-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மேரி ஜோன்ஸ் வாழ்க்கை வரலாறு மற்றும் வேதாகம சங்கங்கள் உருவான கதை

Mary Jones and her bible

மேரி ஜோன்ஸிம் மற்றும் அவளுடைய பைபிளும்


இளமைக்காலம்

மேரி ஜோன்ஸ் 16 டிசம்பர் 1784ல் வேல்ஸ் நாட்டில் இந்திரிஸ் மலையடி வாரத்திலுள்ள ஒரு சிற்றூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாள்அவளது பெற்றோர் நெசவு வேலை செய்து ஜீவனம் செய்தனர். அவர்கள், அங்குள்ள மெத்தடிஸ்ட் சிற்றாலயத்தில் ஆராதனை செய்து வந்தனர். மேரி ஜோன்ஸ் சிறுவயதாக இருக்கும்போதே ஆலயம் செல்வதில் தவறுவதே இல்லைஅந்த ஆலயம் செல்ல 2 மைல் நடக்கவேண்டும். ஆனாலும் தூரத்தை அவள் பொருட்படுத்துவதே இல்லை. அங்கு போதிக்கப்படும் தேவசெய்திகளை மிகவும் கருத்தாய் ஆழ்ந்து கவனிப்பாள். அந்த சிற்றாலயத்தில் கருப்பு நிற தோலால் பைன்டு செய்யப்பட்ட பெரிய பைபிள் ஒன்று இருக்கும். அதைத் திறந்து அதில் இருந்துதான் பாஸ்டர் செய்தியளிப்பார். ஆராதனை முடிந்த பின் மேரி ஜோன்ஸ் பீடத்தண்டை சென்று அந்த வேதாகமத்தைத் திறந்து பார்ப்பாள்ஆனால் அவளுக்குப் படிப்பறிவு இல்லாததால் அதை வாசிக்கத் தெரியவில்லை. அதைக் குறித்து மிகவும் துக்கப்பட்டாள். அவளுக்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எனினும் இந்த வேதபுத்தகத்தில் எழுதியிருப்பதை தான் கற்றறிய மிகவும் ஆவலுடன் இருந்தாள்.

மேரி ஜோன்ஸ் 9 வயதாக இருக்கும்போது ஒரு ஞாயிற்றுகிழமை சிற்றாலயத்தில் அறிவிப்பு நேரத்தில்இந்த கிராமத்திலேயே ஒரு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட இருக்கிறது. தயவு செய்து, பிள்ளைகள் அதில் சேர்ந்து படிக்கவேண்டும்என்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டது. மேரி ஜோன்ஸ், அறிவிப்பைக் கேட்டதும் மிகவும் பரவசமடைந்தாள். அவளுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவளுடைய நோக்கமெல்லாம் விரைவில் தானே வேதத்தை வாசிக்க வேண்டுமென்பதுதான். அப்பள்ளி மேரி ஜோன்ஸ் வீட்டின் அருகாமையிலே உள்ள ஒரு விவசாயப்பண்ணை வீட்டில் ஆரம்பிக்கப்பட்டதுஆசிரியர் இவான்ஸ்ம், அவருடைய மனைவியும் இணைந்து பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தனர். மேரி ஜோன்ஸ் தனது அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளையெல்லாம் துரிதமாகச் செய்துவிட்டு சரியாகப் பள்ளி நேரத்திற்கு வந்துவிடுவாள். ஆர்வத்தோடு கல்வி கற்றாள். வீட்டிலும் வேலை செய்துவிட்டு பள்ளியிலும் வந்து பிரயாசப்படுவதைக் கண்டு அவளது பெற்றோர் மிகவும் ஆச்சரியப்பட்டனர்.

