-->

Ticker

Header Ads Widget

ஆவிக்குரிய போராட்ட பொன்மொழிகள் பாகம் -1

 

 Spiritual Warfare 


1.அண்ட சராசரத்திலும் நடுநிலையானது எதுவும் கிடையாது; ஒவ்வொரு சதுர அங்குலத்தையும், ஒவ்வொரு அரை நொடியையும் கடவுள் சொந்தங்கொண்டாடுகிறார், சாத்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான். 

                                                                                                     - C.S.Lewis

2.நீங்கள் எத்தனை ஆலயங்கள் கட்டுகிறீர்கள் என்பதைப் பற்றி பிசாசுக்குக் கவலையில்லை; அவற்றை வெதுவெதுப்பான பிரசங்கிமாராலும் மக்களாலும் நிரப்பி விட்டால் அவனுக்கு போதும்.

                                                                                                - Charles Spurgeon


3.தேவனுக்கு நம்மால் பயன் கூடக் கூட,நம்மீது சத்துருவின் தாக்குதலும் கூடும்.

                                                                                                   - Zac Poonen


4.சாத்தான் உங்களைக் கெடுக்க முடியாவிடில், எப்பொழுதும் குடுகுடுவென்று ஓட வைப்பான்.

                                                                                                 -  Adrian Rogers


5.தேவனுடைய பிள்ளைகளிடம் பாவம் இருக்கிறது என்பதால் அல்ல, அவர்களிடம் கிருபை இருக்கிறது என்பதாலேயே சாத்தான் அவர்களைச் சோதிக்கிறான். அவர்களிடம் கிருபை இல்லையேல் பிசாசு அவர்களைத் தொந்தரவு செய்ய மாட்டான். சோதிக்கப்படுவது கடினமானது எனினும், ஏன் சோதிக்கப்படும் என்றறிவது ஆறுதல்.                     

                                                                                               -Thomas Watson


6.திருமறையைத் தவறாய் வியாக்கியானிப்பது  நமதாண்டவரின் சுவிசேஷத்தை மனிதனது சுவிசேஷமாக மாற்றிவிடுகிறது; இன்னும் மோசமாக அதைப் பிசாசின் செய்தியாக்கிவிடுகிறது.

                                                                                                        - Jerome


7.தங்களது மனசாட்சி தங்களைக் குற்றப்படுத்தும்போது அதைக் கவனித்து நடக்க விசுவாசிகள் இணங்கும் அதேவேளையில் சத்துருவின் குற்றச்சாட்டையும் அடையாளங்காண அவர்களுக்கு தெரிய வேண்டும்.

                                                                                              -Watchman Nee

8.நமது பாதையில் வைக்கோலைப் பிசாசு தூவி அதை ஒரு மலைன்று நம்மை நம்பச் செய்கிறான்; ஆனால் பிசாசின் மலைகளெல்லாம் புகை மண்டலம் தான்; அவற்றை நெருங்கிக் கடக்க வரும்போது அங்கு ஒன்றுமே இருக்காது.

                                                                                                          - D. L. Moody


9.விசுவாசிகளும், அதிலும் குறிப்பாக ஊழியரும், ஜெபத்தை அசட்டைபண்ணப் பிசாசானவன் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்வான். பிரசங்கம் எவ்வளவு கவர்ச்சியாயிருந்தாலும், ஆராதனை எவ்வளவு அலங்காரமாயிருந்தாலும், ஆயரது வீடு சந்திப்பு ஊழியம் எவ்வளவு கிரமமாயிருந்தாலும், ஜெபம் அசட்டை பண்ணப்படுமானால் அவனது அரசுக்கு ஆபத்தில்லை.

                                                                                                          -Andrew Murray


10.ஜெப ஆவிக்கு எதிராய்ப் போராட ஆகாயத்து அதிகாரப் பிரபு தனது சேனைகளையெல்லாம் அனுப்பி வைக்கிறான்.

