1.ராபர்ட் பாயில்
![]() |
Robert Boyle |
பாயில் விதியைக் கண்டுபிடித்தவர் ராபர்ட் பாயில் இவர் விஞ்ஞானத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
"பரிசுத்த வேதாகமம் தத்துவ ரீதியானது. அது இயற்கை விதிகளுக்கு ஒத்தது" என்றும் அவர் கூறுகிறார்.
2.சர்.ஐசக் நியூட்டன்
"பைபிள் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டது. உலகத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவர்கள். அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளுமோ தேவனால் அனுப்பப்பட்டவர்கள். அவர்களின் சுவிசேஷத்தை உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது "என்று சர் ஐசக் நியூட்டன் கூறினார்.
3.கலிலேயா கலீலி
![]() |
Galilio Galili |
கலிலேயா இவர் இத்தாலி நாட்டை சேர்ந்த கணித,பௌதிக மேதை. கிபி 1564 -1461 இல் வாழ்ந்தவர் பூமி உருண்டை என்றும், பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்பது மட்டுமின்றி இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்றும் கண்டறிந்து கொண்டவர்.
இவர் கூறுவது பின்வருமாறு:- "பைபிளும் இயற்கையும் கடவுளின் சொல்லால் உருவானவை. பைபிள் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டது" என்று கலிலேயா கூறினார்.
4.ஜேம்ஸ் சிம்சன்
![]() |
James Simson |
தலைசிறந்த விஞ்ஞானியான ஜேம்ஸ் சிம்சனை உங்களுடைய மிகப்பெரியதான கண்டுபிடிப்பு எது என்று கேட்டபோது அவர் சொன்னது : "நான் ஒரு பாவி.இயேசு கிறிஸ்து என் இரட்சகர் என்பதையே என் கண்டுபிடிப்புகளில் உயர்ந்ததாகக் கருதுகிறேன்" என்றாராம்.
மேற்கோள்:
கிறிஸ்தவத்தின் ஆதாரச் சான்றுகள்,G.பவுன் பாப்பா,முதற்பதிப்பு:ஆகஸ்ட்,1986,பக்கம்:148 ,149,151.
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்