ஒருநாள் அவளுடைய தாயார் மேரி ஜோன்ஸை நீண்டநேரமாக காணாததால் உரத்த சத்தத்தில் “மேரி, மேரி என்று குரல் எழுப்பினார். எங்கே போயிருப்பாள் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் குரல் கொடுத்தாள். மேரி ஜோன்ஸ் ஏதோ பகற்கனவு காண்பதுபோல இந்திரிஸ் மலையையே நோக்கிக் கொண்டிருந்தவள் தாயின் குரல் கேட்டு வீட்டிற்குள் விரைந்தோடி வந்தாள். “சாரி, அம்மா நான் செய்யவேண்டிய வேலையை மறந்துவிட்டேன். இப்பொழுதே செய்து முடித்துவிடுகிறேன் என்றாள். “சரி, அது இருக்கட்டும். நீ இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தாய்” என்று தாயார் கேட்டாள். “கோழிக்கூட்டில் முட்டைகள் இல்லை. அதனால் ஏதேனும் மறைவிடத்தில் முட்டையிட்டிருக்குமோ என்று தேடினேன். பிறகு இத்திரிஸ் மலையை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது மோரியா மலையில் நடந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. ஆண்டவர் ஆபிரகாமைத் தன் ஒரே மகன் ஈசாக்கை மோரியா மலையில் பலியிடச் சொன்னபோது எந்த தயக்கமும் இல்லாமல் ஈசாக்கை பலிபீடத்தில் கிடத்தி பலியிட ஆயத்தப்பட்ட போது கடைசி நேரத்தில் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடுவதை நிறுத்தச் சொல்லி ஈசாக்கிற்குப் பதிலாக ஆட்டுக்கடாவைக் கொடுத்தாரே என்பதை நினைத்துப் பார்த்தேன் என்றாள். தாயாருக்கு மிகுந்த சந்தோஷம். சிரித்துக்கொண்டேஆபிரகாமின் பிரச்சினையை ஆண்டவர் எவ்வளவு நேர்த்தியாகச் செய்து முடித்து விட்டார் என்று பார்த்தாயா! நீ வேதாகமக் கதையை நினைவு கூர்ந்த படியால் எனக்கு மகிழ்ச்சி என்றாள். “அம்மா, வேதாகமத்திலுள்ள நிகழ்வுகளையெல்லாம் நானே படித்து அறியவேண்டும். அதுதான் என் ஆசை. ஆண்டவர் எனக்கு ஒரு வேதாகமம் தரவேண்டும் என்றாள் மேரி ஜோன்ஸ். “நிச்சயமாக ஆண்டவர் உன் விருப்பத்தை நிறைவேற்றித் தருவார் என்றாள் தாய்.

ஆண்டவர், எனக்கு வேதாகமத்தைத் தருவார்

மேரி, உனக்குச் சொந்தமாகவே ஒரு வேதாகமம் வேண்டும் என்று நீ விரும்புகிறதை நான் பாராட்டுகிறேன். ஆனால் நமது மொழியில் வேதாகமம் கிடைப்பது மிக அரிதான காரியமாகயிருக்கிறது. அதோடு அதை விலை கொடுத்து வாங்குவது நமக்கு எட்டாததாக இருக்கிறது. நம்முடைய அன்றாட வாழ்வே மிகக் கடினமாயிருக்கிறது. மேலும் விற்பனைக்கென்று வேதாகமம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லையேஎன்று தாயார் புலம்ப ஆரம்பித்தாள். “அம்மா. முன்பு எனக்குப் படிக்கத் தெரியாது. இப்பொழுது நான் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைத் தந்தார். அந்த வாய்ப்பைத் தந்தவர் நான் கற்றுக்கொள்ள எனக்கு ஒரு வேதாகமத்தைத் தரமாட்டாரா? என்று தனது ஆழ்ந்த விசுவாசத்தை உறுதியாகச் சொன்னாள் மேரி ஜோன்ஸ். அவளது தாயார் அவளை கெட்டி அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டுமகளேநல்லது. உன் விசுவாசம் பெரியது. ஒவ்வொரு நாளும் இரவு நாம் இருவரும் விசுவாசத்தோடு ஜெபிப்போம். ஆண்டவர் வாய்க்கச் செய்வார்என்றாள் தாயார்.

ஏழ்மையிலும் பணம் சேர்க்க ஆரம்பித்தல்

வீட்டில் ஒரு சிறிய பணப்பெட்டி இருந்தது. அதில் அவள் பணம் சேர்க்க ஆரம்பித்தாள். வீட்டில் வளர்க்கும் கோழி முட்டைகளை விற்று பணம் சேர்க்க ஆரம்பித்தாள். அப்பொழுது அவளுக்கு வயது பதினான்கு. ஒருநாள் பணப்பெட்டிக்குள் உற்சாகமாகப் பணத்தைப் போட்டுக் கொண்டிருந்தாள். “என் மகளே. எவ்வளவு பணம் சேர்த்திருக்கிறாய்?”. “கொஞ்சம் பென்ஸ்சுகள் தான். முட்டை விற்பதோடு சலவைத் தொழிலும் செய்யலாம் என்று நினைக்கிறேன். அதில் கூடுதல் பணம் கிடைக்கும்என்றாள். மற்ற பிள்ளைகளெல்லாம் விளையாடுகிற நேரங்களில் மேரி ஜோன்ஸ் மாத்திரம் ஏதேனும் கிடைக்கிற வேலையைச் செய்து பணம் சம்பாதிப்பாள், “இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு வேதாகமத்தை வாங்கத்தக்க கிரய தொகை சேர்ந்துவிடும்” என்று மகிழ்ச்சியோடு தாயாரிடம் சொன்னாள்.

