-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அமர்ந்த தண்ணீர்! ( Still Water ) - J. சாம் ஜெபத்துரை - Tamil Christian Books

 

இந்தப் புத்தகத்தின் மூலமாய் உங்களைச் சந்திக்க கிருபை செய்த தேவனை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறேன். கிருபையும் சமாதானமும் உங்களில் பெருகுவதாக

நம்முடைய அருமை ஆண்டவர் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களில் ஒன்று 'அமர்ந்த தண்ணீர்' ஆகும். துயரமும், துன்பமும் நிறைந்த இந்த உலகத்தில் அவர் தரும் சமாதானமும் பரிசுத்தாவின் நிறைவும் நமக்கு அமர்ந்த தண்ணீராக இருக்கிறது. கிறிஸ்துவால் நாம் ஆறுதலடைகிறோம் மட்டுமல்ல, ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகத்தோடு முன்னேறிச் செல்லுகிறோம். ஆழமான ஆவிக்குரிய ரகசியங்களை இந்தப் பகுதியில் உங்களுக்கு தொகுத்து கொடுத்திருக்கிறேன். இந்தப் புத்தகம் வெளியிடும்படி மிகவும் உதாரத்துவமாகக் கொடுத்த சகோதரனுக்காகவும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் (Mr & Mrs S.Jaya Pandian B.E.& Family, Trichy) ஊக்கமாய் ஜெபிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அவருடைய அன்பின் காணிக்கையினால் இந்தப் புத்தகம் வெளியிடப்பட ஏதுவாயிற்று.

இந்தப் புத்தகத்தால் வரும் ஒவ்வொரு ஆசீர்வாதங்க ளும் அவர்களையும் அவர்களுடைய அருமைக் குடும்பத்தினரையும் சேருவதாக!

இந்தப் புத்தகத்திற்கு ஓய்வு தர வேண்டாம். குறைந்தது 50 பேருக்காவது இதை வாசிக்கக் கொடுங்கள்

- J. சாம் ஜெபத்துரை

பொருளடக்கம்

1. அமர்ந்த தண்ணீர்!

2. கலங்காதிருங்கள்!

3. மகிழ்ச்சியாயிருங்கள்!

4. உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்கள்!

5. பெலனடைவீர்கள்!

6. பரிசுத்தம்!

7. பரிசுத்தமில்லாமல்!

8.பரிசுத்தத்தை காத்துக்கொள்!

9. நீர் வளம்!

10. கர்த்தரையே!

11. பவுலின் தீர்மானம்!

12 உறுதியான மனம்!

13. உள்ளிந்திரியங்கள்!

14. எழும்பிப் பிரகாசி!

15. உங்களோடு இருப்பேன்!

16.என் ஆத்தும நேசரே!

17. நேசத்தின் உச்சிதங்கள்!

18. வழுவாது காப்பவர் !

19. நிலை நிறுத்துவார்!

அர்ப்பணம்

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்களண்டையில் கொண்டுபோய் விடுகிறார்" (சங்கீதம் 23:1,2).

என் மேய்ப்பரும் மீட்பருமான என் அருமை இயேசுவுக்கே இந்நூல் அர்ப்பணம்!

பதிவிறக்கம் செய்யுங்கள், படியுங்கள் மற்றும் பகிருங்கள்.

புத்தகம் பெயர் :  அமர்ந்த தண்ணீர்! ( STILL WATER )
ஆசிரியர்             :  Dr. J. சாம் ஜெபத்துரை


கருத்துரையிடுக

0 கருத்துகள்