![]() |
Spiritual Warfare |
1.ஜெபிக்க விடாமல் கிறிஸ்தவர்களைத் தடுப்பதே பிசாசின் பிரதான நோக்கங்களில் ஒன்று. ஜெபமில்லாத வேத ஆராய்ச்சி, ஜெபமில்லாத ஊழியம், ஜெபமில்லாத மார்க்கம் இவையெல்லாம் அவனைச் சற்றும் பாதிக்காது. ஜெபமில்லாத நமது உழைப்பைப் பார்த்துச் சிரிக்கிறான், நமது அறிவைப் பார்த்துக் கேலி பண்ணுகிறான்; நாம் ஜெபிக்க ஆரம்பித்துவிட்டாலோ நடுங்குகிறான்.
- Samuel Chadwick
2.போராட்டம் முடிந்து வெற்றி கிடைத்துவிட்டது என்றெண்ணிச் சற்றுக் கவலையீனமாய் இருக்கும்போதுதான் சத்துருவானவன் எனக்குப் பெரும் கேடு விளைவித்துள்ளான்.
- David Brainerd
3.நமது வாழ்விலும் பணியிலும் தேவன் மகிமையாய் வெற்றி சிறக்கவேண்டும் என்று விரும்புவதும் வாஞ்சிப்பதுமே ஜெபம் என்பது. எவ்வளவுதான் உழைத்தாலும் முடிவான வெற்றியைக் கொண்டுவருவது ஜெபமே.
-G. Campbell Morgan
4.நாத்திகம் அல்லது மூடநம்பிக்கை என்று இரண்டாகத்தான் உலகைப் பிசாசு பிரிக்கிறான்.
- George Herber
5.சாத்தானுக்கும் அற்புதங்கள் உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
- John Calvin
6.பிசாசுக்கு நீங்கள் சேவை செய்தால் அவன் உங்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு நரகமே.
-Billy Sunday
7.தேவன் உங்களை உயர்த்தும் போது பிசாசு உங்களை கீழே தள்ள முடியாது.
-Woodrow Kroll
8.பிசாசுக்கும் அவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் உண்டு.
- Thomas Carlyle
9.பாவத்திற்குத் தந்தை பிசாசு; அதற்கு தோழன் வெட்கம் ; அதற்குச் சம்பளம் மரணம்.
- Thomas Watson
10.எதிரியை அடையாளங் காணுவதே வெற்றிக்கு முதல் படி.
- Corrie Ten Boom
11.கிறிஸ்து எனக்கு வெகு அருகில் இருக்கும் போது தான் சாத்தான் மிக விறுவிறுப்பாய் இருக்கிறான்.
- Robert Murray McCheyne
12.பிசாசுக்கு எதிராய்ப் போர் தொடுத்து அல்ல, தமது அழைப்பிற்கு அடிபணிந்ததின் மூலமாகவே இயேசு அவனைக் கெத்செமனேயிலும் கொல்கொதாவிலும் தோற்கடித்தார். அவனைக் கடிந்துகொள்ள ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் வெற்றி வேந்தராகிய இயேசு தனது மரணத்தின் மூலம் சரித்திரம் காணா வெற்றியடைந்தார்.
- Francis Frangipane
13.உங்களது ஆன்மீகப் பசி அவ்வளவு அதிகமாய் இருப்பதாலும், மன்றாட்டு ஜெபத்தில் உங்கள் ஆர்வம் அவ்வளவு பெரிதாய் இருப்பதாலும் , ஆன்மீகப் போராட்டம் அவ்வளவு கடினமாய் இருப்பதாலும், உடலுக்கடுத்த தேவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உங்களை ஜெபத்திலும் திருமறைத் தியானத்திலும் முழுக்க முழுக்க ஈடுபடுத்திக்கொள்ள உணவைத் தவிர்ப்பதே திருமறைக்கு ஏற்ற உபவாசம்.