பணம் சேர்ந்தது

பாஸ்டர். பாஸ்டர். நான் செய்து முடித்துவிட்டேன் என்று மகிழ்ச்சியோடு போய் பாஸ்டரிடம் சொன்னாள். “என்ன செய்து முடித்திருக்கிறாய் என்று கேட்டார் பாஸ்டர், “வேல்ஸ் மொழியில் வேதாகமம் வாங்குவதற்குப் போதிய பணம் சேர்த்துவிட்டேன். இங்கே எனக்கு வேதாகமம் கிடைக்குமா? என்று பாஸ்டரிடம் கேட்டாள். “உனக்குச் சொந்தமாக வாங்கிக் கொள்வதற்கா? இந்த வட்டாரத்தில் எங்கும் விற்பனைக்கான வேதாகமமே இல்லையே!” என்று சொல்லிவிட்டு மேரியின் முகத்தை நோக்கிப் பார்த்தார். அவள் சோர்ந்து போகவே இல்லை. மிகுந்த நம்பிக்கையோடே காணப்பட்டாள். “உனக்குச் சொந்தமாக வாங்க வேண்டுமானால் “பாலா என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். அது இங்கிருந்து 25மைல் தொலைவிலுள்ளது. அங்கு ரெவரெண்ட் தாமஸ் சார்லஸ் என்பவரிடம் வேல்ஸ் மொழியில் விற்பனைக்கு சில வேதாகமங்கள் உண்டு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது மலைப்பிரதேசம். மேடுபள்ளங்களும், கரடுமுரடான பாதை, நீ தனிமையில் அவ்வளவு தூரம் நடந்து போக முடியாது என்றார் பாஸ்டர். எனினும் மேரி வீட்டிற்குத் துரிதமாகத் திரும்பினாள். தன் அம்மாவிடம் “அம்மா, “பாலா' என்ற கிராமத்தில் ரெவ.சார்லஸ் என்பவரிடம் விற்பனைக்கு வேதாகமம்இருக்கிறதாம். “நான் போய் வாங்கிவருகிறேன் என்று சொன்னாள். “அது 25 மைல் தொலைவில் உள்ளது. போக வர 50 மைல், நீ எப்படி நடக்க முடியும்?" என்றாள் தாயார். “அம்மா. நான் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு வேதாகமம் வாங்க பிரயாசப்படுகிறேன். 50 மைல் தூரம் எனக்கு ஒரு பொருட்டல்ல, ஆண்டவர் என்னோடு வருவார் என்றாள். தாயாருக்கு மேரியை தனியாக அனுப்புவது கடினமாயிருப்பினும் மறுக்க மனதில்லை. எனினும் ஆண்டவர் உன்னோடிருப்பார் என்று ஆசீர்வதித்து தாய் அனுப்பி வைத்தாள்.

மேரியின் பாலா பயணம்

மறுநாள் அதிகாலை மேரி ஜோன்ஸ் வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ளும்படி தனது பயணத்தைத் தொடங்கினாள். அந்த கரடுமுரடான கடினமான பாதையில் ஷூ போட்டு நடந்து ஷூவை பாழாக்கிவிடக்கூடாது என்று எண்ணி ஷூ அணியாமலே வெறுங்காலோடேயே நடக்கத் தீர்மானித்து நடந்தாள். ஆனால் பாலா போய் சேரும்போது அவளது கால்பாதங்கள் சிவந்து வீங்கிப் போய் காணப்பட்டது. ஆகவே அவள் வைத்திருந்த ஷூவை எடுத்தாள். ஆனாலும் வேதாகமத்தை வாங்கச் செல்லும்போது கெம்பீரமாக நின்று வாங்க வேண்டும் என்று எண்ணி இப்பொழுது ஷூவை மாட்டிக்கொண்டாள்.