                                                                                                      -Andrew Bonar


11.நான் பிசாசுக்குப் பயப்படுவதில்லை. எனக்குத் தெரியாத மல்யுத்தம் அவனுக்குத் தெரியுமாதலால் அவன் என்னைத் சமாளிக்க முடியும். ஆனாலும் நான் யாரோடு இணைந்திருக்கிறேனோ அவரை அவன் மேற்கொள்ள முடியாது. அவரது சிந்தையும் தன்மையும்  என்னில் இருப்பதால் என்னை அவன் மேற்கொள்வதும் சுலபமல்ல

                                                                                                      -A. W. Tozer


12.படைக்கப்பட்டவற்றைத் தேவனது வார்த்தை அன்பினால் நியாயந்தீர்க்கிறது ;  பிசாசு சொல்லுவதோ அவர்களைப் பொறாமையினாலும் வெறுப்பினாலும் நியாயந்தீர்க்கிறது.

                                                                                               - Dietrich Bonhoeffer


13.நடத்தைக் கேடு அல்லது ஊழல் போன்றவற்றைவிடப் பிசாசின் தூண்டுதலால் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதாலேயே அநேகச் சபைகள் சின்னாபின்னமாகின்ன.அடுத்தவர் மீது குற்றம் கண்டுபிடிப்பதே ஒர் ஊழியம் என்று உயர்த்தப்படுமளவு சமுதாயம் சீர்குலைந்திருக்கிறது.

                                                                                                  -Francis Frangipane


14.சிறிய துவாரங்கள் இருந்தாலே அவற்றின் வழியே கொடிய காற்றுகள் நுழைந்துவிடுவதுபோல, கவனியாது விட்ட சில பகுதிகளின் வழியாகவே பிசாசு ஆக்கிரமித்து விடுவான். இவையெல்லாம் சிறிய காரியங்கள் தானே என்று நாம் நினைப்பது தான் பெரிய சோதனைகளில் விழ வழிவகுக்கும்.

                                                                                                - John Wesley

15.பிசாசு சிறிய குற்றத்தைக் குணமாக்குவது போல் காட்டிப் பெரிய காயம் ஏற்படுத்திவிடுவான்.

                                  ‌                                                              - C. S. Lewis


16.சோம்பேறியின் கைகளைப் பிசாசு எப்படியாவது குறும்பும் சேட்டையும் பண்ணச் செய்துவிடுவான்.

                                                                                               -Issac Watts


17.இரட்சிப்பின் கனியாக அல்லது விளைவாகவே நற்குணம் என்பதைப் பிசாசு மாற்றி நற்குணத்தினாலேயே இரட்சிப்பு எனும் சுவிசேஷத்தைப் பரப்பி வருகிறான்.               

                                                                                                 -A. W. Pink


18.பிற கிறிஸ்தவர்களோடுள்ள சகவாசத்தை விசுவாசியொருவன் துண்டித்துக்கொள்ளும் போது பிசாசுக்குப் புன்முறுவல் வருகிறது. விசுவாசியாக அவன் திருமறையைத் தியானிப்பதை நிறுத்தும்போது பிசாசுக்கு ஒரே சிரிப்பு. அவன் ஜெபிப்பதை நிறுத்தும்போது பிசாசு ஆனந்தத்தால் ஆர்ப்பரிக்கிறான். 

                                                                                                    - Corrie Ten Boom


19.கஞ்சத்தனம் பண்ணுகிறவனின் அலமாரியே பிசாசுக்குப் புகலிடம்.

                                                                                                       - Thomas Fuller


20.இல்லத்தைக் காத்துக்கொள்ள தெய்வ பயம் இருக்கும்போது சத்துருவானவன் உள்ளே நுழைய வழியே இல்லை.

                                                                                                       -Francis of Assissi


21.மனிதரைப் பாவத்திலேயே தூங்க வைப்பதுதான் பிசாசுக்குக் கைவந்த கலை என்பது அநேகருக்குத் தெரிவதில்லை. தூங்கும் பாவியை நாம் எழுப்பிவிட்டால் நமக்கு எதிராய்ப் பிசாசு எவ்விதம் பல்லைக் கடிப்பான் தெரியுமா ?

                                                                                                     - Catherine Booth

கருத்துரையிடுக

0 கருத்துகள்