- Wesley L. Duewel
14.எங்கே ஓர் ஆலயம் கட்டப்படுகிறதோ அதற்கருகில் பிசாசு ஒரு சிற்றாலயத்தை கட்டிவிடுவான்.
- Martin Luther
15.நம்மில் எவரையும் விடப் பிசாசு தேர்ந்த இறையியலன் என்றிருந்தாலும் அவன் இன்னும் பிசாசாகவே இருக்கிறான்.
- A. W. Tozer
16.நாம் சாத்தானுக்கு நண்பர்களல்ல என்பது வெளிப்படை. இவ்வுலக அரசர்களைப் போலவே அவனும் தனது சொந்தக் குடிமக்களுக்கு எதிராய்ப் போர் தொடுக்க மாட்டான். அவன் நம்மைத் தாக்குகிறான் என்பதே நமது மனதை நங்கூரம் போன்ற நம்பிக்கையால் நிரப்ப வேண்டும்.
- J. C. Ryle
17.ஒரு போதும் பிசாசுடன் வாதாடாதிருங்கள்.
- Rick Warren
18.மீனுக்குப் பிடித்தமான புழுவையே சாத்தான் தனது தூண்டிலில் வைப்பான்.
- Thomas Adams
19.பிசாசிடம் அழகான ஆப்பிள் பழங்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது ஆனால் அவையெல்லாம் உள்ளே புழு வைத்து அழுகியவை. பழத்தைக் கடித்த பின்னர் தான் அது தெரியும்.
- John R. Rice
20.பிசாசை நீங்கள் பிரியப் படுத்திவிட்டால் அவன் நல்லவனாகவே இருப்பான்.
- Thomas Fuller
21.நமது கண்கள் மற்றும் நமது மனது வழியாகவே கவர்ச்சிகளைப் பிசாசு நமக்குள் அனுப்பி வைப்பான்.
-Smith Wigglesworth
22.தங்களது நித்தியத்தைக் குறித்து நினைக்க அவர்கள் சாகுமுன் இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறதென்று மக்களை நம்ப வைப்பதே சாத்தானின் அரும் பெரும் சாதனை.
- John Owen
23.தாழ்மையுள்ளவனே பிசாசுக்குத் தூரமாவான்.
- Jonathan Edwards
24.தன்னை ஆயத்தப்படுத்தாமல் பிரசங்கத்தை மட்டுமே ஆயத்தபடுத்தும் பிரசங்கியைப் பிசாசுக்கு அதிகம் பிடிக்கும்.
- Vance Havner
25.தானியம் விளைவதைப் போன்றே எழுப்புதல் ஒர் அற்புதம். வெல்லுவோம் அல்லது வீழ்வோம் அல்லது வென்று வீழ்த்துவோம் என்று முன் நிற்கும் துணிந்த கட்டைகள் மீது தான் எழுப்புதல் அக்கினி விண்ணிலிருந்து விழும்.தேவனுடைய இராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது ; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
- Charles Finney
26.நீங்கள் வெற்றியை நோக்கிப் போராடவில்லை ; வெற்றியில் நின்று கொண்டு போராடுகிறீர்கள். யுத்தத்தில் ஏற்கனவே வெற்றி கண்டாயிற்று.
- Tony Evans
27.பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் திருச்சபைக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பாதாளத்தின் திறவுகோல்கள் திருச்சபைத் தலைவராம் கிறிஸ்துவிடம் இருக்கின்றன . நரலோகைக் கொள்ளையாடவும் பரலோகை நிரப்பவும் என்னே சாத்தியம்.
- R. Stanley
28.பிசாசை அடையாளங்காட்ட இதோ வந்திருக்கிறேன் ; அவன் ஒரு பொய்யன் !
- T. D. Jakes
29.பிசாசினால் அதிகம் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம் பெறவேண்டுமென்பதே எனது தணியா தாகம்.
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்