-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

காலை ஆராதனை - CSI ஆராதனை முறைமைகள்

 

காலை ஜெபம் தொடங்கும்போதுஆராதனை நடத்துகிறவர் பின்வரும் வேத வாக்கியங்களில் இரண்டொருவாக்கியத்தை உரத்த சத்தமாய் வாசித்து, அவ்வாக்கியங்களுக்குப் பின் எழுதியிருக்கிறதைச் சொல்லக்கடவர்.

துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப் பண்ணுவான். எசே.18:27

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்.51:3

என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.சங்.51:9.

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவனே, நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங்.51:17.

உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள், அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். தீங்குக்கு அவர் மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். யோவே.213

நம்முடைய தேவனாகிய ஆண்டவருக்கு விரோதமாக நாம் கலகம் பண்ணி, அவர் நமக்கு முன்பாக வைத்த நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாம் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற் போனோம், ஆனாலும் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. தானி.99-10

கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும். ஏரே.10:24, சங்.6:1

மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது. பரி.மத்.3:2

நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய், தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்; இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல என்பேன். பரி. லூக்.15:18,19.

கர்த்தாவே, ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும். சங்.143:2.

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்குக் கர்த்தர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவா.1:8,9.

பிரியமான சகோதர, சகோதரிகளே நம்முடைய பரம பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அளவில்லாத தயவினாலும், இரக்கத்தினாலும் பாவமன்னிப்பைப் பெறுவதற்காக, நாம் செய்த பலவிதமான பாவங்களையும் அக்கிரமங்களையும் அவர் சந்நிதியில் மாயமாய் மறைத்துக் கொள்ளாமல், பணிவும், தாழ்மையும், துக்கமும், கீழ்ப்படிதலுமுள்ள இருதயத்தோட அறிக்கையிட, வேதவசனம் பற்பல வாக்கியங்களில் நம்மை ஏவுகிறது. நாம் எக்காலத்திலும் தேவனுக்கு முன்பாக நம்முடைய பாவங்களை மனத்தாழ்மையாய் அறிக்கையிட வேண்டுவதுமன்றி, அவருடைய திருக்கரங்களினாலே நாம் பெற்றுக் கொண்ட மேன்மையான உபகாரங்களுக்காக ஸ்தோத்திரஞ் செலுத்தவும், மிகவும் சிறந்த அவருடைய புகழைப் பிரஸ்தாபம் பண்ணவும், அவருடைய மகா பரிசுத்த வசனத்தைக் கேட்கவும், நம்முடைய சரீரத்துக்கும், ஆத்துமாவுக்கும் தேவையானவைகளுக்காக வேண்டிக்கொள்ளவும், நாம் கூடி வந்திருக்கிற தருணத்தில் பாவங்களை அறிக்கையிடுவது நமது விசேஷித்த கடமையாயிருக்கிறது. ஆகையால் இங்கே இருக்கிற நீங்கள் யாவரும் சுத்த இருதயத்தோடும், தாழ்ந்த சத்தத்தோடும் பரம கிருபாசனத்தண்டையில் என்னுடனே கூடச் சேர்ந்து, நான் சொல்லுகிற பிரகாரம் சொல்ல உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

எல்வாரும் முழங்கால்படியிட்டிருக்க ஆராதனை நடத்துகிறவர் சொல்லுகிற பிரகாரம் சபையாரெல்லாரும் சொல்ல வேண்டிய பொதுவான பாவ அறிக்கை.

சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுமுள்ள பிதாவே தப்பிப்போன ஆடுகளைப்போல நாங்கள் உம்முடைய வழிகளைவிட்டு வழுவி அலைந்துபோனோம். எங்கள் இருதயத்தின் யோசனைகளுக்கும், விருப்பங்களுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம். செய்யத்தக்கவைகளைச் செய்யாமல், செய்யத் தகாதவைகளைச் செய்து வந்தோம்; எங்களுக்குச் சுகமேயில்லை. ஆனாலும் ஆண்டவரே, தேவரீர் எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய், மனிதருக்கு அருளிச் செய்த வாக்குத்தத்தங்களின்படியே, நிர்ப்பாக்கியமுள்ள குற்றவாளிகளாகிய எங்களுக்கு இரங்கும். தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள் மேல் பொறுமையாயிரும். பாவத்தினிமித்தம் துக்கப்படுகிற எங்களைச் சீர்ப்படுத்தும். மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி நாங்கள் இனி தேவபக்தியும், நீதியும் தெளிந்த புத்தியும் உள்ளவர்களாய் நடந்துவர, இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்,

