![]() |
Pastor.L.Lucas Sekar |
தேவனுக்கே மகிமை
எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாகிய இயேசுகிறிஸ்து (1கொரி.1:27,28)ன்படி பலவீனனும் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனாகிய எனக்கு செய்த பெரிய நன்மைகளை உங்களுக்கு சாட்சியாக அறிவிப்பதில் மிகுந்த மனமகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னையிலுள்ள திருவள்ளூர் மாவட்டம்,அரக்கோணம் அருகே ஓரத்தூர் கிராமத்தில் 1972-ம் ஆண்டு லோகநாதன் குடும்பத்தில் 4-வது மகனாக பிறந்தேன். என் தகப்பனார்பாரம்பரியமிக்க இந்து குடும்பத்தைச் சார்ந்தவர். அதிகமாய்குடிக்கும் குடிப்பழக்கம் உடையவர். சம்பாதிக்கிற பணத்தை குடித்தே செலவழித்த காரணத்தினால் குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. சாப்பிடுவதற்கே எந்த வழியுமில்லாமல் தங்குவதற்குக் கூட வீடு வாசலும் இல்லாமல் மிகவும்கஷ்டப்பட்டோம். இதிலும் என் நீலைமையோ மிகவும் பரிதாபம்.10 வயதில் வந்த கடுமையான போலியோ ஜுரத்தினால் பாதிக்கப்பட்டு வலது கால் சுகத்தை இழந்தேன். என்னைநேசிக்கவோ, பராமரிக்கவோ யாருமின்றி அனாதையாக,அகதியாக தள்ளப்பட்டேன். தெருக்களிலும், திண்ணைகளிலும் படுத்து உறங்கி சினிமா பாடல்களை பாடி என் நாட்கள்,வருடங்களைக் கடத்தினேன். 10ம் வகுப்பு வரை பள்ளிக்குச்சென்று படித்ததே ஒரு வேளை உணவிற்காகத்தான்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்வில் அனைத்து
பாடங்களிலும் மொத்தம் 37 மதிப்பெண்கள் பெற்றேன். எந்தஇடத்திற்கு நான் சென்றாலும் வேலை கிடைக்கவில்லை. யாரும்சூழ்நிலையில் வாழ வழியில்லாமல் சாவை நோக்கிச்சென்றேன். இரயிலில் விழுந்து தற்கொலை செய்து சாகப்போகிற நிலையில் வானத்தைப் பார்த்து, தெய்வம் ஒருவர் இருக்கிறாரா? உண்மை தெய்வம் யார் என்று கதறி அழுதேன்.உண்மை தெய்வமாகிய இயேசு என் சத்தத்தைக் கேட்டார். ஒரு ஆடு மேய்க்கும் சகோதரன் மூலம் இயேசு என்னோடு பேசி,என் வாழ்க்கைக்கு நம்பிக்கை கொடுத்தார். ஆலயத்திற்குசென்று ஞானஸ்நானம் பெற்றேன். போதகர் ஒரு முறை,உனக்கு கொரியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்றார். எழுதவோ, படிக்கவோ தெரியாத நான் எப்படி வேலைசெய்வது என்று திகைத்து அழுதேன்.
இந்த இரவிலே, தேவன் என்னோடு பேசி, என் ஊழியத்தை செய்ய வருவாயா? என்றார். படிப்பறிவு இல்லாதவன் ஊழியம் எப்படிசெய்வது? என்றேன். தேவன் என்னை நோக்கி, நீ என்னை பின்பற்றி வா! நான் உன்ளை தேசத்தின் கடைமுனை மட்டும் கொண்டுபோவேன் என்றார். விசுவாசத்தோடு தேவன் காட்டின இடமாகியசென்னை ஆவடியை அடுத்த சுந்தரசோழபுரம் என்றகிராமத்திற்கு வந்தேன். கள்ளச்சாராயம் காய்ச்சுகிற இடத்தில்,வேப்பமரத்தின் அடியில் சிறு பிள்ளைகளுக்கு பாடல்களைப்பாடி இயேசுவைப் பற்றி அறிவித்தேன்.
