-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நான் ஒரு மிஷனரி தானா ?

 நான் ஒரு மிஷனரி தானா?


I Am a Missionary ? Tamil Christian Poets



தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் ஒரு மிஷனரி.

 நானும் தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன்.

 நான் ஒரு மிஷனரி.


ஆனால் , புதிய ஏற்பாட்டு மிஷனரிகள் பவுலையும் பேதுருவையும் பார்க்கும்போது , எனக்கு புது சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன. ஆதிகால மிஷனரிகள் வில்லியம் கேரி, டேவிட் பிரெய்னார்ட் போன்றோரின் வாழ்வை நோக்குங்கால், என் சந்தேகங்கள் உறுதியாயின.


 நான் ஒரு மிஷனரி அல்ல.



William Carey -The Father of Missionaries



வில்லியம் கேரி ஒரு மிஷனரி என்றால், 

நான் ஒரு மிஷனரி அல்ல.

வில்லியம் கேரி, இந்தியா வந்தார், திரும்பி போகவேயில்லை.ஆனால், நான் அடிக்கடி என் சொந்த ஊருக்குச் செல்கிறேன்.அவர் தன் மகனை இழந்தார், ஒத்துழைக்காத தன் மனைவியுடன் சமாளித்தார்.



David Brainard


டேவிட் பிரெய்னார்டு ஒரு மிஷனரி என்றால், 

நான் ஒரு மிஷனரி அல்ல.

 டேவிட் பிரெய்னார்டு மரிக்கவும் தன்னை அர்ப்பணித்திருந்தார். கிறிஸ்துவுக்காக ஒர் பழங்குடி இனத்தை ஆதாயப்படுத்தினார். மிக இளம் வயதிலேயே தனது அற்புத இரட்சகருக்காக மரித்தார்.



Hudson Taylor 


ஹட்சன் டெய்லர் ஒரு மிஷனரி என்றால், 

நான் ஒரு மிஷனரி அல்ல.

 அவருக்குச் சீனாவைக் குறித்த ஆத்தும பாரம் இருந்தது.

 சீனாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மிஷனரிகளை அனுப்பினார். தனதருமைக் குழந்தைகளையும் மனைவியையும் இழந்தார். அவர்களை அங்கேயே அடக்கம் செய்தார்.



Adoniram Judson



அதோனிராம் ஜட்சன் ஒரு மிஷனரி என்றால், நான் ஒரு மிஷனரி அல்ல.

 அதோனிராம் ஜட்சன் பணிக்களத்திலேயே தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தார். பல தடவைகள் சிறை சென்றார்.


நான் சுலபமும் சொகுசுமான வாழ்க்கை வாழ்கிறேன். நான் விரும்பும் போதெல்லாம் வீடு செல்கிறேன். எனக்கு ஒழுங்கான ஊதியம் உண்டு. நான் சிறையில் அடைக்கப்படவில்லை. நான் அடிக்கப்படவில்லை , என் உடல் நலனில் கவனமாயிருக்கிறேன். என் எதிர்காலத்தைக் குறித்துத் திட்டமிடுகிறேன்.  நான் நெடுநாள் வாழ விரும்புகிறேன்.


நான் ஆண்டவரிடம் கேட்டேன்.


"நான் ஒரு மிஷனரி தானா ?"


"கர்த்தாவே, நான் அந்த ஆவிக்குரிய பெரியவர்களைப்  போன்றவனல்ல,


 உண்மையாகவே அப்படி ஒருவனாயிருக்க  விழைகிறேன்.

 பலவீனங்கள், அர்ப்பணிப்புக்  குறைவு இருப்பினும் நீர் என்னை பயன்படுத்துவீரா ?"


மெல்லிய அமர்ந்த குரலில் அவர் சொன்னதைக் கேட்டேன், "மகனே, நீ செய்ய இயலாதவற்றைச் நான் செய்யக் கூறவில்லை, உன்னால் இயன்றவற்றைச் செய்யவே கேட்கிறேன்; எனக்குக் கீழ்ப்படிந்து என்னைப் பின்பற்றி வா ! "


எனக்குப் பலவீனங்கள் குறைகள் பல இருப்பினும் நான் அவரால் அழைக்கப்பட்ட ஒரு மிஷனரி.


"பலியைப் பார்க்கிலும் கீழ்படிதலே உத்தமம்" ( 2 சாமுவேல் 15 :2)




மேற்கோள்:
தேவனின் இதயக்கதறல், Bro.D.ஜேசன், வெளியிடுவோர்: ஆசிர்வாத இளைஞர் இயக்கம், முதற்பதிப்பு: மே 2017, பக்கம் 60 - 61.

  

கருத்துரையிடுக

0 கருத்துகள்