ஜனங்கள் இன்னும் முழங்கால்படியிட்டிருக்க, குருவானவர் மாத்திரம் எழுந்து நின்று கூறவேண்டிய பாவ விமோசனம்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அவன் தன் பிதாவாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவன், பாவியின் மரணத்தை விரும்பாமல், திரும்பிப் பிழைப்பதையே விரும்பி, துக்கப்படுகிற தமது ஜனத்துக்குப் பாவ மன்னிப்பையும் கூறி பாவத்தை விட்டுத் பாவத்தினிமித்தம் விமோசனத்தையும், தம்முடைய கட்டளையையும் அறிவிக்க, பணிவிடைக்காரருக்கு அதிகாரத்தையும், அருளிச் செய்திருக்கிறார். மெய்யாய் மனந்திரும்பி, தமது பரிசுத்த சுவிசேஸ்ரீத்தை உண்மையாய் விசுவாசிக்கிற யாவருக்கும் அவர் பாவங்களை மன்னித்து விமோசனஞ் செய்கிறார். ஆகையால் கடைசியிலே அவருடைய நித்திய ஆனந்தத்தில் சேரத்தக்கதாய், இத்தருணத்தில் நாம் செய்கிறது அவருக்குப் பிரியமாயிருக்கவும், இனி உயிரோடிருக்கும் நாளெல்லாம் மாசில்லாமல் பரிசுத்த முள்ளவர்களாய் நடக்கவும், அவர் நமக்கு மெய்யான மனந்திரும்புதலையும், தம்முடைய பரிசுத்த ஆவியையும் அருளிச் செய்ய வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவரை வேண்டிக்கொள்ளக்கடவோம். ஆமென்.

இப்பொழுது ஆராதனை நடத்துகிறவர் முழங்கால்படியிட்டுக் கர்த்தருடைய ஜெபத்தை இனங்கள் கேட்கத்தக்கதாய்ச் சொல்ல வேண்டும். முழங்கால்படியிட்டிருக்கிற ஜனங்களும் இப்பொழுதும் தேவாராதனையில் இந்த ஜெயம் வழங்குகிற எப்பொழுதும் அவரோடேகூட இதைச் சொல்ல வேண்டும்.

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.

பின்னும் அவர் சொல்லவேண்டியது

குரு                     : ஆண்டவரே, எங்கள் உதடுகளைத் திறந்தருளும்.

மறுமொழி   : அப்பொழுது எங்கள் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

குரு                     : தேவனே, எங்களை இரட்சிக்க விரைவாய் வாரும்

மறுமொழி   : ஆண்டவரே, எங்களுக்குச் சகாயம் பண்ணத் தீவிரியும் எல்லோரும்           எழுத்து நிற்க, குருவானவர் சொல்லவேண்டியது:

குரு                : பிதாவுக்கும் குமாரணுக்கும் பரிசுத்த ஆவிக்கும்; மகிமை உண்டாவதாக.

மறுமொழி   : ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான, சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

குரு                     : கர்த்தரைத் துதியுங்கள்

மறுமொழி                   : கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

இப்பொழுது பின்வரும் சங்கீதத்தைச் சொல்ல அல்லது பாட வேண்டும். ஆனாலும், ஈஸ்டர் என்னும் உயிர்த்தெழுந்த திருநாளுக்கு விசேஷித்த கீர்த்தனம் நியமிக்கப்பட்டிருக்கிறதினாணல், அந்நானில் இதை வாசிக்கலாகாது அன்றியும் மாதந்தோறும் 19ஆம் தேதியில் இந்தச் சங்கீதத்தை இங்கே வாசியாமல், சங்கீதங்களை வாசிக்கும் முறையிலே வாசிக்க வேண்டும்.

Venite, Exultemus Domino
சங்கீதம் 95

கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.

துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.

கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.

பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது.. பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.

சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.

நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

அவர் நம்முடைய தேவன், நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.

இன்று அவருடைய சத்தத்தைக்கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.

அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள். நாற்பதுவருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,

என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்; மகிமை உண்டாவதாக.

ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான; சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென்.

