தஞ்சை மகா வித்வான் வேதநாயக சாஸ்திரியாரது பௌத்திரரும் சுவிசேஷ கவிப் பிரசங்கியுமாகிய ஸ்ரீமான் B. வேதநாயக சாஸ்திரியார் அவர்கள் முன்னுரை.
“நர சொரூபமானாலும்
நம்மைப்போலல்ல
பர
சொரூபமே
இயேசு,
பரனே
அவன்”.
ஜெகத்து இரக்ஷகரின் திரு அவதாரத்தைப் பற்றிய அருளும் பொருளும், சுவையம் இன்பமும் பொருந்திய அருமையான கீர்த்தனைகளடங்கிய இச் சிறு புஸ்தகம் பக்தி ஞான மார்க்கத்தி வனமந்த இந்திய தமிழ் கிறிஸ்தவ திரளுக்கு மிக்க எழுப்புதலையும், சந்தோஷத்தையும் பிர்மானந்தத்தையும் உண்டு பண்ணுமாதலால் இதனைக் கருத்துடன் வாங்கிப் படித்து, கர்த்தாவைப் போற்றி மகிமைப்படுத்தும் ஆண்மாக்கள் நன்மையடைவார்களென்பதற்குச் சந்தேகமில்லை.
பார்புகழும் இப்பர தசண்டமாகிய இவ்விந்தியாவில் பல சாஸ்திரங்களுடன் சங்கீத சாஸ்திரமும் சிறப்புற்றோங்கி விருத்தியடைந்து வருவதைக் கண்ணுறும் கிறிஸ்தவ நண்பர்கள் தங்கள் குடும்பங்களிலும் சபைகளிலும் இவ்வின்ப கீதங்களை உபயோகித்து வருவாராயின் ஆத்ம இரக்ஷண்யத்திற்கான சமாதானத்தையும் பாரமாத்மாவின் பேரன்பையும் பெற்று, ஆனந்த பரவசமடைந் துய்வார்களென்பதற்கும் ஐயமில்லை.
இவ்வரிய கீர்த்தனைகளை மிக்க சிரத்தையுடன் இயற்றிய ஆக்கியோன் M. S. நடராஜ பாவலர் அவர்களுக்கு நண்பர்கள் அன்பு பாராட்டுவதுடன் அவர் எடுத்துக்கொண்ட சிரமத்தையுணர்ந்து, கால கிரமத்தில் பூரண அறிவும், சிறந்த ஞானமும் நல்வாமும் பெற்றோங்கி, திவ்ய ஊழியனாய் திலங்கி எம்பெருமானுக்குச் சாட்சியாய் விளங்கி நிற்க ஐயனை மன்றாடிக்கொள்ள மறவா திருக்கும் படி அன்புடன் பிரார்த்திக்கின்றனம்.
பாகவதர் வேதநாயக சாஸ்திரியார்
திருவவதாரக்கீர்த்தனை ,M .S.நடராஜ பாகவதரால் தொகுக்கப்பட்டது. பழைய கிறிஸ்தவ பாடல்களை கொண்ட புத்தகமாகும்.இது ஒரு அசல் நூலின் மின்னனு பிரதியாகும்.
![]() |
திருவவதாரக்கீர்த்தனை |
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்