களோ கறி வேண்டும் என்று கேட்டார்கள். இவர்களுடைய இச்சையோ கறியிலே. எனவே பாளையத்தைச் சுற்றி பகலிலும் பொறுக்குகிறார்கள், இரவிலும் பொறுக்குகிறார்கள். பொறுக்கி, பொறுக்கி, பொறுக்கி, வைத்தார்கள். ஆனால் வேதம் சொல்லுகிறது அவர்கள் மென்று தின்னும்போதே கர்த்தர் அவர்களை அடித்தார். ஏன் அடித்தார்? இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டதினால்.

தினமும் இட்லிதானா, தினமும் தோசை தானா என்று பிள்ளைகள் ஒரு நாளும் கேட்கக்கூடாது. கர்த்தர் தந்ததை ஸ்தோத்திரத்தோடு சாப்பிடு. நான் ஒருநாள் காலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பொங்கல் இருந்தால் நன்றாய் இருக்குமே என எண்ணி என் மனைவியிடம் சொல்லலாமா என யோசித்தேன். பின்னர் இது இச்சையினால் வரவேண்டாம் என விட்டுவிட்டேன். ஆனால் அடுத்த நாள் காலையில் என் மனைவி பொங்கல் செய்திருந்தாள். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. விருப்பமான உணவு என்றாலும் கூட அளவோடுதான் சாப்பிட வேண்டும். நாம் எதற்காக சாப்பிட வேண்டும் என்றால் அவருக்காக வாழ்வதற்காகத் தானே தவிர நம்முடைய இச்சைக்காக அல்ல. இச்சையினால்தான் கேடு. அது மாம்ச இச்சையாக இருக்கலாம் அல்லது போஜன இச்சையாக இருக்கலாம். இஷ்டத்திற்குச் சாப்பிட்டுவிட்டு பின்னர் டாக்டரிடம் ஓடக்கூடாது. எனவே சுகமாய் குடியிருக்க வேண்டும் என்றால் கர்த்தருக்குப் பிரியமாய் இருக்க வேண்டும். கர்த்தருக்குப் பிரியமாய் வாழ வேண்டும் என்றால் மாம்ச இச்சையும் வரக்கூடாது.போஜன இச்சையும் வரக்கூடாது.

இரண்டாவதாக என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள் .லேவி 25:18. இங்கே சுகமாய் குடியிருப்பதற்கு ஆண்டவர் ஒரு கட்டளையையும் கொடுக்கிறார். கேஸ் ட்ரபுள் வராமல் சுகமாய் இருக்கவேண்டும் என்றால் இனிமேல் உருளைக்கிழங்கு சாப்பிடாதீர்கள் என்று டாக்டர் சொன்னால் அப்படியே கேட்பார்கள் ஆனால் சுகமாய் குடியிருக்க வேண்டுமென்றால் என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்  என்று ஆண்டவர் செய்யச் சொன்னதிலேயோ அத்தனை அலட்சியம். சங்கீதக்காரன் சொல்லுகிறான் நான் உபத்திரவப்பட்டது நல்லது, அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொண்டேன் என்று. ஆண்டவர் சொல்லித்தருகிற வசனம் எதுவோ அவைகளின்படி நடக்கக்கடவீர்கள். இந்த மாத்திரையை சாப்பிட வேண்டும் இதை சாப்பிட்டால் சுகமாய் இருப்பீர்கள் என்று டாக்டர் சொல்லுகிறார் என  வைத்துக்கொள்வோம். மாத்திரையை சாப்பிடாமல் டாக்டர் சரியில்லை என்று எப்படிச் சொல்லமுடியும். அதுபோலவே ஆண்டவர் சொல்லுகிற வசனத்தின் படி வாழாமல் ஆண்டவர் சுகம் தரவில்லை என்று சொல்வது உங்கள் தவறு. எனவே சுகமாய் குடியிருக்க அவர் வசனங்களை கைக்கொண்டு அவைகளின்படி நடவுங்கள்.

மூன்றாவதாக அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான் (நீதி 11:15) அப்படியென்றால் சுகத்திற்கும் பிணைப்படுவதற்கும் சம்பந்தம் உண்டு. பிணைப்படுவது என்பது என்னவென்றால். கடனுக்காக பிணைப்படாதே என்று வேதம் சொல்லுகிறது ஆனால் ஒருவர் சந்தர்ப்பம் வரும்போது கடன் வாங்கித்தருகிறார் என்றால் அவர் பிணைப்படுகிறார் என்று அர்த்தம். இது தவறு. கடன் வாங்கினவன் போய்விடுவான். ஆனால் பிணைப்பட்டவன் மாட்டிக்கொள்வான். எனவே யாருக்கும் ஷ்யூரிட்டி போடாதீர்கள். யாரையும் பிரியப்படுத்தாமல் பிணைப்படுவதை வெறுத்துவிடுங்கள்.

தேவ ஜனமே உங்கள் வியாதியைப் பார்த்து பயப்படாதேயுங்கள். தேவன் உங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தை உபயோகப்படுத்தி, வியாதியைப் பார்த்து, வசனங்களைக் கூறி எதிர்த்து நில்லுங்கள்: விசுவாசித்து சுகமானேன் என விசுவாசத்தை அறிக்கைச் செய்யுங்கள். உங்கள் விசுவாச அறிக்கைப் படியே பரிபூரண சுகத்தோடு தேவனுக்கு மகிமையாய் வாழலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்