பின்பு குறிக்கப்பட்ட சங்கீதங்கள் முறையே வரும். அன்றியும் வருஷமுழுவதும் வாசிக்கப்படுகிற ஒவ்வொரு சங்கீதத்தின் முடிவிலும், மூன்று வாலிபர் கீதம், சகரியாவின் கீதம், கன்னிமரியாளின் கீதம், சிமியோனின் கீதம் (Benedicite, Benedictus, Magnificat, Nunc Dimittis) என்னும் கீதங்களின் முடிவிலும்சொல்லவேண்டியதாவது:

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்; மகிமை உண்டாவதாக.

மறுமொழி : ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான, சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

பழைய ஏற்பாட்டிலிருந்து முதலாம் பாடம் வாசிக்கப்பட வேண்டும். அதற்குபின், “தேவனே உம்மைத் துதிக்கிறோம்" என்னும் கீதத்தை வாசிக்க அல்லது பாட வேண்டும்.

தேவனே, உம்மைத் துதிக்கிறோம் - Te Deum Laudamus

தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உம்மைக் கர்த்தரென்று பிரஸ்தாபப்படுத்துகிறோம்.

நித்திய பிதாவாகிய உம்மை, பூமண்டலமெல்லாம் வணங்கும்.

தேவதூதர் அனைவோரும்; பரமண்டலங்களும், அவைகளிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும்;  

கேரூபீன்களும், சேராபின்களும்; தேவரீரை ஓயாமல் புகழ்ந்து போற்றி,

சேனைகளின் தேவனாகிய கர்த்தரே, நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்.

வானமும் பூமியும் உமது மகிமையுள்ள மகத்துவத்தால்; நிறைந்தன என்று முழங்குகிறார்கள்.

அப்போஸ்தலராகிய மாட்சிமை பொருந்திய கூட்டம்; உம்மைப் போற்றும்.

தீர்க்கத்தரிசிகளாகிய சிறப்புள்ள சங்கம்; உம்மைப் போற்றும்.

இரத்தச் சாட்சிகளாகிய தைரிய சேனை, உம்மைப் போற்றும்.

அளவில்லாத மகத்துவமுள்ள, பிதாவாகிய தேவரீரையும்

வணங்கப்படத்தக்க மெய்யான; உம்முடைய ஒரே குமாரனையும்

தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியையும்,

உலகமெங்குமுள்ள பரிசுத்த சபை: பிரஸ்தாபப்படுத்தும்.

கிறிஸ்துவே, தேவரீர் மகிமையின் ராஜா

நீரே பிதாவினுடைய; நித்திய சுதன்

நீர் மனிதரை இரட்சிக்க ஏற்பட்டபொழுது: கன்னியாஸ்திரீயின் கர்ப்பத்தை அருவருக்கவில்லை.

நீர் மரணத்தின் கொடுமையை வென்று, விசுவாசிகள் எல்லாருக்கும் மோட்ச ராஜ்யத்தைத் திறந்தீர்.

நீர் பிதாவின் மகிமையிலே; தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறீர்.

நீர் எங்களுக்கு நியாயாதிபதியாக, வருவீரென்று விசுவாசிக்கிறோம்.

உமது விலையுயர்ந்த இரத்தத்தால் மீட்டுக்கொண்ட; உமது அடியாருக்கு சகாயஞ் செய்ய உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம்.

எங்களை நித்திய மகிமையிலே; உம்முடைய பரிசுத்தவான்களோடே சேர்த்துக்கொள்ளும்.

கர்த்தாவே, உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்.

அவர்களை ஆண்டுகொண்டு. என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

தினம் தினம், உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்.

எப்பொழுதும் சதா காலங்களிலும், உமது நாமத்தை காத்தருளும்.

ஆண்டவரே, இந்நாளில் பாவஞ்செய்யாதபடி; எங்களைக் காத்தருளும்.

கர்த்தாவே எங்களுக்கு இரங்கும். எங்களுக்கு இரங்கும்.

கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறதால், உமது கிருபை எங்கள் மேல் இருப்பதாக.

கர்த்தாவே, உம்மையே நம்பியிருக்கிறேன், நான்  ஒருக்காலும் கலங்காதபடி செய்யும்.

Benedictus பரி. லூக்கா 1:68-79

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;

தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி

உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,

அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;

ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே

தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,

தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.

நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,

நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.

அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,

நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்; மகிமை உண்டாவதாக.

ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான; சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

அல்லது ந்தச் சங்கீதத்தைச் சொல்லலாம்

Jubiliate Dev. சங்கீதம்: 100

பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன்வாருங்கள்.

கர்த்தரே தேவனென்று அறியுங்கள், நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார். நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்; மகிமை உண்டாவதாக.

ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான; சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

இப்பொழுது அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தைச் சொல்ல வேண்டும்.

வானத்தையும் பூமியையும் படைத்த, சர்வ வல்லமையுளன பிதாவாகிய தேவ விசுவாசிக்கிறேன்.

அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியுபிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார், மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார். பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன், பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவமன்னிப்பும்; சரிரம் உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

கர்த்தர் உங்களோடிருப்பாராக

மறுமொழி : அவர் உமது ஆவியோடும் இருப்பாராக

ஆராதனை நடத்துகிறவர்: ஜெபம் பண்ணக்கடவோம்

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்.

கிறிஸ்துவே, எங்களுக்கு இரங்கும்

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்.

இப்பொழுது ஆராதனை நடத்துகிறவரும் பணிவிடைக்காரரும் ஜனங்களும் உரத்த சத்தமாய்க் கர்த்தருடைய ஜெபத்தைச் சொல்ல வேண்டும்.

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய ராஜ்யம் பரமண்டலத்திலே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; வருவதாக. உம்முடைய சித்தம் செய்யப்படுகிறதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக, அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ஆமென்.

இப்பொழுது குருவானவர் எழுந்து நின்று சொல்ல வேண்டியது

குரு                : கர்த்தாவே, உம்முடைய இரக்கத்தை எங்களுக்குக் காண்பியும்.

மறுமொழி   :உம்முடைய இரட்சிப்பை அருளிச்செய்யும்.

குரு                     :உம்முடைய பணிவிடைக்காரருக்கு நீதியைத் தரிப்பியும்

மறுமொழி   : நீர்தெரிந்துகொண்ட ஜனத்தைச் சந்தோஷப்படுத்தும்

குரு                     : கர்த்தாவே, உம்முடைய ஜனத்தை இரட்சியும்

மறுமொழி   : உம்முடைய சுதந்தரத்தை ஆசீர்வதியும்.

குரு                     : கர்த்தாவே, எங்கள் காலத்தில் சமாதானத்தைக் கட்டளையிடும்

மறுமொழி   : தேவரீரேயல்லாமல் எங்களுக்காக யுத்தஞ்செய்வார் ஒருவருமில்லை.

குரு                     :பராபரனே, எங்கள் இருதயத்தைச் சுத்திகரியும்

மறுமொழி   : உம்முடைய பரிசுத்த ஆவியை எங்களிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாதேயும்.

இப்பொழுது மூன்று சுருக்கஜெபங்கள் வரும். அவைகளில் முதலாவது, அந்தந்த நாளுக்குரிய சுருக்க ஜெபம். இது நற்கருணை முறையிலும் வாசிக்க நியமிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, சமாதானத்துக்காகச் சொல்லுகிற ஜெபம். மூன்றாவது, சன்மார்க்கமாய் நடக்கிறதற்கு வேண்டி கிருபைக்காகச் சொல்லுகிற ஜெபம் எல்லாரும் முழங்கால்படியிட்டிருக்க, இரண்டாம், மூன்றாம் சுருக்க ஜெபங்களை வருஷமுழுவதும் நாள்தோறும் மாறாமல் காலை ஜெபத்தில் பின்வருகிறபடி சொல்லவேண்டும்.

இரண்டாம் சுருக்க ஜெபம்

சமாதானத்துக்காகச் சொல்லியது

சமாதானத்துக்குக் காரணரும், ஏக சிந்தையை விரும்புகிறவருமாகிய தேவனே, உம்மை அறிவதே நித்திய ஜீவன், உம்மைச் சேவிப்பதே மெய்ச்சுயாதீனம். தேவரீரைத் தஞ்சமாகக் கொண்டிருக்கிற உமது அடியாராகிய நாங்கள், எந்த சத்துருக்கள் செய்கிற எல்லாப் பிரயத்தனங்களிலும் நின்று எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் எங்களைக் காப்பாற்றியருளும். ஆமென்.