நாளடைவில் அதில் சில பெரியவர்களும், கலந்துகொண்டனர். இந்நிலையில் ஊரில் இருந்த துன்மார்க்கர்கள் மிகவும் எதிர்த்தனர். அங்கும் பட்டினி தான். எப்படியோ தேவன்என்னை அனுதினமும் வழி நடத்தி வந்தார். இந்த கடினமான ஊழியத்தின் பாதையில் அதிகமாய் தேவனைத் துதிப்பதும்,ஆராதிப்பதுமே என் பிரதான வேலையாக இருந்தது.தேவன்என்னை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. தரித்திரமே தலைதூக்கிய நிலையில் வாழ்வோ, சாவோ என்றஅந்த நாட்களில் பல புதிய பாடல்களைக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினார். கூரை கொட்டகை ஒன்றை அமைத்து அதில் ஆராதனை நடத்தி வந்தேன். அந்த கொட்டகையை சிலர் எரித்து விட வேண்டுமென்று எனக்கு எதிராக வந்தனர்.அந்த சமயத்தில், பட்டினி ஒரு பக்கம்... ஊழியத்தில் நெருக்கம்ஒரு பக்கம். இயேசுவே என்னால் முடிந்த ஊழியத்தை செய்துவிட்டேன். என் ஜீவனை எடுத்துவிடும் என்று அழுதேன்.அப்போது தேவன் என்னோடு பேசி, பயப்படாதே உன்னைமுத்திரை மோதிரமாக வைப்பேன் (ஆகாய். 2:23) என்றார்.பிறகு, அதே இடத்தில் சுமார் 250 பேர் உட்காரக்கூடியசிறு ஆலயத்தை தேவன் தந்தார்.
பிறகு திருமணமாகி 2002-ம் ஆண்டு மே 8-ம் தேதி அழகான ஆண் பிள்ளையைத் தேவன் எனக்கு கொடுத்தார்.அவனுக்கு பின்னி சார்லஸ் டோனி என்று பேரிட்டேன். மிகவும்அழகான அறிவுள்ளவன். பிள்ளை இரண்டரை வயதில் திடீரன ஜுரம்வந்து குழந்தை இறந்து விட்டது. அந்த நேரத்திலும் தேவன் "என்னதான் ஆனால் என்ன" என்ற பாடல் மூலம்பெலப்படுத்தினார். பிறகு 2006-ம் ஆண்டு மறுபடியும் பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. தேவனை நோக்கி, என் தேவனே! என்னிடத்தில் குறையேதும் உண்டோ? என்று கண்ணீரோடு ஜெபித்தேன். அப்போது தேவன் பயப்படாதே!பரிமள தைலம் குப்பியில் இருக்கிற வரை வாசனை வீசாது.குப்பியையே உடைத்தேன்.உன்னைக் கொண்டு இலட்சங்களை,கோடிகளை ஆசிர்வதிப்பேன் என்றார்.
அதன்பிறகும் சத்துரு அதிகமாய் எங்களோடு யுத்தம் பண்ணினான். ஒரு நாள், ஊழியத்திற்கு செல்வதற்காக என் வாகனத்தை வெளியே எடுக்கும்போது கால் வழுக்கி கீழேவிழுந்தேன். முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு, மூன்று டிஸ்க் விலகி கஷ்டப்பட்டேன். டாக்டர்கள் உங்களால் உட்காரவோ, படுக்கவோ முடியாது என்று சொன்னார்கள்.அப்போதும் தேவன் உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் என்ற வசனத்தைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தி பாடலையும் கொடுத்து, பரிபூரண சுகத்தையும் கொடுத்தார்.
தேவன் எனக்கு கொடுத்த விலையேறப்பெற்ற பாடல்கள் எல்லாமே வேத வசனங்கள் உள்அடங்கியவையே. படிப்பறிவு இல்லாத எனக்கு இந்த பாடல்,ஆராதனை அபிஷேகத்தைக் கொடுத்து அநேக கோடிக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார். எல்லா பாடல்களையும் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். பாடி, தேவனை மகிமைப்படுத்துங்கள். தற்போது கர்த்தர் அடியேனுக்கு ஊழியத்தில் பல புதிய தரிசனங்களையும்,தீட்டங்களையும் கொடுத்திருக்கிறார்.
ஒன்றுமில்லாத என்னை இன்று நிறைவாய் வைத்திருக்கிற தேவாதி தேவனுக்கு நன்றி!
உங்களையும் கர்த்தர் அப்படியே ஆசீர்வதிப்பார்! ஆமென்!
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்