பாலா வந்தடைந்து, ரெவ, தாமஸ் சார்லஸ் அவர்களுடைய வீட்டையும் விசாரித்து கண்டுபிடித்து வீட்டின் கதவைத் தட்டினாள். Rev.சார்லஸ். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தார். மிகவும் களைத்துப்போய், அழுக்கான உடையில் ஒரு வாலிபப் பெண் நிற்பதைக் கண்டார். “ஐயா. மன்னிக்கவேண்டும். இங்கே வருவதற்கு 25மைல் நடந்து வந்திருக்கிறேன். 6 ஆண்டுகளாக சிறுக சிறுகப் பணம்சேர்த்து தங்களிடம் வேல்ஸ் மொழி வேதாகமம் வாங்க வந்திருக்கிறேன். உங்களிடத்தில் விற்பனைக்கு வைத்திருப்பதாக அறிந்து வந்தேன் என்று மிகவும் பணிவோடு கேட்டாள். அவள் களைத்து வந்திருக்கும் தோற்றத்தையும் அவள் கூறுவதையும் கேட்டு பரிவோடு உள்ளே அழைத்து தனது உதவியாளரிடம் அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்று சாப்பிடக் கொடுக்கச் சொன்னார். மேரி ஜோன்சுக்கு மிகுந்த மகிழ்ச்சி. Rev.சார்லஸ் “என்னிடம் ஒரே ஒரு வேதாகமம் தான் இருக்கிறது. ஆனால் அதையும் நான் வேறு ஒருவருக்குத் தருவதாக வாக்களித்துவிட்டேன். அந்த வாடிக்கையாளரை நான் ஏமாற்றிவிடக்கூடாதே" என்றார். இதைக் கேட்ட மாத்திரத்தில் மேரி ஜோன்ஸ் அடக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அழுதுவிட்டாள். Rev.சார்லஸ், “ஏன் அழுகிறாய்?” என்று சொல்லி தனது மனதை மாற்றிக்கொண்டு, எவ்வளவு தூரம் தன்னை வருத்தி நடந்து வேதாகமத்தை வாங்க தியாகம் செய்திருக்கிறாளே. என்று நினைத்துப் பார்த்தார். “மேரி, அழாதே, உன் கண்ணீரைத் துடைத்துக்கொள். என்னிடமிருக்கும் ஒரு வேதாகமத்தை நான் உனக்குத் தருகிறேன். வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ள இவ்வளவு தியாகம் செய்த உன்னை நான் வெறுங்கையாக அனுப்பக்கூடாது என்று சொல்லி புத்தம் புதிய வேல்ஸ் மொழி வேதாகமத்தை கொடுத்தார். இப்பொழுதும் அவள் கண்ணீர் நிற்கவில்லை. இது ஆனந்தக் கண்ணீர். ஆண்டவர் அவளுடைய நீண்ட நாளைய ஜெபத்தைக் கேட்டார். அவளது விருப்பத்தை அருள் செய்தார். அவளது இருகரங்களாலும் அதை பெற்றுக்கொண்டாள். நீண்டநேரம் அந்த வேதாகமத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். பின்னர் அவளது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்தாள். Rev.சார்லஸ். அதிக நேரம் ஆகிவிட்ட படியால் அன்று இரவு அவளை தங்க வைத்து மறுநாள் காலை அவளை மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தார்.

மேரி ஜோன்ஸ் அந்த வேதாகமத்தை நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொண்டு மீண்டும் 25மைல் நடந்து வீட்டிற்குத் திரும்பினாள். வேதாகமத்தோடு திரும்பிவந்த மகளை அவளது தாயார் கட்டி அணைத்து முத்தமிட்டாள். அவளது பள்ளி ஆசிரியர் Mr.இவான்ஸ், அவருடைய மனைவி ஆகிய இருவரும் அவளது விடாமுயற்சியை பாராட்டினார்கள். அயலகத்தாரும் வந்து அந்த வேதாகமத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அந்த நேரங்களிலெல்லாம் தனது இருதயத்தின் ஆழத்திலிருந்து “நன்றி இயேசுவே. நன்றி, Rev.சார்லஸ் என்று மவுனமாகச் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

மேரி ஜோன்ஸ் வேதாகமத்தைத் தான் கற்றுக்கொண்டது மாத்திரமல்ல. மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தாள். அநேகரை ஆண்டவரண்டை வழி நடத்தினாள். மேரி ஜோன்ஸ் உபயோகித்த வேதாகமம் இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேரி ஜோன்ஸின் பைபிள்


