இந்தப் பெயரும் வேதநாயக சாஸ்திரியார் புதிதாகத் தொகுத்ததே. ஞானம் 10 பதம் 10 கீர்த்தனை என்ற மூன்று சொற்களும் ஒருங்கே சேர்த்து ஆக்கப்பட்டது. கீர்த்தனை என்றால் சங்கீத சாஸ்திரத்தில் பல்லவி,அனுபல்லவி,சரணம் முதலியவைகள் அடங்கிய பூரண அம்சமாகும்.
இந்த ஞானப் பதக் கீர்த்தனைகள் ஒரே காலத்தில் இயற்றப்பட்டவையல்ல. சங்கீதங்கள் பொதுவாக வேதபுத்தகத்தைப்போல பற்பல காலங்களிலும் நெருக்கங்களிலும்,துன்பங்களில் இருந்தும், உபத்திரவங்களிலிருந்தும் உண்டானஅனுபவத்திலிருந்து எழுதப்பட்டவை. நமக்கு முன்னிருந்தவர்களின்
சோதனைகளையும், விசுவாசத்தையும் பார்த்து மேகம் போன்ற திரளான சாட்சிகளால் சூழப்பட்டிருக்கிறோம் என்று உணர்ந்து நமது பற்பல சமயங்களிலும், வாழ்விலும், தாழ்விலும், சுக, துக்க சம்பவங்களிலும் இவைகளை உபயோகித்து தேவனோடு ஐக்கியப்பட்டு அவர் கிருபைபெற்று அவரை மகிமைப்படுத்தப் பிரயோஜனமானது.
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்