மூன்றாவது சுருக்க ஜெம்

தேவகிருபைக்காகச் சொல்லியது

சர்வ வல்லமையுள்ள நித்திய தேவனே, இந்நாள் வரையும் எங்களைச் சுகமாய் நடத்தி வந்த எங்கள் பரம பிதாவாகிய கர்த்தாவே, இந்நாளிலும் உமது மிகுந்த வல்லமையால் எங்களைக் காப்பாற்றி, நாங்கள் யாதொரு பாவத்துக்கு உட்படாமலும், எவ்விதமான மோசத்திலும் அகப்படாமலும், உமது பார்வைக்கு நீதியாயிருக்கிறதை எப்பொழுதும் செய்கிறதற்கு, நாங்கள் செய்கிற எல்லாவற்றையும் உம்முடைய ஆளுகையினாலே நடத்தியருள வேண்டுமென்று எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

கீதஸ்தானங்களிலும், பாடும் மற்ற இடங்களிலும், ஒரு கீர்த்தனம் இங்கே வரும்,

குருமாருக்காகவும், சபையாருக்காகவும் சொல்லிய ஜெபம்

மகா அதிசயங்களைச் செய்கிற சர்வ வல்லமையுள்ள நித்திய தேவனே, எங்கள் பேராயர்கள் மேலும், ஆயர்கள் மேலும், சபை ஊழியர்கள் மேலும் அவர்கள் விசாரணைக்கு ஒப்புவிக்கப்பட்ட எல்லாச் சபைகள் மேலும் ஆரோக்கியம் தருகிற உம்முடைய கிருபையுள்ள ஆவியை அனுப்பி, அவர்கள் உமக்கு உத்தம பிரியமானவர்களாய் நடக்கும்படி, உமது ஆசீர்வாதமாகிய பனி அவர்கள் மேல் ஓயாமல் பெய்யச் செய்தருளும். கர்த்தாவே, எங்கள் காரியகர்த்தரும் மத்தியஸ்தருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையுண்டாக இதைக் கட்டளையிட்டருளும். ஆமென்.

பரிசுத்த கிறிசொஸ்தம் என்பவருடைய ஜெபம்

இத்தருணத்தில் ஒருமனப்பட்டு உம்மை நோக்கி எங்கள் பொதுவான விண்ணப்பங்களைச் செய்ய எங்களுக்குக் கிருபை அளித்த சர்வ வல்லமையுள்ள தேவனே, இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே கூடிவரும்பொழுது, அவர்கள் கேட்கிறவைகளை அருளிச்செய்வேன் என்று கர்த்தாவே, உமது அடியாராகிய வாக்கருளியிருக்கிறீரே. உண்டாக, எங்களுக்கு வேண்டிய நன்மைகள் எங்கள் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் இப்பொழுது நிறைவேற்றி, இம்மையிலே உம்முடைய சத்தியத்தை அறிகிற அறிவையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் எங்களுக்குக் கட்டளையிட்டருளும். ஆமென்.

2 கொரி. 13:14

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், நம்மனைவரோடும்கூட எப்போதைக்கும் இருப்பதாக. ஆமென்.

பொதுவான ஸ்தோத்திரம்

சர்வ வல்லமையுள்ள தேவனே, சர்வ ஜீவதயாபர பிதாவே, அபாத்திரரான உமது அடியாராகிய எங்களுக்கும் மற்றெல்லா மனிதருக்கும், தேவரீர் அருளிச்  செய்த பற்பல கிருபைக்காகவும், அன்புள்ள தயவுக்காகவும், நாங்கள் மிகுந்த தாழ்மையோடும், முழு இருதயத்தோடும், உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். தேவரீர் எங்களைச் சிருஷ்டித்ததற்காகவும், காப்பாற்றுகிறதற்காகவும், இம்மைக்குரிய  எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும், உம்மைத் துதிக்கிறோம். விசேஷமாய் எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே, உலகத்தை மீட்டுக் கொண்ட விலைமதியாத உமது அன்புக்காகவும், கிருபையின் யத்தனங்களுக்காகவும்,  மகிமையடைவோம் என்கிற நம்பிக்கைக்காகவும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். நாங்கள் உண்மையாய் நன்றியறிந்த இருதயமுள்ளவர்களாய் இருக்கவும், எங்களை உமது ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு முன்பாகப் பரிசுத்தமும் நீதியுமுள்ளவர்களாய் நடக்கவும், எங்கள் வாக்கினாலே மாத்திரமல்ல, எங்கள் நடக்கையினாலேயும் உம்முடைய புகழைப்   பிரஸ்தாபப்படுத்தவும், தேவரீர் செய்த உபகாரங்களெல்லாவற்றையும் உணர்ந்துகொள்ளும் உணர்வை எங்களுக்கு அருளிச் செய்ய வேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். அவருக்கும் தேவரீருக்கும் பரிசுத்த ஆவிக்கும், எல்லா மேன்மையும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்