மேரி ஜோன்சின் இச்செயல் ஒரு முடிவல்ல. இது ஒரு ஆரம்பமே. இந்த ஒரு வேதாகமத்தைக் கொடுத்த Rev.சார்லஸ் ஒரு சிறிய பெண்ணின் விடாமுயற்சியையும், ஈடுபாட்டையும், அர்ப்பணிப்பையும் எண்ணி ஆச்சரியமடைந்தார். ஏழ்மையின் மத்தியிலும் தொடர்ந்து 6 ஆண்டுகள் பணம் சேர்த்த மனப்பாங்கு, பாலா கிராமத்தைத் தேடி போய் வர 50மைல்கள் மலைப்பிரதேசத்தில் மேடுபள்ளம், கரடுமுரடான பாதையில் தனிமையில் நடந்த மன தைரியம் இவைகளெல்லாம் மறக்க முடியாதவைகள். Rev.சார்லஸ் இச்சம்பவத்தை அநேகரோடு பகிர்ந்து கொண்டார். அதோடு மட்டுமன்றி மேரி ஜோன்சைக் குறித்து இங்கிலாந்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார். அது அநேகருடைய கவனத்தை ஈர்த்தது. அதன் விளைவாக இச்சம்பவம் அநேகருடைய இருதயத்தில் ஆக்கப்பூர்வமான எழுச்சியை உருவாக்கிற்று. எல்லா தேசங்களிலும் அவரவர்கள் தாய்மொழியில் வேதாகமம் கிடைக்க வேண்டும் என்று அநேக தேவமனிதர்கள் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அதன் காரணமாக மேரி ஜோன்ஸ் வாழ்ந்த காலத்திலேயே 1804ம் ஆண்டு பிரிட்டிஷ் மற்றும் அயல் நாடுகளுக்கான வேதாகமச் சங்கம் (British and Foreign Bible Society) முதல்முதலில் Rev.தாமஸ் சார்லஸ் மற்றும் சிலரால் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் வேதாகமச் சங்கங்கள் உருவாயின.

பிரிட்டிஷ் வேதாகமச் சங்கம் ஆரம்பித்த 100 ஆண்டுகளுக்குள்ளாக 200 மில்லியன் வேதாகமங்கள் பல்வேறு மொழிகளில் அச்சிட்டு விநியோகித்திருக்கிறது. 1882ல் “ மேரி ஜோன்ஸின் கதையும் அவளது வேதாகமமும்” என்ற தலைப்பில் (The Story of Mary Jones and her Bible) முதல்முறையாக ரோப்ஸ் மேரி எமில் அம்மையார் ஒரு சிறிய புத்தகமாக எழுதினார்கள். அதை லண்டன், பிரிட்டீஷ் மற்றும் அயல்நாடுகளுக்கான வேதாகமச் சங்கம் அதை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மேரி ஜோன்ஸ் குறித்து அநேக புத்தகங்கள் வெளியாயின.

Memorial to Mary Jones in Llanfihangel-y-pennant

மேரி ஜோன்ஸ் வாழ்ந்த சிற்றூரில் அழிந்து கிடந்த அவர்களது வீட்டின் இடத்தில் அவளுடைய நினைவாக ஒரு நினைவுத்தூண் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அதை மெரியோநெத் ஞாயிறுபள்ளி (The Sunday School of Merioneth) அமைப்பினர் நிறுவியுள்ளனர். அந்த நினைவுத்தூணில் கீழ்க்கண்ட வாசகம் எழுதப்பட்டுள்ளது.

IN MEMORY OF MARY JONES,

WHO IN THE YEAR 1800,

AT THE AGE OF 16 WALKED FROM HERE

TO BALA, TO PROCURE FROM THE

REVD.THOMAS CHARLES, B.A.

A COPY OF THE WELSH BIBLE. THIS

INCIDENT WAS THE OCCASION OF THE

FORMATION OF

THE BRITISH AND FOREIGN BIBLE SOCI-

ETY. ERECTED BY THE SUNDAY SCHOOLS

OF MERIONETH


என்னில் நிலைத்திருங்கள்

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும்

நிலைத்திருந்தால். நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது

உங்களுக்குச் செய்யப்படும்”-(யோவா.15:7).


நமது நாட்டில் “இந்திய வேதாகமச் சங்கம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அத்திட்டங்களில் நீங்கள் உங்களது பங்களிப்பும் ஈடுபாடும் இருக்க வேண்டும் என்று விரும்பினால் போன்: 9047116101ல் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்