-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மன்னியுங்கள்- Pr.P. அற்புதராஜ் சாமுவேல்

 

வெளிச்சத்தைக் கண்டவன் விளம்புகிறதாவது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

      பிதாவே இவர்களுக்கு மன்னியும்என்று வேண்டிக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு வாழ்த்துக்கள்.

இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமான இந்த வேளையில் யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே’ (எபி 12:14) என்ற வசனத்தின்படி அவரை சந்திக்கத்தக்கதான பரிசுத்தத்தோடு வாழ்ந்து அவரைச் சந்திக்க ஆயத்தமாவோம். பரிசுத்தம் நாடுகிற நாம் யாவரோடும் சமாதானமாயிருக்கவும் நாடவேண்டும்.

இன்றைய ஆவிக்குரிய உலகிலே யாவரோடும் சமாதானமாயிருப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் மீது கசப்பும், வெறுப்பும் இருப்பதையே  காணமுடிகிறது. ‘ மன்னிக்கிறகிறிஸ்துவின்  சுபாவத்தைக் காண முடிகிறதில்லை.  இயேசு, மலைப் பிரசங்கத்தில் தமது சீஷர்களிடம், மனுஷருடைய தப்பிதங்களை (Tresspasses - அதாவது எல்லை மீறின செயல்களை) நீங்கள் மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார் (மத் 6: 14, 15) என்று கூறினார்.

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே’ (எபி 12:14) என்ற வசனத்தின்படி அவரை சந்திக்கத்தக்கதான பரிசுத்தத்தோடு  வாழ்ந்து அவரைச் சந்திக்க ஆயத்தமாவோம். பரிசுத்தம் நாடுகிற நாம் யாவரோடும் சமாதானமாயிருக்கவும் நாடவேண்டும்.

இயேசு கிறிஸ்துவை தேவகுமாரன் என்று அறியாது யூதர்கள் அவரை அடித்து, நொறுக்கி, சிலுவையில் அறைந்தனர். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ, ‘பிதாவே இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்என மன்னிக்கிறவராயிருந்தார்.


இன்று தேவப் பிள்ளைகள் என்றுக் கூறிக்கொள்ளும் இரட்சிக்கப்பட்டவர்கள், இரட்சிக்கப்படாத உறவினர்களோ, கூட வேலைப் பார்ப்போரோ, அருகில் வசிப்போரோ செய்ததப்பிதங்களை (Tresspasses) மன்னிக்க முடியாதவர்களாய் அவர்கள் மீது கசப்பும் வெறுப்பும் உள்ளவர்களாகிவிட்டனர். அதற்கு காரணம் பெருமையே. இப்படி மன்னிக்காத பட்சத்தில் நமது தப்பிதங்களை (Tresspasses) நமது பரமபிதாவும் மன்னிக்க மாட்டாரே.

     அவர் நமது பாவங்களை மன்னியாதபட்சத்தில், இயேசு கிறிஸ்துவின் வருகையில் அவரைச் சந்திக்கவும் முடியாது. பரமபிதா நமது பாவங்களை மன்னியாதிருந்தால் நாம் பாவங்களோடு பரலோகம் போகவும் முடியாதே. அப்படியானால் இயேசுவைச் சந்திப்போம், பரலோகம் போவோம் எனும் நம்பிக்கையே வீணாகுமே. இன்றே மனுஷரின் தப்பிதங்களை மன்னிப்போம், அவர்கள் மீதுள்ள கசப்பை நம்மை விட்டு அகற்றுவோம்

          இயேசு கிறிஸ்துவினிடம் பேதுரு வந்து ஆண்டவரே என் சகோதரன் (இரட்சிக்கப்பட்டவன்) எனக்கு விரோதமாய்க் குற்றம் செய்து வந்தால் நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்? ஏழு தரம் மட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு : ஏழுதரம் மாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத் 18: 21,22)

           இன்று ஆவிக்குரிய உலகில் ஊழியர்களும், விசுவாசிகளும், அடுத்த ஊழியர் அல்லது விசுவாசி செய்த குற்றத்தை (sin) மன்னிக்க முடியாதபடி வாழுகின்றனர். காரணம் தன்னைக்குறித்த பெருமையே.


இயேசு பேதுருவின் இந்த கேள்விக்கு ஓர் உவமையைக் கூறினார் (மத் 18:23-35) ராஜாவிடம் பதினாயிரம் தாலந்து கடன்பட்ட ஓர் ஊழியன், ராஜாவிடம் தாழவிழுந்து கெஞ்சி கேட்டபோது, மனதிரங்கி அந்த ஊழியனின் கடன்களை எல்லாம் மன்னித்து விட்டான். ஆனால் மன்னிப்பைப் பெற்ற அந்த ஊழியனிடம், அவனது உடன் ஊழியர் நூறு வெள்ளிப் பணம் கடன்பட்டிருந்தான். ஆனால் அவன் கடன் பட்டவன் தொண்டையை நெரித்து; பட்ட கடனை எனக்குக் கொடு என்றபோது, கடன்பட்டவன் கெஞ்சிக் கேட்ட போதும் அவனை காவலில் போடுவித்தான். நடந்த காரியம் ராஜாவுக்கு தெரியவந்த போது பதினாயிரம் தாலந்து கடன் மன்னிப்புப் பெற்றவனை அழைத்து, பொல்லாத ஊழியனை நோக்கி; நீ வேண்டிக் கொண்டபோது கடன் முழுவதையும் உனக்கு மன்னித்தேனே; நான் உனக்கு இரங்கினது போல நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ என்று சொல்லி, கோபமடைந்து உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.

        இயேசு உவமையின் அர்த்தத்தை முடிவிலே கூறுவது என்ன? நீங்களும் அவனவன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற் போனால் என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். பிரியமானவர்களே, தேவன் நமக்கு எவ்வளவோ பெரிய பாவங்களை எல்லாம் மன்னித்தாரே. ஆனால் அடுத்த ஊழியன், விசுவாசி செய்த குற்றத்தை மன்னியாமல் போனால் இதுவரை நமக்கு செய்ததையும் மறுபடி நினைத்து நரகத்திலல்லவா தள்ளுவார். ஆகையால் இன்றே  அவிசுவாசிகளின், விசுவாசிகளின், ஊழியர்களின் தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னிப்போம். கசப்புகளை அகற்றுவோம். யாவரோடும் சமாதானமாகி பரிசுத்தராயிருந்து, இயேசுவை வருகையில் சந்திப்போம்.

மன்னிக்க மறுக்கும் மனமே

மறவாதே நீயும்

மன்னிக்கப்பட்டவன் என்று

பத்தாயிரம் பெற்ற நீ

நூறு கூட கொடாமல்

நெருப்பில் வேகாதே அன்று

பெருமையும் சுயநலமும்

பெருங்கடலாய் வந்தாலும்

ஆவியினால் வென்று

தாழ்மையின் தாற்பரியம்

தினமும் தாங்கினால்

தேவனுடன் வாழ்வாய் நன்று

கர்த்தரின் வேலைக்காரன்,

 P.அற்புதராஜ்  சாமுவேல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்