![]() |
Jebam - Aaythamaa Kavithaigal,Ravi Bararth |
ஜெபம்
பிதாவிடம் பேசுவது, குமாரன் மூலமாக பேசுவது
பரிசுத்த ஆவியானவரே நமக்காய் பேசுவது
இதுவே ஜெபம், கிருஸ்தவரின் தவம்
அதிகாலை, காலை, மதியவேளை, மாலை,இரவு, நள்ளிரவு எந்த நேரமும் வளர்த்து கொள்ளலாம்
யெஹோவாவுடன் உறவு
ஜெபத்துக்கு இதுவே முறை என்று சடங்கு எதுவும் கிடையாது
இதுதான் ஜெபம் என்று குறிப்பிட்டு சொல்லவும் முடியாது
முழங்கால் படியிட்டும் ஜெபிக்கலாம்
மெல்ல மெல்ல நடத்தும் ஜெபிக்கலாம்
ஓரிடத்தில் உக்கார்த்தும் ஜெபிக்கலாம்
ஓட்டமாய் ஓடிக்கொண்டும் ஜெபிக்கலாம்
செந்தமிழிலும் ஜெபிக்கலாம், சாதா தமிழிலும் ஜெபிக்கலாம்
மொழியின் புலமையை அவர் பார்ப்பதில்லை
மனதின் புலம்பலை தான் அவர் பார்க்கிறார்
வார்த்தையின் திறமையை அவர் பார்ப்பதில்லை
மனதின் வெறுமையை தான் அவர் பார்க்கிறார்
முதலில் துதித்தல், பின் தரப்பட்டவைகளுக்காக நன்றி
அடுத்து தவறுகளுக்கு அறிக்கை, பின்பு தேவைகளின் கோரிக்கை
இதுவே ஜெபத்தின் பகுதிகள், நல்ல ஜெபத்தின் தகுதிகள்
தேவைகளை எல்லாம் தெரியப்படுத்து, ஸ்தோத்திரதோடு தெரியப்படுத்து
சித்தத்தின் படி தெரியப்படுத்து, அவர் இஷ்டத்தின் படி நடக்கும் அடுத்து
இடைவிடாமல் வேண்டுதல் செய்,
இறைவன் விடை தருவார் என்பது மெய்
விரும்பியபடி விடை வருவதல்ல, ஜெபத்தின் வெற்றி
விடை வருகிறதே அதுதான் வெற்றி
ஜெபத்தின் போது வீண் வார்த்தைகளை அலப்பாதே
வின்னவரை வீண் வார்த்தைகளால் குழப்பாதே
சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்
வேண்டுதல்களை உருக்கமாக சொல்
அனைத்தையும் அறிந்தவரிடன் எதற்க்காக வேண்டுதல்?
சித்தப்படி தான் நடக்கும் என்றால் எதற்க்காக விண்ணப்பம்?
தன் பிள்ளைக்கு பொம்மை பிடிக்கும் தந்தை அறிந்த உண்மை
இருப்பினும் பிள்ளை அதை கேட்க வேண்டும், அதுதான் பிள்ளையின் நல்ல தன்மை
சில ஜெபங்களுக்கு , ஏன் தேவன் தன் செவிகளை மூடி விடுகிறார்?
எத்தனை முறையிட்டும் ஏன் நம்மை விட்டு ஓடி விடுகிறார்?
மனது முழுவதும் கொச்சை, மன்றாட்டு முழுவதும் இச்சை
வேண்டுதலின் பொங்கி வழிகிறது சுயநலம்
பெரும் தூண்டுதல் செய்தாலும் இல்லை பிறர் நலம்
நீ வேதத்தை கேளாமல் உன் செவியினை அடைத்து விட்டாய்
அவர் வேண்டுதலை கேளாமல் கதவினை அடைத்து விட்டார்
முக்கி முக்கி மன்றாடியும் 300 முறை முழங்காலிட்டும்
மோட்சம் போகவில்லை மனவிருப்பம்
மோசம் போனதுதான் மிச்சம்
மனமுடைந்து இருக்கிறாயோ? மறந்து விட்டாயே மேசியா மொழிந்ததை?
மன்னிக்க வேண்டியவரை மன்னித்துவிடு, மன்னித்துவிட்டு முழங்காலிடு
முந்திக்கொண்டு போகும் உன் மடல், மின்னிக்கொண்டு வரும் மறுமொழி
வேண்டுதலுக்கு வேகத்தடை வராதபடி, வீட்டாரிடம் விவேகத்தோடு வாழ அறி
சாத்தானுக்கு சற்றளவும் இடம் தராதபடி, சமாதானமே நல்ஜெபத்தின் அறிகுறி
அகத்தில் அக்கிரமம் ஆட்கொண்டால்,
ஜெபத்தில் ஜீவன் இருக்காது
மனதின் மாசினை நீக்கிவிட்டால் மன்றாட்டை கேட்டிடுவார் மறக்காதே.
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்